Thursday, July 8, 2021

எல்.முருகன் அமைச்சரானாலும் கூட.

 எல்.முருகன் அமைச்சரானதால் தலித் மக்கள் மீது மோடிக்கு பாசம், நேசம் என்றெல்லாம் கதை விடுகிறார்கள்.

 மோடியை விட்டுத் தள்ளுங்கள்.

 முதலில் முருகனுக்கு பட்டியிலின மக்கள் மீது பாசம் இருக்கிறதா? பாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கான உரிமைகள் குறித்து என்ன செய்துள்ளார்? தலித் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு துணை நின்றுள்ளாரா? குரல் கொடுத்துள்ளாரா?

 இந்த கேள்வியை வெறும் பாஜக மாநிலத் தலைவராக இருப்பதால் கேட்கவில்லை.

 தேசிய பட்டியிலின மக்கள் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் இவர். எஸ்.சி ஆணையத்திற்கு வந்த எத்தனை புகார்கள் மீது இவர் நடவடிக்கை எடுத்துள்ளார்?

 சம்பவங்களை என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியாவிட்டாலும் சில பிரச்சினைகளின் போது தலித் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் கொடுமை இழைத்த ஆதிக்க சக்திகளுக்கு ஆதவாக இருந்தார். எனவே இவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததும் நினைவுக்கு வந்தது.

 தலித் மக்களுக்காக உழைத்த காரணத்தால் கிடைத்த பதவி அல்ல இது. ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக தலித் மக்களுக்கு துரோகம் இழைத்ததால் கொடுக்கப்பட்ட பதவி.  இவர் ரொம்ப நல்லவர், தோழர் தொல்.திருமா ரொம்ப மோசம் என்ற சில மத்யமர் சங்கிகளின் ஒப்பீடே இவரைப் பற்றிய மதிப்பீட்டை நம்மால் செய்ய முடியும்.

 குஜராத் கலவரத்தை திசை திருப்ப வாஜ்பாயுக்கு அப்துல் கலாம் என்றொரு இஸ்லாமிய முகம் தேவைப்பட்டது. அது போல மோடிக்கு தேவைப்பட்ட ஒரு தலித் முகம் முருகன் அவ்வளவுதான்.

 சங்கிகள் அனைவரும் இவர் அமைச்சரானதை கொண்டாடுகிறார்களா?

 இதோ ஒரு சங்கியின் பதிவை பாருங்கள்,

 மாநிலத் தலைவர், நான்கு இடங்களில் தாமரையை மலர வைத்தவர் என்று சொன்னாலும் அவரை எப்படி மதிக்கிறார்கள் என்று பாருங்கள்.

 


மற்றவர்கள் முருகனை அவரது சங்கி அரசியல் காரணமாக எதிர்த்தால் சங்கிகளோ அவரை அவரது ஜாதி காரணமாக வெறுக்கிறார்கள்.

 இதுதான் நிஜமான பாஜக.

 

 

No comments:

Post a Comment