Friday, June 1, 2018

கா.ப.கா.க.ப. நல்ல செய்தி

காஷ்மீர் பற்றி காலையில் கண்ணில் பட்ட நல்ல செய்தி



(எவ்வளவு பெரிய தலைப்பு?)

ஆம். இன்றைய ஹிந்து இதழில் காலையில் முதலில் கண்ணில் பட்டதே அந்த செய்திதான்.

முன்பொரு காலத்தில், காஷ்மீரில் அமைதி நிலவிய காலத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் எழுதிய    பாடல்களை இப்போதைய இஸ்லாமிய கலைஞர்கள் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடியுள்ளனர்.

ரம்ஜான் நோம்பிலிருந்த பார்வையாளர்கள் மெய் மறந்து போயுள்ளார்கள். பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அற்புதமான கலைப் பொக்கிஷங்களை இழந்துள்ளோம் என்றும் பலரும் மனமாற வருந்தியுள்ளார்கள். இப்போதைய நிலை மாற வேண்டும் பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்று உளப்பூர்வமான விருப்பத்தை தெரிவித்து உள்ளார்கள்.

இந்த நிலை தொடர வேண்டும்.

இந்த மன நிலையை சீர் குலைக்க இரு தரப்பிலும் முயலாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக  இந்திய ராணுவம்  அமைதியாக இருக்க வேண்டும். 

4 comments:

  1. என்னா சார், நீங்களும் சங்கி-மங்கி சதிக்கு சிங்கி அடிக்கிரீங்க. ஒரேஒரு பண்டிட்ட காஷ்மீருக்குள்ள விட்டாலும் பழையபடி ரத்த ஆறு ஓடவிட்டுறுவானுக இந்த சங்கி-மங்கிக. இருநூறு வருசத்துக்கு முன்னாடி வெள்ளகாரன் எழுதி வச்சுருக்கான் இந்த பிராமனன்களுக்கு காஷ்மீர்ள இருந்து கன்யாகுமரிவரை ஒரே மூளை, ஓரே நினைப்பு, ஓரே செயல். எந்த புக்குல எழுதி வச்சுருக்கான்னு எங்கிட்ட கேக்காதீங்க நீங்களே கண்டுபுடிங்க! ஒங்களால கண்டுபுடிக்க முடியலனு வெக்கத்தவிட்டு கேட்டா நான் அந்த புக்க சொல்லுறேன்.

    ReplyDelete
  2. என்னா சார், நீங்களும் சங்கி-மங்கி சதிக்கு சிங்கி அடிக்கிரீங்க. ஒரேஒரு பண்டிட்ட காஷ்மீருக்குள்ள விட்டாலும் பழையபடி ரத்த ஆறு ஓடவிட்டுறுவானுக இந்த சங்கி-மங்கிக. இருநூறு வருசத்துக்கு முன்னாடி வெள்ளகாரன் எழுதி வச்சுருக்கான் இந்த பிராமனன்களுக்கு காஷ்மீர்ள இருந்து கன்யாகுமரிவரை ஒரே மூளை, ஓரே நினைப்பு, ஓரே செயல். எந்த புக்குல எழுதி வச்சுருக்கான்னு எங்கிட்ட கேக்காதீங்க நீங்களே கண்டுபுடிங்க! ஒங்களால கண்டுபுடிக்க முடியலனு வெக்கத்தவிட்டு கேட்டா நான் அந்த புக்க சொல்லுறேன்.

    ReplyDelete
  3. நேரு கூட ஒரு பண்டிட் தான் என்பது மேலே கருத்து சொன்ன அனானி அராபிய அடிமைக்கு தெரியல
    வெள்ளைக்காரன் இஸ்லாமியர்கள் பற்றி என்னவெல்லாம் சொல்லி இருக்கான் என்பது அராபிய அடிமை அனானிக்கு தெரியுமா ?
    பண்டிட் அந்த மண்ணின் மைந்தர்கள்

    ReplyDelete
  4. //இந்த மன நிலையை சீர் குலைக்க இரு தரப்பிலும் முயலாமல் இருக்க வேண்டும்//

    நான் என்ன அச்சப்பட்டேனோ அதுதான் பின்னூட்டங்களில் வெளிப்படுகிறது. நல்லவேளை பின்னூட்டம் போட்ட இரண்டு அனானிகளும் காஷ்மீரில் இல்லை. இருவருமே காஷ்மீர் பற்றி அறைகுறையாக அறின்தவர்கள் என்று தெரிகிறது

    ReplyDelete