Sunday, April 12, 2026

Saturday, April 11, 2026

சீமான் அவ்வளவு நல்லவரில்லையே!

 


கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள். 


2000  கோடி ரூபாயும் துணை முதல்வர் பதவியும் கிடைப்பதாக இருந்தால் முதலில் ஓடிப் போய் அந்த புரவலர்களோடு கை கோர்த்துக் கொண்டிருப்பார். இப்போதும் அவர் ஏதோ வஜனம் பேஸ்ய்கிறாரே தவிர, அவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. 

எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்

 


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.

இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.

இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி.  எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.

ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

Friday, April 10, 2026

எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?


 மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?

கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.


மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும்  போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .

அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம். 

கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!


பொய்ப்பிரச்சாரமா மாலன்?????

 


நேற்று முகநூலில் பார்த்த ஒரு செய்தி. ஒரு வயதானவர், அவருக்கு திராவிட இயக்கமும் பிடிக்காது, சங்கிகளையும் பிடிக்காது. மோடியை திட்டுவார். அதை விட அதிகமாக தந்தை பெரியாரை திட்டுவார். கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கிறது என்று அவர் கேள்வி கேட்க, மூத்த்த்த்த்ஹ்த்த்த்த்த்த்த்த  பத்திரிக்கையாளர் என்று கருதப்படுகிற மாலன் உடனடியாக ஒரு பட்டியலை போடுகிறார்.

பாஜக கூட்டணிதான் வெற்றி பெறப்போவதாக எல்லா தொலைக்காட்சிகளும் சொல்வதாக அந்த பட்டியலில் இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இன்னொரு சங்கி உடனடியாக அதை மறுத்து அது பொய் செய்தி என்றும் ஒரு தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு திமுக கூட்டணி வெல்லும் என்று போட்ட பட்டியலை பகிர்ந்தார்.


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இப்படி கருத்துத்திணிப்பு பொய்ப்பிரச்சாரம் செய்யலாமா மிஸ்டர் மாலன்? இது கேவலமாக இல்லையா? காலம் போல காலத்தில் ஓய்வெடுக்காமல் இவ்வளவு தரம் தாழ்ந்து போகலாமா? 

Thursday, April 9, 2026

திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது

 


திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.

நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர்  இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .


தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.


திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.

ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

மீண்டும் தோற்றுப் போவார்கள்.

உங்களைத்தாண்டா மக்கள் மன்னிக்க மாட்டாங்க


 சங்கிகள் தாங்கள் அடி முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இரான்-அமெரிக்கா போரைப் பொறுத்தவரை இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது சற்று ஆசுவாசமளிக்கிற செய்தி.

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த போர் நிறுத்தம்.

இதனை டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இரானும் ஒப்புக் கொண்டுள்ளது.



மேலே உள்ள செய்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே இன்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஒரு முயற்சிக்கு பாகிஸ்தான் காரணம் என்று திமுக எம்.பி சல்மா கருத்து சொல்லி விட்டாராம்.  அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று சங்கிகள் குதிக்கிறார்கள்.


சங்கிகளின் அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.

சரியானதொரு கருத்தை வெளியிட்ட சல்மாவை கைது செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கிறது?

மோடிதான் விஸ்வகுருவாக இருந்து போரை முடித்து வைப்பார் என்று இவர்களாகவே முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தது நடக்காமல் அந்த பெயர் பாகிஸ்தானுக்கு போய் விட்டதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மணிப்பூரிலேயே மத்தியஸ்தம் செய்ய முடியாத டம்மி பீஸ் மோடி.

இரண்டாவது இவர்கள் சல்மாவை மதக்கண்ணால்தான் பார்க்கிறார்கள்.

அதனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்தைத்தான் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 

Wednesday, April 8, 2026

இரான் - இருளில் ஒளி

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இரான் மக்களின் மன உறுதிக்கு சான்றாக இப்பதிவு அமைந்துள்ளது.




ஈரானிய மக்கள் உலகிற்கு காட்டிய வெளிச்சம்...

அ.முத்துக்கிருஷ்ணன்
8:00 மணி என்றால் இந்தியரக்ளுக்கு பொதுவாகவே ஒரு பயம் தான், இரவு 8 மணிக்கு ஒருவர் தொலைக்காட்சியில் வரப்போகிறார் என்றாலே தொட்டியில் போட்டு தாய்மார்கள் குழந்தைகளை கூட தூங்கவைத்து விடுவந்து இந்திய வழக்கமாகவே 2014க்கு பிறகு மாறியுள்ள நிலையில் அதே போல் ஒரு 8 மணி மிரட்டலை ஈரான் நாட்டிற்கு விடுத்தார் ஒருவர்.
விளக்குகள் எல்லாம் அணைந்து விடும், நாடே இருளில் மூழ்கும், ஒரு நாகரீகமே அழிந்துவிடும் என்ற ஏக வசனங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிந்து, உலகையே பதட்டம் கொள்ளச் செய்தார். நிச்சயம் நேற்றைய இரவு எனக்கு மட்டும் அல்ல நண்பர்கள் பலருக்குமே தூக்கமில்லா இரவு தான் ஆனால் ஈரான் மக்கள் பயத்தின் இருளுக்குள் சென்றிடவில்லை, ஒரு துளியும் பின்வாங்கவில்லை.
அவர்கள் தாங்கள் தான் ஈரான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உலகிற்கே உணர்த்தினார்கள். நேற்றைய இரவின் பொழுதில் அவர்கள் காட்டிய வீரம் என்பது வரலாற்று நிகழ்வாகவே எனக்கு படுகிறது.
இஸ்பஹானின் மூடுபனியில் இருந்து தப்ரிஸ் நகரின் தொழில்துறை பகுதிகள் வரை, வரலாறு எழுதப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் மனித மதில் சுவர்களாக மாறினார்கள், தாக்குதலுக்கான இலக்குகளாக உருமாற்றம் பெற்றார்கள்,
தேஹ்ரானில், தபியத் பாலம் "நள்ளிரவு கீதத்தின்" மேடையாக மாறியது; அங்கு தார் இசையின் தாளங்களூக்கு கலைஞர்கள் நடமனாடினார்கள். உலகமே பதட்டத்தில் உறைந்து கிடக்கும் நேரம் அவர்கள் இசையும் நடனமுமாக லயித்திருந்தார்கள்.
"முழுமையான அழிவு" என்ற அச்சுறுத்தலுக்கு எதிரான பண்பாட்டு எழுச்சி. மின் நிலையங்களை ஒளிக் காட்சியகங்களாகவும், பாலங்களை மனித சங்கிலிகளாகவும் மாற்றிய மக்கள், "Power Plant Day" என்ற தாக்குதல் தர்க்கத்தை மக்கள் தைரியத்தின் ஒளியால் செயலிழக்கச் செய்தனர்.
ஈரான் முழுவதுமே எதிர்ப்பு பல்வகைமைகள் கொண்டாதாக, விரிவானதாக ஒன்றை விட ஒன்று வீரியமானதாகவே இருந்தது; ஒவ்வொரு நகரமும் தேசிய பாதுகாப்பின் ஓர் நூலாக தன்னை நெய்தது. புஷேர் நகரின் தெற்கில், மாணவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களும் அணு நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் பெரிய சுவரோவியங்களை வரைந்தனர்; அவை மேலே பறக்கும் விமானிகளுக்கும் செயற்கைக்கோள்களுக்கும் அமைதியின் செய்திகளை வெளிப்படுத்தின.
கெர்மான்ஷா மற்றும் அஹ்வாஸ் நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மருத்துவமனைகளையும் வீடுகளையும் சுற்றி அரன் அமைத்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தும் மின் நிலையங்களின் வாயில்களை விட்டு நகர மறுத்தனர்; இவை "Shields of Light/ ஒளியின் கவசங்கள்" என அழைக்கப்பட்டன. வீதிகள் எங்கும் உணவின் மணமும், கவிதை வாசித்தலின் ஓசையும் காற்றில் நிரம்பியிருந்தது.
அலி காம்சாரி மற்றும் பென்யாமின் பகதூரி போன்ற கலைஞர்கள் சாதாரண மக்களுடன் தோளோடு தோள் நின்று, "நூர் பர் தரிகி"—இருளில் ஒளி—என்ற முழக்கத்தை எழுப்பினார். மக்களின் இதயத் துடிப்பு உலகம் முழுவதிலும் கலைஞர்கள் ஒலிக்கச் செய்தார்கள்.
இந்த வரலாற்றுச் செயல்பாடு ஒரு தற்காலிக பாதுகாப்பை விட ஒரு படி மேலே சென்றது; இது அந்த மக்களின் மரபு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், "நாகரிகத்தை முடிவுக்கு கொண்டுசெல்லும்" முடிவுகள் இரு வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒன்றரை கோடி பேர் ஒரு இரவில் தங்களின் நாட்டை காக்க முதல் முறையாக கூடியிருக்கிறார்கள், இரவெல்லாம் இந்த வரலாற்றை நான் ஒவ்வொரு நொடியாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஈரான் மக்கள் ஒன்றுகூடிய அந்த தருணம் 21ஆம் நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். "எங்கள் பாலங்கள், எங்கள் மின் இணைப்புகள்" என்ற அவர்களின் முழக்கம், நேரடி பதிலாக அமைந்தது.
கலை மூலம் தெருக்களையும், இசை மூலம் தொடுவானத்தையும் நிரப்பிய ஈரானியர்கள், போர் இயந்திரங்களுக்கு எதிராக தங்களின் அசாத்திய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.
போர்களை இந்த உலகம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அதுவே கலையும் கலைஞர்களும் எளிய மக்களும் இந்த உலகிற்கு விடுக்கும் செய்தி, உலகம் முழுவதும் நடைபெற்ற எல்லா போர்களிலும் எளிய மக்களும் அவர்களது உடமைகளும் அவர்களது வாழ்வாதாரமுமே முதன்மையாக பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு தான் மிகுதியாக சிதைந்துள்ளது.
இந்த இரவு என் வாழ்வின் மகத்தான இரவும் கூட.... மறக்க முடியாத இரவும் கூட....

கறி விருந்திற்கு வாய்ப்பில்லை சுந்தர்.சி

 


புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் பாஜக பொறுப்பாளர் குஷ்புவின் கணவர், இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, தான் எம்.எல்.ஏ ஆனால் மதுரை மத்திய தொகுதியில் அசைவ விடுதிகளை மூடி மீனாட்சி அம்மன் கோயில் புனிதத்தை பாதுகாப்பேன் என்று பேசியதாக ஒரு செய்தி உலாவியது.

பிரபலமான அசைவ விடுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுரையில் இப்படியெல்லாம் பேசுமளவிற்கு சுந்தர்.சி மோசமான சங்கியா என்று சின்ன சந்தேகம் வந்தாலும் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.

அந்த செய்தி சரியில்லை என்றும் தன் வெற்றிக்குப் பிறகு அச்செய்தியை பரப்பியவர்களுக்கும் சேர்த்து கறி விருந்து கொடுப்பேன் என்று சுந்தர்.சி பேசியுள்ளார்.

ஆனால் திரு சுந்தர் அவர்களே, நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. யாருக்குமே கறி விருந்துமே தரப் போவதில்லை.

இந்த தேர்தல் காரணமாக கமலஹாசன் தயாரித்து, ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று நீங்கள் புலம்பப் போவது மட்டுமே நடக்கப் போகிறது.

பாவம் ஏ.சி.சண்முகம்! இது நாள் வரை வேலூர் மக்களவை தொகுதியில் அவர் போட்டியிட்டு கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார், அதனை மாணவர்களிடமிருந்து வசூலித்து விடுவார் என்பது வேறு. 

தனக்காக பணத்தை இழந்த அவர், முதல் முறையாக உங்களுக்காக பணத்தை இழக்கப் போகிறார். 

Tuesday, April 7, 2026

மம்தா அண்ணன் மகன் செஞ்சதுதான் விஜய்

 


தன்னைப் போன்ற உருவச்சிலைகளை செய்து அவற்றை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுதான் விஜய் இன்று கொடுத்துள்ள கண்டெண்ட்.


எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ க்கள் வரிசையாக நிற்பது போல விஜய் சிலைகள் நிற்பதைப் பார்த்தால் காமெடியாகத்தான் இருக்கிறது.


ஆனால் இது ரொம்பவே பழைய டெக்னிக்.

2019 மக்களவைத் தேர்தலின் போதே மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி கடைபிடித்த டெக்னிக்தான். 

அப்போது எழுதிய பதிவு உங்கள் தகவலுக்காக.

Monday, April 29, 2019

பிரச்சாரத்துக்கே இப்படி! ஜெயிச்சா எப்படி?



அபிஷேக் பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.

பிரச்சாரத்தில் வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து, அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிரச்சாரத்தின் போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம் ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?

அந்த தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?

விஜய் அவருடைய லெவலுக்கு இன்னும் புதுமையாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிகு: அதே 2019 தேர்தலின் போது டெல்லியில் ஒரு வேட்பாளர், அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வேனில் நிற்க வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது டூப்பெல்லாம் இல்லை, நான் ஜீப்பிற்குள் ஓய்வு எடுத்த போது அவர் சும்மா மேலே நின்று வாக்காளர்களைப் பார்த்து சும்மா வேட்பாளர் போல சும்மா கை காட்டினார் என்று அந்த ஒரிஜினல் வேட்பாளர் சமாளித்தார். 

அவர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சங்கி கௌதம் கம்பீர் . . . .

ஜெமோ நீடூழி வாழட்டும், மற்றவர்கள் கூடுதலாகவே

 


நாய் வால் நிமிராது என்பதை புளிச்ச மாவு ஆஜான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி குறிப்பு மூலம் இறந்தவரை அசிங்கப்படுத்துவது என்பது அவரது இயல்பாகி விட்டது.

சமீபத்தில் மறைந்த காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் பற்றி அவருடன் பழகிய எண்ணற்றவர்கள் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஜெயமோகன் மட்டும் வழக்கம் போல தன் வன்மத்தை கொட்டியுள்ளார். அவர் எழுதியதை படியுங்கள்.

தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி..அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம்அதன்பின்னர் அன்று மாணவராக இருந்த அவரை அறிமுகம் செய்துகொண்டேன்அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார். அவர் கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது.

நான் தொடர்பு கொண்டிருந்த விஜயபாரதம் அச்சகத்திற்கு காகிதம் சேகரிக்கும் பொருட்டு வந்தவர் நான் புதுமைப்பித்தனை கல்கியுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு என்னிடம் உரையாடினார். அவர் கல்கியை அப்போதுதான் வாசித்திருந்தார். ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன். அதன்பின் அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார். 

ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது. புதிய காலச்சுவடு அணியுடன் அவர் இணைந்த பின் அந்த தொடர்பு இல்லாமலாகிஎன் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார். எப்போதாவது ரயில் நிலையங்களில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு சில சொற்களை பெரும்பாலும் நானே சென்று பேசுவதுடன் தொடர்பு நின்றதுசென்ற டிசம்பரில் ரயிலில் சந்தித்தபோது நாகர்கோயிலில் இருப்பதாகச் சொன்னார். 

அவருடைய மறைவு திகைப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறதுஇத்தகைய தருணங்களில் மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவிலெழுகிறதுஅஞ்சலி.

இறந்தவரின் பொருளாதார நிலை,

உடல் குறைபாடு,

அவர்களின் வாசிப்பனுபவம் பற்றிய அலட்சியம்,

அவர்களுக்கு தான் செய்த உதவிகள்,

அடுத்தவர் உதவியில்லாமல் அவர்கள் முன்னேற முடியாது,

அவர்கள் பகைவர்களாக இருப்பினும் தான் ரொம்ப நல்லவன் என்று காண்பிப்பது.

இவையெல்லாம் அவரது அஞ்சலி வன்மக் குறிப்புகளில் வழக்கமாக இருக்கும். அரவிந்தனுக்கான குறிப்பிலும் இதெல்லாம் இருக்கிறது. அவற்றை அடிக் கோடிட்டுள்ளேன்.

இன்னும் கூட ஒரு மோசமான விஷயத்தை முதலில் எழுதியிருந்தார். பிறகு அதனை மட்டும் நீக்கி விட்டார். மற்ற விஷமெல்லாம் அப்படியேதான் இருக்கிறது. 

ஜெயமோகனை என்ன சொல்வது? 

ஜெயமோகன் நீடூழி வாழட்டும். மற்ற இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள் ஆகியோரெல்லாம் ஜெயமோகனை விடவும் கூடுதல் காலம் வாழட்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஜெமோ அஞ்சலி குறிப்பு எழுதும் வாய்ப்பு கிடைக்காது. 

பிகு 1 : அசோகமித்திரனை பேச அருகதையற்ற ஜெமோ - நாளை

பிகு 2 : ஜெயமோகனை விமர்சிப்பவர்களை வெட்டி ஆபீசர்கள் என்று சொல்கிறார் கவிஞர் போகன் சங்கர். அவரைப் போல முட்டு கொடுப்பவர்களை முட்டாள் ஆபீசர்கள் என்று சொல்லலாமா? 


Monday, April 6, 2026

போலீஸிற்கு மரண பயத்தை கொடுத்த தீர்ப்பு

 


மிகவும் கேவலமாக இன்று பேசிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த மிகப் பெரிய அராஜகச் செயல்களில் ஒன்று சாத்தான்குளம் லாக்கப் கொலைகள்.

ஜெய்பீம் படத்தில் காண்பித்த போலீஸ் சித்திரவதைகள் எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது போலத்தான் சாத்தான்குளம் சம்பவம் அமைந்திருந்தது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கூடாது என்ற கொள்கை நிலையில் பார்க்கும் போது மரணம் வரை சிறைத்தண்டனை என்று கொடுத்திருக்கலாம். இறுதித் தீர்ப்பில் ஒரு வேளை மரண தண்டனை குறைக்கப்படலாம்.

ஆனாலும் இத்தீர்ப்பு

தன் ஸ்டேஷனுக்கு வருபவர்களை மனிதராக மதிக்காமல் மிருகத்தனமாக சித்திரவதை செய்யும் போலீசாருக்கு மரண பயத்தை அளித்துள்ளது.

இனியாவது இன்னொரு லாக்கப் மரணம் நடக்காமல் இருக்கட்டும். இத்தீர்ப்பு கெட்ட போலீஸிற்கு அச்சத்தை அளிக்கட்டும். 


தமிழே இல்லாமல் தமிழ் எப்படி வாழும் ஜெமோ?

 


புளிச்ச மாவு ஜெயமோகன், நியூயார்க்கில் ஒரு திருவிழா நடத்தி உள்ளார். 


Living Tamil LitFest என்ற பெயரில் அந்த விழாவை அவர் யாருக்காக நடத்தினார்? 

அந்த நிகழ்வின் புகைப்படங்களை அவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். 

அந்த நிகழ்வின் ஒரு பின் திரையிலும் தமிழ் கொஞ்சம் கூட இல்லை.

ஜெமோ ஆற்றிய உரை கூட தமிழில் இல்லை.

புகைப்படங்களில் உள்ள முகங்களைப் பார்க்கையில் எல்லாம் தமிழ் முகங்கள்தான். 

பிறகு ஏன் தமிழ் அங்கே இல்லை.

வாழும் தமிழ் இலக்கியத் திருவிழா என்று பின் திரையில் சின்னதாக போடக் கூட முடியாதவர்களா தமிழை வாழ வைக்கப் போகிறார்கள்?

தமிழுக்கென்று தனியாக எழுத்துரு (FONT) அவசியமில்லை. ஆங்கிலத்திலேயே THAMIZH EZHUTHU என்றொரு கருத்தை திணிக்க முயன்ற தமிழ்த்துரோகி ஜெயமோகன் என்பதை நாம் எக்காலத்திலும் மறந்து விடக்கூடாது.

பிகு : இந்த நிகழ்வில் ஜெமோ ஒரு அயோக்கியத்தனம் செய்துள்ளார். 

அது நாளை . . .


Sunday, April 5, 2026

மாட்டுக்கறி மட்டும் அவங்களுக்குத்தானாம்

 


அஸ்ஸாமில் அமித்ஷா கொடுத்துள்ள தேர்தல் ஜூம்லா கீழே உள்ளது. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்ற வாக்குறுதியை ஜூம்லா என்று சொன்னது அவர்தானே!



இதை படிக்கையில் மனதில் தோன்றியது  . . .

தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்.

அப்படி தப்பித்தவறி யாராவது சிலருக்கு கொடுத்தால் அவர்கள் அந்த மாட்டிலிருந்து பால் வேண்டுமானால் கறந்து கொள்ளலாம்.

ஆனால் மாட்டுக்கறியை அவர்கள் சாப்பிடக்கூடாது. அதை பாஜகவிற்கு தாராளமாக நிதியளிக்கும் மாட்டுக்கறி ஏற்றுமதி கம்பெனிகளுக்கு கொடுத்து விட வேண்டும்.

ஆமாம். அமித்ஜி, மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களில் பல இஸ்லாமிய பெயர்களில் இருந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடாத ஜெய்ன்கள்தானாமே! 

அது சரி நாய் விற்ற பணம் குரைக்காதல்லவா! 

சாதாரண மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் அடித்துக் கொல்வீர்கள்! அதை செல்வந்தர்கள் வெளி நாட்டினர் சாப்பிட ஏற்றுமதி செய்வது பொருளாதார நடவடிக்கை அல்லவா!

உங்களின் தவறுதான் ஸ்டாலின்

 


எடப்பாடிக்கு இத்தேர்தலில் அரசியல் செய்ய எதுவுமே கிடைக்கவில்லை போல. அதனால் "கலைஞரின் இறுதிக்காலத்தில் அவரை மு.க.ஸ்டாலின் கைதியாக அடைத்து வைத்திருந்தார், அவரது மரணம் சந்தேகத்திற்குரியது. தான் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன்"  என்றெல்லாம் பேசி வருகிறார்.

சிரிப்பும் எரிச்சலும் வருகிற குற்றச்சாட்டு இது.

இறுதியில் மருத்துவமனை செல்கிற வரை பொது வெளியில் இயங்கியவர் கலைஞர். மருத்துவமனையில் அவர் இருந்த சூழலில் பல தலைவர்களும் அவரை சென்று சந்தித்தனர்/பார்த்தனர். காவேரி மருத்துவமனையில் எந்த மர்மக் காட்சிகளும் நடைபெறவில்லை. அதனால் எடப்பாடியின் குற்றச்சாட்டு அபத்தமானது.

அதே நேரம்

ஏ1 ஜெயலலிதா எப்போது, என்று, எப்படி இறந்தார்?

அப்பல்லோ பிரதாப் ரெட்டி, ஏ2 சசிகலா என்ற இருவரைத் தவிர வேறு யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?

வித்யாசாகர் என்ற ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பொறுப்பு கவர்னராக இருந்தாரே, அவர் கூட அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாரே தவிர, ஜெ வை பார்க்கவில்லை.

ஏ1 ஜெயலலிதா மரண மர்மத்தையும் பின்பு ஏ1, ஏ2 ஆகியோர் அத்து மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கிய கொட நாட்டு மர்ம மாளிகை தொடர் கொலைகள் தொடர்பாக இந்த ஐந்தாண்டுகளில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததுதான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப் பெரிய தவறு.

அப்படி செய்திருந்தால் இன்று கலைஞர் மரணம் பற்றி பேசும் தைரியம் எடப்பாடிக்கு வந்திருக்குமா? அதைப்பற்றி பேச தனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று வெட்கப்பட்டிருக்க மாட்டாரா? 

யார் கண்டது ! குற்றவாளியாக எடப்பாடியே கூட ஜெயிலில் இருந்திருக்கலாம்.

ஆகவே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே அடுத்த ஆட்சிக்காலத்திலாவது

ஏ1 ஜெயலலிதா மர்ம மரணம்,

கொட நாட்டு மாளிகை தொடர் கொலைகள்

தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுங்கள். 

Saturday, April 4, 2026

புளிச்சமாவு ஆஜானும் வசூல் ராஜா வார்ட் பாயும்

 


என்னத்தான் தேர்தல் நேர பரபரப்பாக இருந்தாலும் புளிச்ச மாவு ஆஜானை கலாய்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இழக்க முடியுமா?

கீழே உள்ள செய்தி புதிதல்ல. ஆஜான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பதுதான்.


இதனை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த வசூல் ராஜா படக் காட்சியைத்தான் மேலே உள்ள படத்தில் பகிர்ந்துள்ளேன்.

ஜெயமோகனை தன்னை சிறந்த படைப்பாளி என்று வேண்டுமானால் கதையளிக்க முடியுமே தவிர, சிறந்த மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? வன்மமும் வக்கிரமும் நிறைந்த அவரால் அது இயலாது என்பது அவருக்கே தெரியும். 

பிகு: இன்னும் கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளங்களில் ஆஜான் புகழ் சத்தமாகவே ஒலிக்கும்.

ஆமாம். முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியவாதிகளை அமெரிக்காவிற்கு கூட்டிப் போயுள்ளார். அதற்கான நன்றியை எதிரொலிக்க வேண்டுமல்லவா!

Friday, April 3, 2026

நீங்களே விஷத்தை குடியுங்கள் சீமான்

 


தேர்தல் காலத்தில் பல விதமான வசனங்கள் பேசப்படும். அதில் சீமானின் லேட்டஸ்ட் வஜனம் கீழே. 


ஐய்யா சீமான், 

ஐம்பது நாட்களுக்குள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் உயிரோடு கொளுத்துங்கள் என்ற வஜனத்தை கேட்டவர்கள் நாங்கள்.

அப்படியெல்லாம் உங்கள் மிரட்டலுக்கு பயந்தெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட முடியாது. அதற்காக உங்களுக்கு விஷம் வைக்கும் வேலையெல்லாம்  எங்களுடையது கிடையாது. நீங்களே விஷத்தை சாப்பிட்டு விடுங்கள்.  

உங்களுக்கு ஓட்டு போட்டு தமிழ்நாட்டுக்கு கொடுமை  செய்வதை விட நீங்கள் விடும் சாபத்தை அனுபவிப்பது மேல் 


சகவாச தோஷமா செங்கோட்டையன்?????

 


ஏ1 காலத்து முன்னாள் மந்திரியும் தற்போதைய தற்குறி தவெக கூட்டத்தில் உள்ளவருமான செங்கோட்டையனின் மீது பெரிய அபிப்ராயம் எதுவும் எப்போதும் இருந்தது கிடையாது. வாச்சாத்தி பிரச்சினையை கையிலெடுத்து போராடியதற்காக எங்கள் தோழர், மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டவர் அல்லவா அவர்! 

(பார்க்க : விஜய்-செங்கோட்டையன் கொலைகாரக் கூட்டாளிகள்

புஸ்ஸி ஆனந்த் சில மாதங்கள் முன்பாக அபத்தமாக உளறிய ஒன்றை இவரும் உளறியுள்ளார். 

அது என்ன?


நீண்ட காலம் எம்.எல்.ஏ ஆக, அமைச்சராக இருந்ததால் கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்திருந்தேன். 

ஆனால் ?????

புஸ்ஸி ஆனந்த் உளறிய போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெயலலிதா ஆகப் போகிறாரா விஜய்?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதன் காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது என்று பதிவாகக்கூடாது என்பதற்காக நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் ஏ1.

ஏ1 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தாரே தவிர, போட்டியிடவில்லை. போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல செங்கோட்டையன் பேசியதன் காரணம் என்ன?


ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா அவர்?

அல்லது

தவெக தற்குறிகளின் சகவாசத்தால் இப்படி ஆகி விட்டாரா?



Thursday, April 2, 2026

ராயபுரம் ஜெயகுமார் இப்போது தோற்கப் போவதற்கும் ?????

 


கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு தன் தோல்விக்கு காரணம் யார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார் விளக்கமாக சொல்லும் காணொளி இங்கே உள்ளது.

பாவம் ஜெயகுமார்!

2026 தேர்தலிலும் ஜெயகுமார் அதே வேஸ்ட் லக்கேஜ் பிஜேபியால்தான் தோற்கப் போகிறார். 

அவ்விரு கட்சிகளிலும் என்ன நடக்கிறது?

 


இன்னும் நான்கு  நாட்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விடும்.

இரண்டு தேசிய கட்சிகளும் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி அடம் பிடித்து அரசியல் செய்து அடுத்தவர்கள் பங்கையும் பெற்று 28 தொகுதிகளை பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னும் அவர்களால் வேட்பாளர்களை இறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் எப்போது முடிவு செய்து எப்போது அறிவித்து எப்போது உட்கட்சி குழப்பங்களை சரி செய்து எப்போது பிரச்சாரத்திற்கு செல்வார்கள்/

பாஜகவும் அதன் குழப்பங்களிலிருந்து வெளியே வர முடியவில்லை. அது பற்றி நமக்கு கவலையில்லை. நாசமாகப் போகட்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

ஆனால் காங்கிரஸ்  பின்னடைவு பெற்றால் அதன் தாக்கம் கூட்டணியை பாதிக்கும்.

ஒரு மாதமாகியும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியவில்லையென்றால் அந்த கட்சிக்கு எதற்கு தேர்தல்? 28 தொகுதிகள்? அதிகாரத்தில் பங்கு? 

Wednesday, April 1, 2026

தவெக தற்குறிகளும் காக்கா பிரியாணியும்

 


தங்களை தற்குறிகள் என்று அழைத்தால் தவெகவினர் வருத்தப்படுகிறார்களாம்.  

கீழேயுள்ள பதிவுகளை பாருங்களேன்


ஒரு வாக்காளரால் இரண்டு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அப்படி வாக்களித்தால் அது கள்ள ஓட்டாக மட்டுமே இருக்க முடியும் என்பது கூட தெரியாமல், திருவல்லிக்கேனி-சேப்பாக்கம் என்பது ஒரே தொகுதி என்ற விஷயமும் கூட தெரியாமல் பதிவெழுதுகிற ஒரு ஆளை தற்குறி என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்! 

சரி கவுண்டம்பாளையம் விஜயகுமாருக்கு வாக்கு எங்கே இருக்கிறது? கவுண்டம்பாளையத்திலா? பெரம்பூரிலா அல்லது திருச்சியிலா?

அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இருந்தால் மோடி,அமித்ஷா வகையறாக்கள் நடத்திய SIR கூட வெறும் ஜும்லாதானா? 



மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்யுங்கள்

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதற்கும் நல்லது.

அந்த குழுவின் சிகண்டி பதிவர் (பெண் பெயரில் செயல்படும் போலிப் பதிவர்) திங்களன்று போட்ட ஒரு பதிவையும் அதற்கு முட்டு கொடுக்கும் மாடரேட்டரின் பதிலையும் பாருங்கள்.




ஒரு வழியாக அந்த பதிவு நீக்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமை அன்று அதே பதிவை வேறு ஒருவர் பதிவு செய்கிறார்.

என்னய்யா நியாயம் என்று கேட்டால் பதில் இல்லை.

தேர்தல் வரைக்கும் இந்த குழுவில் உள்ள சங்கி வெறியர்கள் என்னென்ன பொய்களை பரப்புவார்களோ! அந்த பொய்கள் தமிழ்நாட்டின் சமூக அமைதியை பாதிக்கும். சட்டம் ஒழுங்கை பாதிக்கும்.

அதனால் இந்த குழுவை தடை செய்வது நல்லது.

பிகு: இந்த குழுவை பற்றி இன்னும் ஒரு பதிவை மட்டும்தான் எழுத முடியும். ஏன்? அது நாளை . . .

Tuesday, March 31, 2026

மீண்டும் கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம்

 


பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.


Tuesday, December 22, 2015

கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்


கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவாக பிரகாசிக்காதவர் கீர்த்தி ஆஸாத். அரசியலில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவ்வளவு பிரபலமான அரசியல்வாதி என்றும் சொல்ல முடியாது.

கிரிக்கெட்டில் அவர் கையாண்ட அதிரடி பாணியை இப்போது அவர் தனது சொந்தக்கட்சி பிரபலம் மீதே கையாள எப்படி மீள்வது என்று தெரியாமல் பாஜக தடுமாறுகிறது.

அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப் படுவார்கள்  என்று சில தினங்கள் முன்பு நான் எழுதிய பதிவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக மோடி வகையறாக்கள் செய்த முயற்சி இப்போது அருண் ஜெய்ட்லிக்கு எதிராகவே திரும்பி விட்டது. 

டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அருண் ஜெய்ட்லி இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக அவதூறு வழக்கு போட்ட ஜெய்ட்லி அதே குற்றச்சாட்டுக்களை கீர்த்தி ஆஸாத் சொல்கிற போது வாய் திறக்க மறுக்கிறார்.

முடிந்தால் என் மீதும் வழக்கு தொடுங்கள் என்று கீர்த்தி ஆஸாத் சொல்லும் போது இந்தியாவின் மிகப் பெரிய சட்ட நிபுணர் அருண் ஜெய்ட்லி ஏன் பதில் பேசவில்லை?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அமித் ஷா, மோடி கும்பல் ஏன் இப்போது மௌனமாக உள்ளது?

மொத்தத்தில் கீர்த்தி ஆஸாத்தின் அதிரடி ஆட்டத்தில் அருண் ஜெய்ட்லி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பி விடுவார் போல!

**********************************************************************************************

இப்போது தற்போதைய பிரச்சினைக்கு வருவோம்.

பீகாடின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பகவத் ஜா ஆசாதின் மகனும் மூன்று முறை பாஜக எம்.பி ஆக இருந்து பின் காங்கிரஸ் சென்று தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யாக உள்ள கீர்த்தி ஆஸாத், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக அமித்ஷாவின் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷா மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.

இந்தியா டி-20 உலகக் கோப்பையை வென்றதும் ஜெய்ஷா, பயிற்சியாளர்  சங்கி கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவோடு அகமதாபாத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு கோப்பையுடன் சென்று வழிபட்டுள்ளார்.

"இந்திய வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனால் அந்த கோப்பையுடன் சர்ச்சிற்கு செல்ல முடியுமா? முகமது சிராஜால் அந்த கோப்பையை ஒரு மசூதிக்கு எடுத்துச் செல்ல முடியுமா இல்லை அர்ஷ்தீப் சிங்கால் ஒரு குருத்வாராவுக்கு கோப்பையை கொண்டு போக முடியுமா? இந்த உலகக் கோப்பை என்பது பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. அதை ஒரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களோடு சுருக்குவது மோசமான செயல். விளையாட்டில் மதத்தை கொண்டு வராதீர்கள்."

கீர்த்தி ஆசாதின் கேள்வி மிகவும் சரியானது என்பதற்கு அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் "யார் இந்த கீர்த்தி ஆசாத்" என்று கேட்டு கம்பீரும் வேறு சிலரும் திசை திருப்பியதே சான்று. 

பிகு: இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் மோடி என்பதை ஏன் யாருமே சொல்லவில்லை என்பது புதிராக உள்ளது. மோடி போட்டியை பார்க்க வந்திருந்தால் அதுவே இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து அவர்களின் விளையாட்டை பாதித்திருக்கும். 

50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இந்தியா தோற்க மோடியின் வருகைதானே முக்கியக் காரணம்!

பிகு 2 : டெல்லியில் உள்ள ஃபெரோட்ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம் என்று பெயர் வைத்ததையும் கீர்த்தி ஆசாத் கண்டித்தார். அவரை விட மிகக் கடுமையாக கண்டித்தவர் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. அப்படி அருண் ஜெய்ட்லி பெயரை வைக்க வேண்டுமென்றால் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டிருந்த தன் பெயரை நீக்கி விடுங்கள் என்றார். டெல்லி கிரிக்கெட் வாரியம் பேடியின் பெயரை நீக்கி விட்டது.


புதிய பின் குறிப்பு : எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது.