Thursday, February 10, 2011

கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தால்?

தமிழ்நாடு முழுதும்  இப்போது  திமுகவினர்  சுப்ரமணியசாமியின்
கொடும்பாவியை  எரிக்கும்  போராட்டத்தை  நடத்தி வருகின்றனர். 
திமுக செயற்குழு பொதுக்குழு  எல்லாம்  கூடி  தலைவருக்கும் 
பொதுச்செயலாளருக்கும்  அதிகாரம் அளித்து  அவர்கள்  முடிவு 
செய்து  அறிவித்த  போராட்டமல்ல.  தலைவரின்  கண்ஜாடையை 
புரிந்து கொண்டு  எதிர்கால  எம்.எல்.ஏ சீட்டு  போன்றவற்றையும்  
மனதில் கொண்டு  நடக்கின்ற  கூத்து  இது.  விலைவாசி  உயர்வுக்கு 
எதிராக  எட்டாம் தேதியன்று   எதிர்க்கட்சியினர்  நடத்திய தர்ணா
போராட்டத்தில் வேறு  ஆயிரக்கணக்கானவர்கள்  வேறு கலந்து 
கொண்டு விட்டனர்.  ஆக திமுக தனது  வலிமையை  மக்களுக்கு
காண்பிக்க வேண்டிய  கட்டாயம் வேறு  உருவாகி விட்டது.  

பொதுவாக  எந்த அமைப்பாவது  கொடும்பாவி  எரிக்கும் 
போராட்டம் நடத்தினால்  காவல்துறை  அனுமதிக்காது. 
கொடும்பாவியை  கைப்பற்றும், கைது  செய்யும். சோனியா காந்தி
கொடும்பாவியை  எரித்ததற்காக  கூட்டணிக் கட்சியான 
விடுதலை சிறுத்தைகளின் 18 தொண்டர்களை  கைது செய்து
வழக்கு போட்டது  அரசு. 

ஜார்ஜ் புஷ் கொடும்பாவியை  எரிக்கக் கூட  அனுமதிக்காத
காவல்துறை  இப்போது மட்டும்  அமைதியாக  இருப்பதன்  
மர்மம் என்ன?  நாளை கருணாநிதியின்  கொடும்பாவியை 
எரித்தாலும்  காவல்துறை  இதே  போல் அமைதியாக  இருக்குமா?

1 comment: