Monday, September 23, 2019

ஊடகங்கள் மறைத்தால் என்ன?

நேற்று உலக அளவில் ஒரு நிகழ்வு. அதில் ஒரு பாதியை மட்டும் நம் இந்திய ஊடகங்கள் காண்பித்தன. 

இன்னொரு பாதியை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டன.

ஆமாம்.

ஹௌடி மோடி நிகழ்ச்சியின் ஆரவாரக் காட்சிகளைக் காண்பித்த இந்திய ஊடகங்கள், 

அரங்கிற்கு வெளியே நடைபெற்ற மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முழுவதுமாக மறைத்து விட்டன.

இந்திய ஊடகங்கள் மறைத்தால் என்ன!
அந்த ஆர்ப்பாட்டக்காட்சிகளை நாம் பரப்புவோம் . . .









ஊஊஊஊஊஊஊடக அறத்தின் இன்னொரு வெளிப்பாடு நிகழ்ந்தது தமிழகத்தில். 

அதை அடுத்த பதிவில் பார்ப்போம். 


மோடியின் காதில் நாராசமாய் . . .



மோடியின் புகழ் பரப்பவும் டொனால்ட் ட்ரம்பின் புகழ் வளர்க்கவும் இருவரின் அரசியல் ஆதாயங்களுக்காக "ஹௌடி மோடி" என்றதொரு நாடக விழா நேற்று அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது.

"மோடியே திரும்பிப் போ" என்ற ஆர்ப்பாட்டமும் அரங்கிற்கு வெளியே அமெரிக்க வாழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது.

மோடியும் ட்ரம்பும் "கட்டிப் பிடி" காட்சிகளெல்லாம் நடித்தார்கள் என்றாலும் அந்த நிகழ்வில் மோடி மனதுக்குள் வெறுப்போடுதான் இருந்திருப்பார்.

காரணம்?

ஸ்டீனி ஹோயர்.

யார் இவர்?

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர்.

அவர்தான் நிகழ்ச்சியில் முதலில் பேசியவர்.

மகாத்மா காந்தியை புகழ்ந்தது மட்டுமல்ல


"ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மட்டும்தான் பன்முகத்தன்மைக்கு மதிப்பிருக்கும். அனைவருடைய மனித உரிமைகளை பாதுகாக்க முடியும். அப்படி ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இந்தியாவை உருவாக்கிய பண்டித நேருவின் தீர்க்கதரிசனம் போற்றுதலுக்குரியது"

என்று நேருவை வேறு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதுவும் அதற்கான காரணங்கள் வேறு மோடிக்கு வேப்பங்காயாக கசக்கக் கூடியது.

அரங்கிற்கு வெளியே எழுப்பப்பட்ட முழக்கங்களை விட ஸ்டீனி ஹோயர் கூறியதுதான் மோடியில் காதில் நாராசமாய் ஒலித்திருக்கும். 

Sunday, September 22, 2019

ஞானம், செயல், பக்தி - பாவம் மோடி






"ஞானம், செயல், பக்தி இவற்றின் மொத்த உருவம் சுவாமி சின்மயானந்தா" "
--------------  நரேந்திர மோடி.


இப்படி மோடியால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா?

அவர் ஒரு சாமியார் . . .

வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் . . .



இப்போது பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள 
சுவாமி சின்மயானந்தர் . . .

தனுஷ் நடித்த வேங்கை படத்தில்

"நாச்சியாபுரத்தில உள்ள எல்லா எருமையையும் நாந்தான் மேய்க்க வேண்டியிருக்கு"

என்று லிவிங்ஸ்டன் சொல்வார்.

பாவம் மோடி!

இந்தியாவில் உள்ள எல்லா ரேபிஸ்டும் பாஜகவில்தான் உள்ளார்கள் போல.

ஞானம், செயல், பக்தி இவற்றின் மொத்த உருவம் என்று மோடி புகழ்ந்த ஒருவரே இப்படி என்றால் மற்ற ஆசாமிகள் எப்படி இருப்பார்கள்!

ராஜேந்திர சோழனையும் அசிங்கப்படுத்தப் போறியா?





கங்கைக்கரையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன் என்று இங்கே சீன் போட்டு கடைசியில் ஒரு குப்பை போல ஒரு பூங்காவின் ஓரத்தில் பிளாஸ்டிக் பேப்பரில் சுருட்டி வைத்து இழிவு படுத்திய அதே பிராடு பேர்வழி இப்போது ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கப் போகிறேன் என்று புறப்பட்டுள்ளான். 

கங்கை கொண்டான் என்று பெயருடைய ராஜேந்திர சோழனை இவர்கள் எப்படியெல்லாம் இழிவு படுத்துவார்கள்?

இவர்கள் தமிழர்கள் மீது காண்பிக்கும் பாசமெல்லாம் வெறும் வேஷம். 

Saturday, September 21, 2019

ராஜேந்திர பாலாஜி - அறிவுக் கொழுந்து



ஆமாம்.



தேசிய கீதம் என்ன மொழியில் உள்ளது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத  மங்குனி அமைச்சரை வேறெப்படி சொல்வது?

அது எங்கள் பணம் நிர்மலா மேடம்



ஒட்டு மொத்த உற்பத்தி குறைந்து கொண்டிருக்கிறது.
வேலையின்மை பெருகிக் கொண்டிருக்கிறது.
பல தொழிற்சாலைகள் மூடப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்டோமொபைல் துறை அழிவின் விளிம்பில் . . .
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வாங்க ஆளின்றி முடக்கம் . . .
விவசாயத்துறையில் நெருக்கடி . . .
இந்தியாவை உலுக்கும் மிகப் பெரிய பொருளாதார மந்தம் . . .

நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம், நிதியமைச்சர் நிர்மலா அவர்களே,

இப்படிப்பட்ட சூழலில் பொருளாதாரத்தை உசுப்பி விட அரசு சில நேரடி நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும்.

"மக்கள் மத்தியில் பணத்தை புழங்க விட வேண்டும். பணச் சுழற்சி ஏற்படுகிற போது பொருளாதார நிலைமைகளில் அசைவு ஏற்படும். அதற்கேற்றார்போல சில திட்டங்களை அரசே அமலாக்க வேண்டும்"

இதனை மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்ல முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் சொல்கிறார்கள். மந்த நிலையிலிருந்து வெளியே வர பணம் சாமானிய மக்களிடம் செல்ல வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகள் எதையாவது எடுத்தீர்களா நிர்மலா மேடம்?

ஆட்டோமொபைல் துறையை பாதுகாக்க ஜி.எஸ்.டி யில் ஏதாவது மாற்றம் கொண்டு வந்தீர்களா? உதிரி பாகங்களுக்கு 28 % ஜி.எஸ்.டி என்பதெல்லாம் ஒரு அநீதி என்பதை நீங்கள் உங்கள் சொந்தக்காசில் ரிப்பேர் செய்தால் தெரிந்திருக்கும். சென்ற வருடம் நான் அனுபவித்தேன். உங்கள் அரசை  திட்டிதான் என்னை ஆறுதல் செய்து கொண்டேன்.

அரசு செய்யத்தவறுகிற சமூகப் பாதுகாப்பை ஒரு குடிமகன் தானே செய்து கொள்வதுதான் ஆயுள் காப்பீடு. அதற்கு ஜி.எஸ்.டி விதிப்பது நியாயமல்ல, அதனை அகற்றுங்கள் என்று தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறோமோ, அது பற்றி ஏதாவது பரிசீலனை செய்தீர்களா?

விவசாயிகளுக்கு ஏதாவது?

நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

என்ன அது?

"கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில் வை"

என்ற கதையாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளீர்கள், 

அதுவும் முன் தேதியிட்டு, ஆறு மாத எக்ஸ்ட்ரா போனஸோடு . .

இந்த சலுகை அவர்கள் கஜானாவில் பத்திரமாக தூங்கப் போகிறது. எந்த புதிய தொழிற்சாலையையும் தொடங்கி எவனும் எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்கப் போவதில்லை.

இப்போது உள்ளதை விட நாடு இன்னும் மோசமாகத்தான் போகும். 

அது சரி

நீங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவா ஆட்சிக்கு வந்தீர்கள்.

காவி செயல்திட்டத்தை அமலாக்க வந்தீர்கள்.

அதற்கு உதவிய பெரு முதலாளிகளுக்கு காணிக்கை செலுத்துகிறீர்கள்.

அந்த காணிக்கை மக்கள் பணம், எங்கள் பணம் . . .

Friday, September 20, 2019

ரஜனிக்கு இவர் பெட்டரா?



என்ன?

தென்னை மரச்சின்னம், ஏணிச் சின்னம் என இரண்டு சின்னத்திலும் வாக்களித்த அந்த கதாபாத்திரம் ரஜனியை விட பெட்டரா?


ஆமாம். 

ரஜனியின் இந்த அருமையான கருத்துக்களைப் படித்தால் நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.