Sunday, November 9, 2014

வேலூரில் ராகு கால விபரீதம்?

வேலூரின் பல இடங்களில் இன்று காவிக் கொடி கட்டப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகில் கிட்டத்தட்ட ஐநூறு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். என்ன பிரச்சினை என்று தெரிந்த ஒரு காவலரிடம் கேட்டதற்கு ஒரு சுவரொட்டியை பார்க்குமாறு கண்களால் ஜாடை காட்டி விட்டு போய் விட்டார்.

அந்த சுவரொட்டியில் இருந்தது என்ன?

ராஜேந்திர சோழன் அறியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் நடத்தும் சீருடைப் பேரணியாம். சீருடைப் பேரணி என்றால் கையில் தடியோடு செல்வது. அவர்கள் கொடி கட்டியுள்ள இடங்கள் எல்லாம் சிறுபான்மை மக்கள் வசிக்கிற, வணிகம் செய்கிற இடங்கள்.



அவர்கள் 4.25 மணிக்கு புறப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆக பேரணி நடக்கப் போவது ராகு காலத்தில். அவர்களின் நோக்கம் தெரிந்ததால் என்னவோ காவல்துறை குவிந்துள்ளது.

பார்ப்போம் எந்த விபரீதமும் நடக்காமல் தடுக்கிறார்களா என்று?

பின் குறிப்பு : எனக்கு ராகு காலத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் நம்பிக்கை உள்ள இவர்கள் இந்த நேரத்தை தேர்ந்தெடுத்ததே  ஏதோ கெட்டது செய்யதான் என்று தோன்றுகிறது.

3 comments:

  1. Please update if possible. Thanks

    ReplyDelete
  2. சிறுபான்மையினர் வசிக்கின்ற இடங்களில் பேரணி நடத்திட அனுமதியே தரக்கூடாது என்பது என் கருத்து நண்பரே

    ReplyDelete
  3. Rajenthra solan soul only will protect from this crasy boys. with stick marchfast is too much if each people start it will end up with clash only

    ReplyDelete