Wednesday, September 27, 2023

சொச்ச பாரத் – மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கய்யா

 




டிமோ ஆட்சிக்கு வந்த 2014 ம் ஆண்டு மகாத்மா காந்தியை நினைவு கூற எல்லோரும் கையில் துடைப்பத்தோடு சாலைகளை பெருக்க வேண்டும் என்றார்.

மகாத்மா காந்தியின் மத நல்லிணக்கம், நேர்மை, கிராமப்புற முன்னேற்றம் போன்ற ஏராளமான விழுமியங்களை குழி தோண்டி புதைத்து விட்டு ஏதோ சுத்தம் மட்டும்தான் காந்தியின் அடையாளம் என்று கட்டமைத்தார். அதற்காக எல்லோரும் (அதாவது அரசுத்துறை, பொதுத்துறை ஊழியர்கள் மட்டும்) சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு படிவம் வேறு அனுப்பினார்கள்.

“நான் சுத்தமாக இருப்பேன். குப்பை போட மாட்டேன், யாரையும் குப்பை போட விட மாட்டேன், வாரத்திற்கு இரண்டு மணி நேரம் என்று வருடத்திற்கு 100 மணி நேரம் துடைப்பத்தோடு உழைப்பேன். நான் இன்னும் நூறு பேரை இந்த பணியில் இணைத்து அவர்களையும் நூறு மணி நேரம் துடைப்பத்தோடு அலைய வைப்பேன்”


அந்த ஷபத் வாசகங்கள் மேலே உள்ளது போலத்தான் இருக்கும்.

 


அந்த சொச்ச பாரத் கூத்தெல்லாம் இரண்டு மூன்று மாதங்களோடு முடிந்து போனது. தான் எடுத்த ஷபத்தை டிமோவே நிறைவேற்றவில்லை. சீன ஜனாதிபதி இந்தியா வந்த போது மகாபலிபுரம் கடற்கரையில் போட்ட சீனோடு சரி. அப்படி ஒவ்வொரு வாரமும் அவர் சொச்ச பாரத் செய்திருந்தால் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இருக்கும் குப்பைகளால் சமூக ஊடகங்களே நாறியிருக்கும்.

 இதோ ஆட்சியின் அந்திமக் காலத்தில் மீண்டும் சொச்ச பாரத் கூச்சல் தொடங்கி விட்டது. அதே படிவம் அதே ஷபத். தொலைபேசியில் காலர் ட்யூனாக புரியாத இந்தியில் சொச்ச பாரத், சொச்ச பாரத்.

 அரசின் உத்தரவுக்கு இணங்க, மேலதிகாரிகளின் கட்டளையை அமலாக்க அக்டோபர் முதல் நாள் சொச்ச பாரத் நடத்த பொதுத்துறை நிறுவனங்கள் துடைப்பத்தோடும் அதை விட முக்கியமாக காமெராவுடனானும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 வீடியோ எடுத்தால் பின்னணியில் ஒரு பாட்டு முழங்கட்டும்

 “நேற்று, இன்று, நாளை” திரைப்படத்தில் “தம்பி, நான் படிச்சேன் காஞ்சியில நேற்று” பாடலில் வரும்

 “தெருத்தெருவா கூட்டுவது பொது நலத் தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படமெடுத்தால் சுய நலம் உண்டு”

 

No comments:

Post a Comment