அமைதிப்படையில் மொழி பெயர்ப்பாளராக எங்களது
தோழர் தர்மராஜ் சென்றது பற்றி நேற்று எழுதியிருந்தேன்.
அமைதிப்படையில் சென்ற இரண்டு ராணுவ வீரர்கள்
தங்களின் ஓய்வுக்குப் பின்பு எல்.ஐ.சி யில் சார் பணியாளர்களாக
பனி நியமனம் செய்யப்பட்டார்கள். அவர்களோடு பல முறை
அவர்கள் அனுபவம் பற்றி நீண்ட காலம் பேசியதன்
தொகுப்பாக பின் வரும் விஷயங்களை எழுதுகின்றேன்.
பொதுவாக நாம் அறிந்த தகவல்களும் உண்டு, மக்கள் முன்
.மறைக்கப்பட்ட தகவல்களும் உண்டு.
தோழர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ
தமிழ் மக்கள் அமைதிப்படையை துவக்கத்தில் உற்சாகமாகவே
வரவேற்றார்கள். விடுதலைப் புலிகளும் கூட.
புலேந்திரன் , குமரப்பா ஆகிய போராளிகளின் மரணமும்
திலீபனின் உண்ணா விரதமும் அமைதிப்படை மீது
சந்தேகத்தை உருவாக்கியது.
வரதராஜப் பெருமாளை முதல்வராக்க காண்பித்த ஆர்வம்
புலிகளை துப்பாக்கி தூக்க வைத்தது.
பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடிப்போம்
என ராணுவ அதிகாரிகள் பேசியது புலிகளின் காதுகளுக்கு
சென்றது. ஆகவே அவர்கள் உக்கிரமானார்கள்.
இந்திய அமைதிப்படையின் பல பிரிவினர்களுக்கு இடையே
ஒருங்கிணைப்பே கிடையாது.
கூட சென்ற இலங்கை வீரர்களும் வரதராஜப் பெருமாள்
ஆட்களும் பயந்தாங்கொள்ளிகள்.
அதிகமான இந்திய வீரர்கள் இறந்தது கண்ணி வெடியில்தான்
அதனை கண்டு பிடிக்கும் சரியான கருவிகள் நம்மிடம்
கிடையாது.
இந்திய வீரர்கள் இறந்து போக இறந்து போக உயர் அதிகாரிகள்
கோபமாகி என்ன வேண்டுமானால் செய்து கொள்ள அனுமதி
கிடைத்தார்கள்.
விடுதலைப் புலிகள் கிடைக்காத போது கண்ணில் கண்டவர்களை
எல்லாம் கொன்றார்கள். பெண்கள் என்றால் பாலியல் கொடுமை.
தமிழ் ராணுவ வீரர்கள் ஒதுங்கிய போது வட இந்திய
வீரர்கள் அவர்களை பெட்டை என்று கேலி பேசினார்கள்.
கள அனுபவம் இல்லாதது, ஒருங்கிணைப்பின்மை,
போதுமான ஆயுதங்கள் இன்மை, வழி காட்ட ஆட்கள்
இல்லாதது, வட கிழக்கு பகுதிகளின் அடர்ந்த காடுகள்
இவையெல்லாம்தான் அமைதிப்படையின் தோல்விக்கு
காரணம்.
தோல்வியின் விரக்தியில் அப்பாவிகளை தாக்க
அதற்காகவும் புலிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
அம்புகள் போட்ட ஆட்டமே எய்தவனின் உயிரைப்
பறித்தது.
அம்புகள் போட்ட ஆட்டமே எய்தவனின் உயிரைப்
ReplyDeleteபறித்தது
நல்ல பதிவு.
வேதனையாக இருக்கிறது.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
நல்ல பதிவு..சரியான தருணத்தில் பதிந்துள்ளீர்....வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
ReplyDeleteடி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com