Friday, June 8, 2012

‘தவறுக்காக வருந்துகிறேன்’‘தவறுக்காக வருந்துகிறேன்’ 
 
- மகா ஸ்வேதாதேவி

 
புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் சிவசங்கரன் பிள்ளையின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங் கேற்பதற்காக மகா ஸ்வேதாதேவி கேர ளாவுக்குச் சென்றிருந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மீது வஞ்ச மனம் கொண்ட சிலர் அந்த வங்க எழுத்தாள ரை ஒஞ்சியத்திற்கு சந்திரசேகரனின் வீட் டுக்கு நிர்பந்தமாக அழைத்துச் சென்ற னர். இதைத் தொடர்ந்து அவர், கேரள மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மாநிலச் செயலாளர் பினராயி விஜயனுக்கு எதி ராகவும் பொய்யான கடும் விமர்சனம் செய்து, ஜூன் 1அன்று பினராயிக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்.

 ஜூன் 4அன்றுஅதற்கு மறுப்புத் தெரிவித்து, “வணக்கத்திற்குரிய சகோதரிக்கு” என்று ஆரம்பித்து விளக்கமாக- விரிவாக ஒரு நீண்ட பகிரங்கக் கடிதத்தை மகா ஸ்வே தாதேவிக்கு பினராயி விஜயனும் எழுதி னார். கடிதத்தில் பினராயி கூறியிருந்த தாவது:- 

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள என் வீடு ஒரு அழகான மாளிகை என்று அவர்கள் தான் உங்களிடம் சொல்லி யிருக்கிறார் கள் என்று கருதுகிறேன்.எதுவாக இருந்தாலும், உங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் சொல்வதுபோல்தான் எனது வீடு உள்ளதா என்பதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ள, சிநே கப்பூர்வமாக நான் உங்களை என் வீட் டிற்கு அழைக்கிறேன். இந்த அழைப்பை மறுக்கமாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்களுக்கு வசதிப்படுகிற எந்த நாளி லும் நீங்கள் அங்கு வரலாம். அந்த வீட் டின் கதவுகள் திறந்தே இருக்கும்.உங்களுக்கு அத்தகைய விவரங்கள் சொன்னவர்கள் வேண்டுமென்றே உங் களுக்குச் சொல்லாமல்விட்ட ஒரு விசயத் தையும் தெரிவிக்கிறேன்:கொஞ்ச காலத்திற்கு முன்பு அரண் மனை போன்ற ஏதோ ஒரு வீட்டின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அது தான் என்னுடைய வீடு என்று சொல்லி, சிலர் கம்ப்யூட்டர் கிராபிக்சை பயன்படுத்தி விரிவாக வெளியிட்டார்கள். ஆனால் பின்னர் அந்த ஏமாற்று மோசடிவேலை தோற்றுப்போனது. அந்தப் பொய்ப் பிரச் சாரத்திற்குப் பின்னணியாய் இருந்து செயல்பட்ட தீய அரசியல் சக்தி எது என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது. மொத்த மக்களையும் தவறான சிந்த னைக்கு திருப்ப முயன்று தோற்றுப்போன அதே தந்திரத்தைத்தான் அதே தீய எண் ணம் கொண்டோர் இப்போது உங்க ளைத் தவறாகச் சிந்திக்கச்செய்யப் பயன் படுத்துகிறார்கள்.


ஏற்கனவே இருந்த என் வீட்டைப் புதுப்பிக்கமட்டுமே செய்தேன். வீடு இருக் கும் பகுதியின் கட்சிக் கிளைக்குத் தெரிந் தேதான் புதுப்பிக்கும் பணி நடைபெற் றது. அந்த வீடு மணிமாளிகையோ, அழகு அரண்மனையோ ஒன்றுமில்லை. அதைப் பார்த்தால் எவருக்கும் கட்சி யைக் குறித்த மேலான மதிப்பீட்டில் குறைவு ஏற்படாது. கணக்குகள் உள்பட அது தொடர்பான அனைத்தும் வெளிப் படையானவை. இதுதான் உண்மை என் பதால் என் வீட்டைப் பார்க்க யாரையும் தடுக்கிற பிரச்சனையே எழவில்லை. கடல்களுக்கு அப்பால் ஏதோ மிகத் தூரத் திலுள்ள தீவிலொன்றும் அந்த வீடு இல் லை. கட்சி செயல்படுகிற இந்தக் கேரளத் தில் உள்ள என் சொந்த கிராமத்தில்தான் அந்த வீடு அமைந்துள்ளது. இந்த உண் மையை நேரில் வந்து பார்ப்பதற்காகவே உங்களை நான் வீட்டிற்கு அழைக் கிறேன். மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றி உங்களுக்கு தீய அரசியல் நோக்குடன் தவறான எண்ணத்தை உண்டுபண்ணு கிறவர்களை அடையாளம் காணவும் இந்த வருகை உங்களுக்கு உதவும்.’’ என்று கூறியிருந்தார்.


கொல்கத்தாவில் தேசாபிமானி நிரு பர்க்குப் பேட்டியளித்த மகா ஸ்வேதா தேவி கூறியதாவது:-“கேரளத்திற்கு நான் சென்றபோது என்னிடம் பலர் பலதும் சொன்னார்கள். எனக்கு அதிக வயதாகிவிட்டது. என்னால் எல்லா விசயங்களையும் விளக்கமாக விசாரிக்கவும்,நேரில் சென்று பார்த்து அறிந்துகொள்ளவும் முடியவில்லை. விச யங்களைச் சரியாக மனதில் உள்வாங் காமல் செய்த விமர்சனம் தவறாகிவிட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.அடுத்த முறை நான் கேரளத்திற்குச் செல்லும்போது நிச்சயம் பினராயி விஜ யனைச் சந்திப்பேன். அவரது வீட்டுக்கும் செல்வேன்’’ என்ற மகா ஸ்வேதாதேவி; வருத்தம் தெரிவித்து பினராயி விஜயனுக் குக் கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.

 “தேசாபிமானி”யிலிருந்து தி.வ.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்

பாவம் மஹாஸ்வேதாதேவி  தொடர்ந்து வருத்தம் தெரிவித்துக்
கொண்டே இருக்கிறார். முன்பு மம்தாவை ஆதரித்ததற்காக,
இது இப்போது.

1 comment:

 1. perunthalavai kamaraj vazhnda vaadagai veetaiyae
  sondha veedu endru poster adiththu ottiya punniyavaangalai patri theriyuma? avarkaludan serndhu kondu kutthattam potta podi aazhvaargal
  patri kelvipattirukkirgala?

  kathai katta oruvan pirandhu vittal kaanagi

  vaazhvilum kalangamundu

  kappatra silapaer irundhuvittal kalvargal

  vaazhvilum niyayamundu.

  ReplyDelete