Thursday, August 16, 2012

அன்று பாராட்டினேன், அது தவறு: இன்று நொந்து போகும் நீதியரசர்

மம்தா பானர்ஜியை முன்பு பாராட்டிய ஞானபீட விருது பெற்ற
மகாஸ்வேதாதேவி, பின்பு வருந்தினார்.

இப்போது முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி திரு மார்கண்டேய
கட்ஜூ அவர்களின் முறை.

இனி வருந்தப் போவது
காந்தி, ராஜாஜி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

அவர்கள் மனசாட்சியுள்ள மனிதர்களா என்பதை
காலம் சொல்லும்.

இப்போது நீதியரசர் என்ன சொன்னார் என்பதை
பார்ப்போம்.

 ஹிட்லரின் நாஜிச பாணியில் மம்தா ஆட்சி நடத்துகிறார்
 மார்க்கண்டேய கட்ஜூ குற்றச்சாட்டு







கொல்கத்தா, ஆக.14
-மேற்கு வங்கம் வடக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பெல் பஹாரியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அவர் பேசி முடித்த வுடன் ஷிலத் தியா சவுத்திரி என்ற விவ சாயி எழுந்து “விவசாயிக ளுக்காக என்ன செய்தீர் கள்? விவசாயிகள் கையில் பணம் இல்லாததால் மடிந்து கொண்டிருக்கிறார் கள். வெறும் வாக்குறுதிகளால் எங்களுக்கு என்ன பயன்” என்று கேள்வியெழுப்பி னார். இதனால் ஆத்திரம டைந்த மம்தா, நீ ஒரு கொக்கி பார்ட்டி, நீ ஒரு மாவோயிஸ்ட், நீ ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இங்கு வந்திருக்கிறாய் என்று ஆங் காரமாக கத்தி கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட் டார். இதையடுத்து சவுத்திரி மேல் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பல் வேறு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரது கிராமத்திற்கு சென்று கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர். ஒரு விவசாயி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை சிறையில் அடைத் திருப்பதற்கு பல்வேறு தரப் பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க் கண்டேய கட்ஜூ கூறியிருப்பதாவது : மம்தா பானர்ஜி விவசாயியின் ஒரு கேள்வியைக் கூட சீரணித் துக் கொள்ள முடியாமல், மனம்போன போக்கில் சர் வாதிகாரி போன்று செயல் படுகிறார். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு மதிப் பளிக்காமல் மனித உரிமை களுக்கு எதிராக அப் பட்ட மாகச் செயல்படுகிறார். இதன் மூலம் அரசியல் தலை வராக இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டார். 


ஏற் கனவே கார்ட்டூன் வரைந்ததற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழக பேராசிரி யர் ஒருவரை சிறையில் அடைத்துள்ளார். அதே போன்று டிவி நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஒரு பல் கலைக்கழக மாணவியை (டானியா பரத்வாஜ்) மாவோ யிஸ்ட் என முத்தி ரை குத்தினார். மம்தா ஒட்டு மொத்தமாக படுமோசமான முறையில் வெளிப் படையாக அதிகா ரத்தை தவறாகப் பயன்படுத்தி வரு கிறார். சட்டத்திற்குப் புறம் பாகவும், மனித உரிமைக ளுக்கு எதிராகவும் பட்ட வர்த்தனமாக சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார். ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் ஆட்சி நடத்தியது போன்று நாஜிச பாணிக்கு இணையாக மம் தா ஆட்சி நடத்தி வருகிறார். மேற்கு வங்க அதிகாரி கள் ஒன்றை கவனிக்க வேண் டும். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோல் வியுற்ற பின்னர், ஜெர்மனி யின் நூரம்பெர்க் நகரில் நூரம்பெர்க் தீர்ப்பாயம் என்ற பெயரில் சர்வதேச ராணுவ நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதில் ஹிட்லரின் நாஜிப்படைக ளின் செயல்கள் குறித்து விசாரணை நடந்தது. அதில் போர்க் குற்றவாளிகளான ராணுவ வீரர்கள் நாங்கள் ஹிட்லர் சொன்னதைத் தான் செய்தோம் என்று வாதிட்டனர். 


ஆனால் அவர் களுக்கு கடைசியில் தூக்குத் தண்டனை தான் கிடைத்தது. ஆகவே அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மம் தாவின் செயல்பாடு களை நான் ஏற்கனவே பாராட்டி யுள்ளேன். ஆனால் தற் போது எனது கருத்தை மாற் றிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விவசாயி கைது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத் திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பல்பாசு கூறுகையில், மேற்கு வங் கத்தின் அரசு இயந்திரம் முழுவதும் கேள்வி கேட் கும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சிறிய விமர்சனத்தை கூட மம்தாவால் சகித்துக் கொள்ள முடியாதது மிக வும் வருந்தத் தக்கது. மம்தா வின் ஒட்டுமொத்த சர்வாதி காரத்தையே விவசாயி கைதுச் சம்பவம் காட்டுகி றது என்றார். 

நன்றி - தீக்கதிர்
 

2 comments:

  1. ஏன் பாராட்டினார்? அப்போதைய ஆட்சியாளர் பண்ணிய அட்டகாசத்தால். அதையும் சொல்லி \ எழுதி இருக்கலாமே.

    ReplyDelete
  2. அச்சச்சோ!
    மன்னிக்கவும், நீங்கள் கோரிய பக்கம் இல்லை அல்லது இப்போது கிடைக்காமல் இருக்கலாம்!

    ReplyDelete