Tuesday, September 20, 2016

இவ்ளோதாங்க மதச்சார்பின்மை

 இதை விட எளிமையாக மதச்சார்பின்மையை விளக்கி விட முடியாது. தோழர் சுனில் மைத்ரா பேசியதை அப்படியேயும் தமிழில் மொழிபெயர்த்தும் பதிவு செய்த அருமைத் தோழர் இ.எம்.ஜோசப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி




What is secularism? – மதச்சார்பின்மை என்றால் என்ன? 





What is secularism ? Is it against religion? 


There was alround persecution of Christians by the Pagan religion around the first century AD. Christian youth were thrown to hungry lions It was reveled at by the Pagans of the Roman empire In the later years when Christians ascended to power, persecution of Pagans started. Pagans were burnt at the stakes by the Christians 


It is in this backdrop, the intelligentsia of Rome got divided into two schools of thought , the one,”sacred school” and the other “secular school”. 


It is important to note that those belonging to the secular school were however, very much believers .


They declared: 


We are not opposed to religion per se. Rather, we believe in religion
What we are opposed to, is infiltration of religion into the art of state craft
What we are opposed to, is religious fundamentalism
What we are opposed to, is religious obscurantism
What we are opposed to, is religious bigotry


One can be a believer of or not a believer of any religion. It is purely a right of the individual. It is a private affair in which the state has no right to intervene. 


(FROM THE SPEECH OF COM. SUNIL MAITRA - IN THE JAIPUR CONFERENCE OF AIIEA – 1988)//



(மதசார்பின்மை என்றால் என்ன? அது மதத்திற்கு எதிரானதா? 

கி.பி முதல் நூற்றாண்டு வாக்கில், அன்று புதிதாக உருவாகி எழுந்து வந்த கிறிஸ்துவ மதத்தினரை அன்றைய ரோமாபுரியின் புறச்சமய (பேகன் மதம்) ஆட்சியாளர்கள் கொடுமைப் படுத்தினர். கிறிஸ்தவ இளைஞர்களை பசித்த சிங்கங்களுக்கு இரையாக்கி ரசித்தனர். அடுத்த கட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில், புறச்சமயத்தினரை கொடுமைப்படுத்தினர். கழுவில் கட்டி வைத்து அவரகளை எரித்துக் கொன்றனர் 


இந்தக் கட்டத்தில் ரோமாபுரியில் உள்ள அறிஞர்கள் இரு கூறுகளாகப் பிரிந்தனர். “மதம் சார்ந்த சிந்தனையாளர்கள்” என்றும், “மத சார்பற்ற சிந்தனையாளர்கள்” என்றும் அவர்கள் பிரிந்தனர். மதம் சாராத சிந்தனையாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கூட மத நம்பிக்கையாளர்களே ஆவர். 


அவர்களின் முழக்கம் இதோ:


நாங்கள் மத எதிர்ப்பாளர்களர்கள் அல்லர் , மத நம்பிக்கை உள்ளவர்களே
அரசமைப்பில் மதம் ஊடுருவுவதை நாங்கள் எதிர்க்கிறோம்
மத அடிப்படைவாதத்தினை நாங்கள் எதிர்க்கிறோம்.
மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிறோம்.
மத வெறியினை எதிர்க்கிறோம் 


ஒருவர் எந்த மதத்தினையும் நம்புவதோ, அல்லது எந்த மதத்தினையும் நம்பாதிருப்பதோ அவரவர் தனிப்பட்ட உரிமை. அத்தகைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. 


(தோழர் சுனில் மைத்ரா அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஜெய்ப்பூர் (1988) மாநாட்டில் பேசியதிலிருந்து )

Monday, September 19, 2016

போர் வருமோ என்றோர் அச்சம் . . .




இந்திய ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதல் என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது இதய அஞ்சலி. இந்தியாவிற்காக உயிரையும் கொடுப்போம் என்று மோடி வகையறாக்கள் வெற்று முழக்கம் இடுகையில் ராணுவத்தினர் அதனை நிஜமாகவே செய்துள்ளனர். 

இத்தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் நான்கு பேர் என்றும் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்காணிப்பு பணியை வீரர்கள் மாற்றும் நேரத்தில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அதனால்தான் இறப்புக்கள் அதிகமானது என்றும் செய்திகள் சொல்கிறது. உள்ளுக்குள்ளேயே யாராவது துரோகி ஒற்று வேலை பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. 

இச்சம்பவத்தை வைத்து மோடி அரசு வில்லங்கமான வேலைகளில் ஈடுபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐம்பத்தி ஆறு இஞ்ச் மார்பு கொண்ட மோடி பிரதமரானால் ஒரு ஈ,காக்காய் கூட எல்லையை ஊடுறுவி உள்ளே வராது என்ற வசனங்கள் எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. 

அது மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாகவே மோடி அரசு காட்சியளிக்கிறது. சாமானிய மக்களுக்கான உறுதிமொழிகளை அலட்சியப்படுத்துகிற, மதவெறி செயல்திட்டத்தை அமலாக்க அலைகிற, பெரு முதலாளிகளின் தரகராக மாறி விட்ட பிரதமர் என்ற பிம்பம் மக்கள் மனதில் தோன்றி விட்டது.

அவர் வெளிநாடு கிளம்பினாலே, நாடெங்கிலும் கிண்டல்களும் நையாண்டியும் கிளம்பி விடுகிறது. ஜியோ வின் விளம்பரத் தூதர் என்று வேறு கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் குஜராத்திலும் உ.பி யிலும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புக்கு சவக்குழி தயாரிக்க துவங்கி விட்டார்கள். 

எனவே செல்வாக்கை தக்கவைக்க ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் மோடிக்கு உள்ளது. ஆக்கபூர்வமாக எதையும் அவர்களால் செய்ய முடியாது. அழிவுதான் அவர்களின் ஆயுதம்.

எனவே சர்வரோக நிவாரணியாக பாகிஸ்தான் மீது போர் என்றோ, அதை முன்வைத்து அவசரநிலை என்றோ முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஜனநாயகத்தை முடக்கினால் இந்தியாவை பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு விற்பதும் எளிது. 

எனவே இந்திய மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

தேசபக்தி என்று மோடி முழங்கினால் அதை நிராகரியுங்கள்.

மறந்து விட வேண்டாம். கார்கில் போரில் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்த பாரம்பரியம் பாரதீய ஜனதா கட்சியுடையது.

Sunday, September 18, 2016

நேற்று பேரறிவாளன், இன்று ராம்குமார். நாளை????



பாதுகாப்பான இடம் என்று சொல்லப்படுகிற சிறைச்சாலைகள்தான் இன்று ஆபத்தான இடங்களாக மாறி இருக்கிறது. மர்மப் பிரதேசங்களாக காட்சியளிக்கிறது.

சிறைச்சாலைக்குள் பேரறிவாளன் தாக்கப்படுகிறார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவன் முதல் நாள் வரை நட்போடு இருந்திருக்கிறான் என்கிறபோது அத்தாக்குதலுக்கு என்ன பின்னணி? தூண்டி விட்டது யார்? தாக்குதல் நிகழ்த்தியவனுக்கு என்ன ஆதாயம்? என ஏராளமான கேள்விகள் எழுகிறது. அரசு இயந்திரத்தின் பின்னணி இல்லாமல் இத்தாக்குதல் நிகழ்ந்திருக்காது.

ராம்குமாரின் மரணமும் ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது. ஸ்வாதியை கொலை செய்தது ராம்குமார் என்றால் அதனை நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து இப்படி ஒரு மர்ம மரணம் என்றால் இது நிச்சயம் அரசு நிகழ்த்திய கொலையாகவே தெரிகிறது. போலி எண்கவுன்டருக்கு பதிலாக மின் கம்பியை கடித்து தற்கொலை என்று கதை கட்டியுள்ளார்கள். 

ஸ்வாதி கொலை வழக்கை மிக எளிதாக தமிழக அரசு முடித்து விட்டது. அந்த வழக்கின் பின்னணியில் ஏதேனும் ரகசியங்கள் இருந்தால் அவை அப்படியே புதைந்து போய் விடும். அதனால் யாருக்குப் பலன்? யாருக்காக ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளான்?

அடுத்து தமிழகத்தின் சிறைச்சாலைகள் யாரை பலி வாங்கப் போகிறது?

ஜெயலலிதா இக்கேள்விகளுக்கெல்லாம் கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 

தமிழகத்தை ஒரு மோசமான ஆட்சியின் கீழ் மீண்டும் தள்ளிய காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட வாக்காளப் பெருங்குடி மக்களும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

வைர விழாவும் அந்த முன்னாள் டைப்பிஸ்டும்




எல்.ஐ.சி நிறுவனத்தின் வைர விழா ஆண்டு இது. இன்சூரன்ஸ் வாரம் மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கியது பற்றியும் மும்பையில் நடைபெற்ற விழாவில் அருண் ஜெய்ட்லி எல்.ஐ.சி க்கு எதிராகவே நன்றி கெட்டு  நடந்து கொண்டதையும் முன்னரே எழுதியுள்ளேன்.

எல்.ஐ.சி நிறுவனம் இன்று வைர விழா கொண்டாட முடிகிறது என்றால் அது மிகவும் முக்கியமானவர் தோழர் சுனில் மைத்ரா. 

எண்பதுகளின் முதல் பகுதியில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிளப்பதற்கான ஒரு மசோதாவை இந்திரா காந்தியின் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் முன் வைக்கிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையான போராட்டத்தை, பிரச்சாரத்தை, மக்கள் கருத்துத் திரட்டலை இந்திய வீதிகளில் நடத்துகிறது.

அதே போராட்டத்தை நாடாளுமன்றத்திற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. மக்களவையில் வீரியம் மிகுந்த அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்துகிறவர் தோழர் சுனில் மைத்ரா. சுதந்திரப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையை அனுபவித்தவர். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். ஏ.ஐ.ஐ.இ.ஏ உருவான பின்பு அதனை வளர்த்தெடுப்பதில் வேகம் காண்பித்ததால் எல்.ஐ.சி நிர்வாகத்தால் கோயம்பத்தூர், நாக்பூர் என்றெல்லாம் கல்கத்தாவிலிலிருந்து மாறுதல் செய்யப்பட்டவர். 

அகில இந்திய இணைச் செயலாளராக இருந்த அவரை மார்க்சிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தல் வேட்பாளராக கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் களமிறக்குகிறது.  அஜித் குமார் பஞ்சா என்ற பிற்காலத்தில் மந்திரியான காங்கிரஸ் காரரை தோற்கடித்து எம்.பி யாகிறார் தோழர் சுனில் மைத்ரா. 

எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதா, நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுகிறது. அம்மசோதா குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்று ஏராளமான ஆளுமைகள், அமைப்புக்கள் கடிதம் அனுப்புகின்றனர். அதன் பின்னணியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கடுமையான உழைப்பு இருந்தது. 

தேர்வுக்குழுவின் செயலாளராக இருந்த தோழர் சுனில் மைத்ரா, அந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றார். நாடெங்கிலும் தேர்வுக்குழு பயணம் செய்து கருத்துக்களை திரட்டுகிறது. எல்.ஐ.சி நிறுவனம் ஒரே நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்பதுதான்  அனைவரும் வலியுறுத்தும் கருத்தாக இருந்தாலும் தேர்வுக்குழுவின் பரிந்துரை என்னவோ ஆளும் கட்சியின் முடிவை ஒட்டியே அமைகிறது.

மசோதா வாக்கெடுப்பிற்கு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. தோழர் சுனில் மைத்ரா மக்களவையில் புயலாக உரையாற்றுகிறார். அவரது ஆணித்தரமான வாதங்களுக்கு அரசால் பதிலளிக்க முடியவில்லை. வாக்கெடுப்பு நடக்காமலேயே மக்களவை ஒத்தி வைக்கப்படுகிறது. மசோதா காலாவதியாகி விடுகிறது.

அடுத்த கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு அரசியலில் சில எதிர்பாராத நிகழ்வுகள். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ராஜீவ் காந்தியை சந்தித்து எல்.ஐ.சி ஏன் ஒரே நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்பதை விபரமாக விளக்குகிறது. தோழர் சுனில் மைத்ரா அக்காரணங்களை விளக்கி கடிதமாகவும் அளிக்கிறார். 

சில தினங்களுக்குப் பிறகு பிரதமர் ராஜீவ் காந்திக்கு தோழர் சுனில் மைத்ராவிற்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார். (ஆக கடிதங்களுக்கு பதில் அனுப்பும் நாகரீகம் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது) 

அக்கடிதம் என்ன சொன்னது?

"எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிளக்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம்."



அன்றைக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் தோழர் சுனில் மைத்ராவும் நடத்திய போராட்டமே எல்.ஐ.சி யை ஒரே நிறுவனமாக பாதுகாத்திருக்கிறது. எல்.ஐ.சி யின் வளர்ச்சி, தேசத்திற்கு அதன் பங்களிப்பு, வைரவிழா எல்லாமே அதனால் மட்டுமே சாத்தியமானது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் இதழான "பீப்பிள்ஸ் டெமாக்ரஸி" யின் ஆசிரியராகவும் தன் இறுதி மூச்சு வரை தோழர் சுனில் மைத்ரா செயல்பட்டார்.

