Wednesday, June 20, 2012

அப்துல் கலாம் என்றால் சபலம்



கலாம் என்றால் கலகம் எனச்சொல்லி ஒரு புதிய கலகத்தை
உருவாக்கினார் கலைஞர். கலாம் என்பதற்கு அப்படி ஒரு 
அர்த்தம் உள்ளதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் 
பதவி ஆசையும் மீண்டும் ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற
சபலமும் நிறைந்தவர் என்பது மட்டும் தெளிவாக  தெரிகின்றது.

வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்பது திட்டவட்டமாக 
தெரிந்த பின்பே அவர்  தனக்கு விருப்பமில்லை  என்று சொன்னாரே
தவிர முதலில் அப்படி சொல்ல அவருக்கு மனம் வரவில்லை.

ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தவருக்கு ஐந்தாண்டுகள் 
ஓய்விற்குப் பிறகு ஏன் இந்த ஆசையோ?

ஜனாதிபதி பதவிக்கான அரசியல் ஞானம் அவருக்கு சிறிதும்
கிடையாது என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். பிரதிபா
பட்டீலும் கூட விதிவிலக்கல்ல.

ஆனால் அப்துல் கலாமிற்கு அரசியல் நேர்மை என்பது சிறிது
கூட தெரியாது என்பது அவர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதம்
அம்பலப் படுத்துகின்றது.

மம்தாவை ஆஹோ, ஓஹோ  என புகழ்ந்துள்ள அப்துல் கலாம்,
நேர்மையானவர், நாணயமானவர், பதவியை துறக்கும் தியாகம்
செய்ய தயாராக இருந்தவர், தேச நலனில் காண்பித்த உறுதி
என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டே போகிறார். 

அடாவடி மம்தாவை இவர் புகழ, புகழ குமட்டிக் கொண்டுதான்
வருகின்றது. குஜராத் கலவரத்தில் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க
பாஜக பயன்படுத்திய கைக்குட்டை திரு கலாம் என்பதை அவர்
புரிந்து கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

காங்கிரஸை மட்டம் தட்ட மம்தா ஏவிய ஆயுதமாகத்தான் தான்
உள்ளோம் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டதாகத் 
தெரியவில்லை. 

இவரை குடியரசுத் தலைவராக்க மம்தா நடத்தியது தேச நலனுக்கான
போராட்டம் என்றால் இவரை எப்படி மதிப்பிடுவது?

ஒரு நேர்மையான மனிதர் என்ற பிம்பத்தை அவரே தகர்த்துக்
கொண்டுள்ளார். மம்தா மாவோயிஸ்டு ஒரு வினோதக் 
கூட்டணி  என்றால், மம்தா அப்துல் கலாம் இன்னொரு 
வினோதக் கூட்டணி. இரண்டு கூட்டணிகளுமே நேர்மையற்ற
கூட்டணிதான்.

கலாம் என்றால் கலகம் இல்லை, சபலம்.....

9 comments:

  1. //குஜராத் கலவரத்தில் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க பாஜக பயன்படுத்திய கைக்குட்டை திரு கலாம் என்பதை அவர் புரிந்து கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

    காங்கிரஸை மட்டம் தட்ட மம்தா ஏவிய ஆயுதமாகத்தான் தான் உள்ளோம் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.//

    மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  2. In what way, Abdul Kalaam is inferior to Pranab? Since BJP proposed you people opposed then. Due to Mamtha support, you oppose now.

    ReplyDelete
  3. அப்துல் கலாம் நல்ல மனிதர் என்று நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையை அவர் குலைத்து விட்டார்

    ReplyDelete
  4. இந்தியாவின் உயர்ந்த பதவியில் இருந்தவரை கீழ்த்தரமாக எழுதியது சரியல்ல. கருணாநிதி சொன்னதை விட மோசமாக உள்ளது

    ReplyDelete
  5. அடடே, இது என்ன அப்துல் கலாம் பதிவிற்கு பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம் ஓளிந்து கொண்டே எழுதியுள்ளார்கள்?

    அனானி 1 & 3 = நன்றி.

    அனானி 2 - பிரணாப், பிரதீபா ,கலாம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். சமீப காலங்களில் ஜனாதிபதியாக சரியாக செயல்பட்டவர் திரு கே.ஆர்.நாராயணன் மட்டுமே. தவிர ஜனாதிபதி பதவிக்கான அரசியல் ஞானம் சிறிதும் இல்லாதவர் திரு அப்துல் கலாம் என்பதுதான் அன்றும் இன்றும் அவரை எதிர்ப்பதற்கான காரணம்.

    அனானி 4 : பதவி வேண்டும் என்ற சபலத்தோடு
    அவர் இல்லை என்று நிரூபியுங்கள் பார்ப்போம்

    ReplyDelete
  6. \\. சமீப காலங்களில் ஜனாதிபதியாக சரியாக செயல்பட்டவர் திரு கே.ஆர்.நாராயணன் மட்டுமே. தவிர ஜனாதிபதி பதவிக்கான அரசியல் ஞானம் சிறிதும் இல்லாதவர் திரு அப்துல் கலாம் என்பதுதான் அன்றும் இன்றும் அவரை எதிர்ப்பதற்கான காரணம். \\
    அப்படித்தான் நினைக்க வேண்டி உள்ளது. வேறே யாருமே இல்லையா?

    அருமையான பதிவு. நன்றி.

    http//www.dreamspaces.blogspot.com

    ReplyDelete
  7. கே ஆர் நாராயணன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா? மற்றபடி, எல்லோருமே அரசியல் ஆட்டம் ஆடுகிறார்கள். யாருமே ஒழுங்கில்லை என்பதால் இந்த ஜனாதிபதி தேர்தலை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள மறுக்கிறேன்.

    ReplyDelete
  8. k.r.narayanan was a corrupt. i know fulwell that he got 50 crores to give bail to one criminal.

    ReplyDelete
  9. ஐயா அறைகுறை அனானி, திரு கே.ஆர்.நாராயணன் நீதிபதியாக என்றுமே இருந்ததில்லை. வெளியுறவுத் துறை அதிகாரியாக, தூதராக பணியாற்றியவர். காதலித்து பர்மா பெண்ணை திருமணம் செய்து கொண்டது கூட அரசின் அனுமதி பெற்றுதான். அது அவசியம் இல்லை என்ற போதும் கூட. ஒரு நல்ல மனிதர் மீது அபாண்டமாக பழி போடும் போது ஆதாரத்தோடு சொல்லுங்கள். உங்கள் பதிவை நான் வெளியிடாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் இப்படி அபத்தமான கருத்துக்கள் சொல்பவர்களும் உள்ளார்கள் என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டுமே!

    ReplyDelete