Tuesday, March 10, 2026

ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கிள்ளை ஹஸ்ரத் ரஹமத்துல்லா தர்காவில்

 


இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக ஆங்கில இந்து நாளிதழில் பார்த்து மன நிறைவு அடைந்த செய்தி இது.

சிதம்பரம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீபூவராகவசுவாமியின் உற்சவர் விக்கிரகத்தை மாசி மக தீர்த்தவாரி விழாவின் ஒரு பகுதியாக பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளையில் உள்ள ஹஸ்ரத் ரஹமதுல்லா தர்காவிற்கு கொண்டு வந்துள்ளனர். 

அங்கே இஸ்லாமியர்கள் அரை மணி நேரம் வழிபாடு செய்து பொன்னாடை, பழங்கள், தேங்காய்கள், மூன்று கிலோ அரிசி, 501 ரூபாய் என்று வழக்கமான காணிக்கையை செய்துள்ளனர்.

கோயில் சார்பாக தர்கா அறங்காவலர்களுக்கு மாலைகள் அணிவித்து வெல்லத்தை பிரசாதமாக கொடுத்துள்ளனர்.

சையத் ஹஸ்ரத் ரஹமதுல்லா என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு ஆற்காடு நவாப் அளித்த 600 ஏக்கர் நிலத்தை அளப்பதற்கு உப்பு வெங்கட் ராவ் என்று வருவாய் அதிகாரி உதவி செய்ய, அவருக்கு ஒரு சிறு பகுதி நிலத்தை (26 ஏக்கர்)  அளித்துள்ளார்.

அந்த நிலம் பின்பு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ஆலயத்தின் பராமரிப்பிற்கு வந்துள்ளது.

இதனால்தான் ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

எத்தனை ஆண்டுகளாக ?

அதிகம் இல்லை.

முன்னூறு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்தியை படிக்கையில் உண்மையிலேயே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது போன்ற சடங்குகள், இந்தியா முழுதும் பல இடங்களில் மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இதுதான் உதாரணம்.

இதனைத்தான் சங் பரிவார அமைப்புக்கள் சதிகள் மூலம் சிதைக்க முயற்சிக்கிறார்கள், திருப்பரங்குன்றம் போல, அவர்களுக்கு சில தீர்ப்பாளர்களும் உடந்தையாக உள்ளனர். 

2 comments:

  1. மாலை அணிவித்தால் சமூக நல்லிணக்கம் வந்து விடுமா ?
    சிங்கப்பூர் மாதிரி குற்றம் செய்பவர்களுக்கு பிரம்படி கொடுத்தால் சமூக நல்லிணக்கம் வரும் .

    ReplyDelete
    Replies
    1. மூடர்களால் மட்டுமே இப்படி அபத்தமாக பின்னூட்டமிட முடியும்

      Delete