இன்று அவரது இருபதாவது நினைவு நாள்.

தலைப்பு தொடர்பாக எதுவுமே எழுதவில்லை என்ற கேள்வி வருகிறதா? 

ராஜீவ் காந்தியை சந்தித்து பேசி விட்டு கிளம்புகையில் தோழர் சுனில் மைத்ராவைப் பார்த்து அவர் கேட்கிறார்.

எல்.ஐ.சி யில் நீங்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள்?

அவர் சொன்ன பதில்

டைப்பிஸ்ட்.

தோழர் சுனில் மைத்ரா நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கள் நாளை நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் கீழே

 




Saturday, September 17, 2016

அந்த அச்சம் அப்படியே நீடிக்கட்டும்


இதுதான் மோடியின் தலித் பாசம் . . . .




மோடியின் குஜராத் வருகையை முன்னிட்டு குஜராத் போலீஸ் ஊனா தலித் பேரணியை முன்னின்று செலுத்திய தலித் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானியைக் கைது செய்துள்ளது. அவர்கள் தலித்துகளைத் தீவிரவாத முத்திரை குத்தும் வேலையைத் துவங்கிவிட்டனர். தலித்துகளைத் தாக்குவதற்குப் பதில் என்னைத் தாக்குங்கள் என்று மோடி பேசிய வசனத்தின் உண்மையான பொருள் இதுதான்.

                                                                        - நன்றி = தோழர் ஸ்ரீரசா

இதையும் படித்து விடுங்கள்

Friday, September 16, 2016

தலைவர்களுக்கு தீக்குளிக்கத் தெரியாதா?



விக்னேஷின் தீக்குளிப்பு  உசுப்பேற்றிப் பேசும் தலைவர்கள் வாங்கிய அடுத்த பலி.

பிரச்சினைகளை சந்திக்க உணர்வுகளை தூண்டி விடுவதை மட்டுமே பிழைப்பாகக் கொண்டுள்ள அரசியல் தலைவர்கள் யாரும் தங்கள் உயிரைக் கொடுத்து தீர்வினைக் காண்பதில்லை. காவிரிப் பிரச்சினை இன்று தீராமல் இருப்பதற்கு அதனை விவசாயிகள் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என்ற தளங்களைத் தாண்டி உணர்வு ரீதியான ஒன்றாக சில சுயநலம் மிக்க கர்னாடக அரசியல்வாதிகள் மாற்றியதுதான் காரணம்.

விக்னேஷின் தீக்குளிப்பை நாம் தமிழர் கட்சி முயன்றிருந்தால் தடுத்திருக்கலாம். 



இப்படி ஒரு நிலைத்தகவலை அவர் முக நூலில் வெளியிட்ட பின்பு அவர் மீது கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இதனை தவிர்த்திருக்கலாம்.  அரசியல் ஆதாயத்திற்காக நாம் தமிழர் கட்சி மௌனமாக இருந்திருந்தால் அவர்களை விட மோசமானவர்கள் யாருமே இருக்க முடியாது.

தங்களை வலிமைப்படுத்துவதற்காக தொண்டர்களின் தற்கொலைகளை தலைவர்கள் விரும்புகிறார்களோ என்ற ஐயத்தை தனது ஓவியங்கள் மூலம் தோழர் ஸ்ரீரசா எழுப்பியுள்ளார்.




ஆம், தமிழக வரலாற்றில் தொண்டர்கள்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்காக, தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததற்காக, கைது செய்யப்பட்டதற்காக, நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியதற்காக என்று மாநிலத் தலைவர்களுக்காக தொடங்கி உள்ளூர் தலைவர்களுக்காக வரை தொண்டர்கள்தான் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தலைவர்கள் அல்ல.



தமிழகத்தில் மாறுபட்ட ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல முடியும். ஆதித்தமிழர் பேரவையின் மாநிலச் செயலாளர் தோழர் பி.நீலவேந்தன், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆறு சதவிகிதமாக  உயர்த்த வேண்டும் என்று தீக்குளித்த துயர நிகழ்வு அது.

அப்போது சொன்னதைத்தான் மீண்டும் இப்போது உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது.

தற்கொலை என்பது ஒரு போராட்ட நடவடிக்கை கிடையாது.

உசுப்பேத்தி விடுகிற தலைவர்கள் தங்கள் தொண்டர்களிடம் இனியாவது இதனைச் சொல்லட்டும்.