Sunday, February 27, 2011

சிம்பு, பரத், நமீதா கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பு!

பிப்ரவரி மாதம் 23 ம் நாள்  புதுடெல்லியில்  சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள்  கலந்து கொண்ட  பேரணி. நம்மில்  எத்தனை 
பேருக்கு  அதைப்பற்றி  தெரியும்? எத்தனை  தொலைக்காட்சிகள் 
அதைக் காட்டின? எத்தனைப் பத்திரிகைகள்  இப்பேரணி  பற்றி 
பிரசுரித்தன? கீழே  உள்ள படங்களை தீக்கதிர் தவிர வேறு  எந்த
பத்திரிக்கையிலும்  நான் பார்க்கவில்லை.








  
அனைத்து  முதலாளித்துவ ஊடகங்களின்  அரசியலே  இப்பேரணி 
பற்றிய இருட்டடிப்பிற்கு காரணம்.  பேரணி பற்றி  செய்தி வெளியிட்டால்  ஆளும் வர்க்கத்திற்கு  இரண்டு சங்கடம். 
ஒன்று  பேரணியின் கோரிக்கைகளான விலைவாசி உயர்வு, 
பொதுத்துறை  பங்கு விற்பனை கூடாது, போன்றவை பற்றியெல்லாம்
விவாதம்  வருவது அவசியமற்றது  என்று  கருதுகின்றனர். 
இன்னொன்று காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான  ஐ,என்,டி.யு.சி 
பங்கேற்பதைப் பற்றியும்  எழுத வேண்டும்.  இது இன்னொரு தர்ம சங்கடம். 


பேரணியைப் பற்றி எழுதுவதை விட இருட்டடிப்பு செய்வது என்பது 
எளிதான வழியாக இருந்தது. 


ஒரு வேலை நமீதா  போன்ற நட்சத்திரங்கள்  பங்கு பெற்றிருந்தால் 
வேண்டுமானால்  இந்திய ஊடகங்கள் அக்கறை  செலுத்தியிருக்கலாம்.


பின்குறிப்பு: தலைப்பைப் பார்த்துதானே  நீங்களும் பதிவை படிக்க 
வந்தீர்கள்?
 

1 comment:

  1. நல்ல பதிவு.
    அரசியல் கட்சிகளுக்கு அவரவர் ஊடகம் இருப்பது அவர்கள் 'பொய்களை" விற்பது வசதியாகயிருக்கிறது.
    உண்மை செய்திகள் வெளியே தெரிவதில்லை.

    ReplyDelete