1992 ம் வருடம் துவக்கம் அது. அப்போது naan நெய்வேலியில்
பணி புரிந்து கொண்டிருந்தேன். மத்திய மின்சாரத்துறையின்
ஒரு அதிகாரி நெய்வேலியில் உள்ள ஒரு மத்தியரசு பயிற்சி
நிறுவனத்தில் டெபுடேஷனில் வந்திருந்தார். அவர் கைகள்
மிக அதிகமாக நீள காசு புரண்டது. கறுப்பாய் வாங்கிய
பணத்தை வெள்ளையாக்க அவரது மனைவி பெயரில்
எல்.ஐ.சி ஏஜென்சி எடுத்தார். அவரது ஊழல்கள் அம்பலமாக
.சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அவரது மனைவி எல்.ஐ.சி ஏஜென்ட் என்பதால் எங்கள்
அலுவலகத்திற்கும் அந்த ஏஜென்சி தொடர்பான தகவல்கள்
சேகரிக்க ஒரு சிபிஐ குழு வந்தது. அதன் தலைமைப்
பொறுப்பில் ஒரு இன்ஸ்பெக்டர். அவர் கேட்ட ஆவணங்கள்
எல்லாம் எடுத்துக் கொடுத்தோம். வேறு வழி?
இரண்டு சிகரெட்டுக்களும் சில டீக்களும் அவரை
நண்பராக்கியது. அவர்கள் பணி முடிந்து கிளம்பும் முன்பாக
சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மராவெல்லாம்
பிரதமராக அருகதை இல்லாத ஆள், நேரு குடும்பத்தைத்
தவிர வேறு யாருக்கும் இந்தியாவை ஆள தகுதியே
கிடையாது என்றெல்லாம் அவர் சொல்லிக் கொண்டே
இருந்தார்.
பேச்சு அப்படியே ராஜீவ் காந்தி கொலை பக்கம் திரும்பியது.
அப்போது அவர் சொன்னதை அப்படியே கீழே
எழுதியுள்ளேன்.
" ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் தங்கியிருந்த பல்வேறு
வீடுகளில் சோதனை செய்தோம். அப்போது அமைதிப்படை
நடத்திய அட்டூழியங்கள் குறித்த புகைப்படங்கள் அடங்கிய
புத்தகங்கள் நிறைய கிடைத்தது. ஒவ்வொரு தொகுப்பிலும்
பல புகைப்படங்கள். சிறுவர்களை, வயதானவர்களை கொலை
செய்வது, பெண்களை பாலியல் கொடுமை செய்வது என
பல அராஜகங்களை பதிவு செய்திருந்தார்கள். அமைதிப்படை
அழிவுப்படையாகத்தான் இருந்திருக்கிறது. அந்த
புகைப்படங்களைப் பார்த்த போது அமைதிப்படையை
அனுப்பிய ராஜீவ் காந்தியை கொலை செய்தது
நியாயம் என்றே எனக்கு தோன்றியது."
நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும்
இந்தியாவை ஆள தகுதி கிடையாது என்று சொன்ன
ஒரு அதிகாரி ராஜீவ் காந்தி கொலை நியாயமானது
என சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும்
மனசாட்சி இன்னமும் அவருக்கு ஒட்டிக் கொண்டுள்ளது
என்பது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
பகீர் படமும் பதிவும்.
ReplyDeletePlease mention that inspector's name.
ReplyDeleteஅவர் பெயர் தாமஸ் அல்லது லாரன்ஸ் என ஞாபகம்.
ReplyDeleteஅமைதிப்படை
ReplyDeleteஅழிவுப்படையாகத்தான் இருந்திருக்கிறது
வேதனையாக இருக்கிறது. ஏற்கனவே ஜெர்மனியிலிருந்து ஒரு இலங்கைப்பதிவர் எழுதியதில் படித்திருக்கிறேன்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
இதனோடு சம்பந்தப்பட்ட 2004ஆம் ஆண்டு இடுகை, ஒரு தகவலுக்காக. http://sundaravadivel.blogspot.com/2004/08/blog-post_08.html இச்சுட்டியிலுள்ள மற்ற தொடுப்புகளையும் சென்று பார்க்கவும். இன்னும் இ.அ.ப செய்த வன்கொடுமைகள் சட்டத்திற்குமுன் கொண்டுவரப்படவில்லை என்பது வேதனை.
ReplyDelete