இது
சிப்பு சேகரில்லை. பாஜக மாநில நிர்வாகி சேகரின் பதிவு இது.
 மோடியை
மாமாமனிதன் என்று எழுதிய எழுத்துப் பிழை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை.
 ஆயிரம்
ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மாமனிதன் பிறப்பதாக அவர் சொல்கிறார். ஒரு பட்டியல் வேறு
போடுகிறார். இந்த பட்டியலில் உள்ளவர்களோடு மோடியை ஒப்பிடுவது அநியாயம். அதிமுகவினரை
டயர் நக்கி என்று சொல்வார்கள் அல்லவா! அதே பட்டத்தை இவருக்கும் கொடுக்கலாம்.
 இன்னொரு
விஷயமும் உள்ளது.
 ஆயிரம்
ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு மாமனிதர் வருவார் என்றால் இந்த  பட்டியலில் உள்ளவர்கள் வாழ்ந்த காலம் என்ன?
 வீர
பாண்டிய கட்டபொம்மன்  1760 லிருந்து 1799 வரை
வாழ்ந்தார்.
 சத்ரபதி
சிவாஜி  1630 முதல் 1680 வரை வாழ்ந்தார்.
 சாமி
விவேகானந்தர்.  1863 லிருந்து 1902 வரை வாழ்ந்தவர்
 வ.உ.சிதம்பரம்
பிள்ளை   1872 லிருந்து 1936 வரை வாழ்ந்தவர்.
 வாஞ்சி
நாதன்.1886 லிருந்து 1911 வரை வாழ்ந்தவர்.
 18
ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டு வரை 261 வருடங்களுக்குள் இவர்கள் வாழ்ந்த
காலம் முடிந்து விடுகிறது.
 ஆயிரம்
ஆண்டுகளுக்கு ஒரு மாமனிதன் பிறப்பான். அது மோடி என்றால் உங்கள் பட்டியலில் உள்ளவர்கள்
எல்லாம் மாமனிதர்கள் இல்லாமல் மாவு மனிதர்களா சேகரு!
 
 
No comments:
Post a Comment