Monday, February 7, 2011

கொள்ளையர்களைப் பிடிப்போம், கொலைகாரர்களை ?




மிகவும்  மூர்க்கத்தமானவர்கள் , யாராலும் எதுவும் செய்ய 
முடியாதவர்கள், அமெரிக்கப் படையாலும்  அடக்க முடியாத 
அளவிற்கு  கொடூரமானவர்கள்  என்றெல்லாம்  பெயர்
பெற்றவர்கள்   சோமாலியக் கடற்கொள்ளையர்கள்.  
அவர்கள் ஏன் அப்படிப் போனார்கள்  என்ற சமூக சூழல் 
பற்றியெல்லாம்  என்றெல்லாம் நான் எழுதப் போவதில்லை. 


பல நாட்டுக் கப்பல்களை  எல்லாம்  அவர்கள்  கடத்துகின்ற போது 
அவர்கள்  கேட்கும்  பணயத் தொகையைக் கொடுத்து  கப்பலையும்
அதிலுள்ள  ஊழியர்களையும்  பொருட்களையும்  மீட்டு வருவது 
என்பதுதான்  நடைமுறையாக  உள்ளது.


அப்படிப்பட்ட  சோமாலியக் கடற்கொள்ளையர்களின்  கூட்டத்தை
இந்திய கடற்படையும்  கடலோரக் காவற்படையும்  இரண்டாவது 
முறையாகப் பிடித்துள்ளார்கள்.  இந்திய கடற்படையின் கடலோரக் 
காவற்படையின்  தைரியமும் வீரமும்  எல்லோராலும்  பாராட்டப் 
படுகின்றது.  உணமைதான், நியாயம்தான் வீரதீரசசெயலுக்காக 
அவர்களைக் கண்டிப்பாக பாராட்டத்தான்  வேண்டும். 


ஆனால்  என் எளிய கேள்வி  ஒன்றுதான்.


சோமாலியக் கடற்கொள்ளையர்களை  அடக்க முடிகின்ற இந்தியக் 
கடற்படையாலும்  கடலோரக் காவல் படையாலும்  இலங்கை 
கடற்படையின் தாக்குதலில்  இருந்து  தமிழக  மீனவர்களைக் 
காப்பாற்ற முடியாதா?  


கொல்லப்படுவது  தமிழகத்தின்  உழைப்பாளி  என்பதால் ஏற்படும் 
அலட்சியம் தவிர  வேறு  என்ன காரணம்  இருக்க முடியும்?  
அம்பானியின்  கப்பலாக, ஏன் கலாநிதியின் கப்பலாக  இருந்தால் 
இவர்கள்  பாதுகாப்பு  தருவார்கள், தமிழக மீனவர்களுக்கு 
தருவார்களா? 


தமிழக மீனவர்கள்  தொடர்ந்து கொல்லப்படும்  இவ்வேளையில் 
அது பற்றி  ஆட்சியாளர்கள்  சிறிதும்  கவலை கொள்ளாதபோது 
இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியோரின்  வீரம்
குறித்தெல்லாம் நிச்சயம்  பெருமை கொள்ள முடியவில்லை.


இவர்களும் முதலாளிகளின்  கருவிகள் மட்டும்தான்!



No comments:

Post a Comment