Saturday, August 18, 2012

சென்னையில் கஞ்சா, கல்கத்தாவில் கற்பழிப்பு

அனைத்து தரப்பினரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும்
மம்தா பானர்ஜியின் சமீபத்திய குறி நீதிபதிகள். 

திரிணாமுல் குண்டர்களாலும் மம்தா போலீஸாலும் தாக்கப்பட்ட
பேராசியருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு தரச்சொல்லி மனித உரிமை
ஆணையம் ஆணையிட்டதால் நீதித்துறை மீது பாய்ந்து கொண்டு
உள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்விலும் இதே போல 
பேசியதற்கு நாடு முழுதும் கண்டனம் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கல்கத்தா
உயர் நீதிமன்ற நீதிபதி திரு  சமரேஷ்  பானர்ஜி  என்பவர்
மம்தாவை விமர்சனம் செய்துள்ளார்.

அதன் பிறகுதான் அவருக்கு பிரச்சினை தொடங்கியுள்ளது.
மிரட்டல் தொலைபேசிகள் வரத்தொடங்கி விட்டது. அதிலே
உச்சகட்டம் என்னவென்றால் ' உங்கள் வீட்டு பணிப்பெண்ணை
பாலியல் வன் கொடுமை செய்து விட்டதாய் வழக்கு போடுவோம்"
என்பதுதான்.

தமிழகத்தின் தர்மத்தாய் ஆட்சியில் நீதிபதிகளுக்கு கஞ்சா 
வழக்கு போடுவோம் என்று மிரட்டல் வந்தது.

மேற்கு வங்க தீதி இன்னும் ஒரு படி மேல் போய் கற்பழிப்பு வழக்கு
போடுவோம் என மிரட்டுகிறார்.

இவர்களின் ஆட்சியில் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை.
வெட்கக்கேடு!!!!!
 

2 comments:

  1. என்ன கொடுமை சார் இது..

    ReplyDelete
  2. மம்தா பண்ற தப்ப\அடாவடியை சொல்ற மாதிரி மார்க்சிச்ட் பொதுவுடமைவாதிகள் பற்றி நீங்க சொல்லவே இல்லையே. தொழிற்சங்கஙவாதி என்பது காரணமா? அல்ல அரசியல் நிறைய தெரிந்தது காரணமா? எங்களுக்கு அரசியல் கொஞ்சம் தான் தெரியும். தெரியாததை சொன்னா தெரிஞ்சிக்கிறோம்.

    ReplyDelete