சனாதனம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான சான்றை சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சார்யா அளித்துள்ளார், அரைகுறை தகவல்களை வைத்துக் கொண்டு பொறுப்பில்லாமல் பேசி தங்களின் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும் வெறிதான் இது. இது வர்ணாசிரமாக, மனு தர்மமாக பல பெயர்களில் வெளிப்படும். அடிப்படையில் எல்லாமும் பிரிவினையை ஏற்படுத்தி மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் ஏற்பாடுதான். எதிர்க்க வேண்டிய ஒன்றுதான்.
சரி, பத்து கோடி ரூபாய் கொடுக்கும் அளவிற்கு இந்த சாமியாருக்கு ஏது காசு? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பலரும் கோடிக்கணக்கில் காசு பார்த்ததாக சொல்கிறார்கள். அந்த ஊழல் காசா? அமலாக்கத்துறை இங்கே செல்லுமா?
நிற்க,
மார்க்சிஸ்ட் ககம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் கிரிமினல் ஷாவிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார்.
அமித்ஷாவோ அல்லது வேறெந்த சங்கியாவது இக்கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
No comments:
Post a Comment