Friday, July 3, 2015

அவர்களுக்கு வேலை மிச்சம்தான். ஆனால்???





கடந்த வாரம் அரக்கோணம் அருகே கீழ்ப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன். அப்போராட்டம் முடிந்து வேலூர் திரும்பும் வழியில் காபி குடிக்கலாம் என்று காவேரிப்பாக்கத்தில் உள்ள “முருகன் இட்லி கடை” யின் காவேரிப்பாக்கம் கிளைக்குள் நுழைந்தோம்.

பிளாஸ்டிக் கப்பில்தான் தண்ணீர் கொடுத்தார்கள். ஒரு எவர்சில்வர் டம்ப்ளர் போன்ற வடிவில் செய்யப்பட்ட பாத்திரத்திற்குள் பிளாஸ்டிக் கப்பை சொருகி தண்ணீர் தருகிறார்கள்.

பார்க்க புதுமையான ஏற்பாடாகத் தெரிந்தாலும் இரண்டு விதங்களில் மோசமானது. பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியின் வேலையை பறிக்கிறது. இன்னொன்று மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் மண்ணை மாசு படுத்தும் தன்மையுடையது.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முன்னூறு கார்களாவது நின்று போகும் என்றார்கள். அப்படியென்றால் குறைந்த பட்சம் ஆயிரம் பேராவது வந்து போவார்கள். அப்படியானால் ஒரு நாளைக்கு ஆயிரம், மாதத்திற்கு முப்பதாயிரம், ஒரு வருடத்திற்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பிளாஸ்டிக் கப்கள் இந்த ஒரு கடையில் மட்டும் கிடைக்கிறது. அப்படியென்றால் எல்லா கடைகளையும் சேர்ந்தால் மலைப்பாக வருகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நல்ல முடிவெடுப்ப்பார்கள?

2 comments:

  1. தோழரே! நீங்கள் வெளியிட்ட படத்தைப் பார்த்தால், ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளரை, இன்னொரு எவர்சில்வர் டம்ளருக்குள் மறைத்து, மறுபடியும் தருவது போல் இருக்கிறது. அடுத்தமுறை சென்றால் கவனிக்கவும்.

    ReplyDelete
  2. //பார்க்க புதுமையான ஏற்பாடாகத் தெரிந்தாலும் இரண்டு விதங்களில் மோசமானது. பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியின் வேலையை பறிக்கிறது. இன்னொன்று மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் மண்ணை மாசு படுத்தும் தன்மையுடையது.//

    நீங்க சொன்னது சரியாக இருந்தாலும் பாத்திரம் கழுவும் போது சரியாக கழுவுகிறார்கள் இல்லை,அழுக்கு தண்ணியில் கழுவுகிறார்கள் என்ற கவலை பலருக்கு இருந்திச்சு எனக்கும். முருகன் இட்லி கடையினர் ஒரு பிளாஸ்டிக் கப்பில்தான் தண்ணீர் கொடுத்துவிட்டு வீசி விடுகிறார்கள் அடுத்தவருக்கு புதிய பிளாஸ்டிக் கப்பில்தான் தண்ணீர் கொடுக்கிறார்கள் என்கிற போது நல்ல நம்பிக்கை தான் பிறக்கிறது.
    இவ்வளவு பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் பிளாஸ்டிக் re-used முறை கிடையாது recycling கிடையாது என்று பலரும் குற்றம் சொல்கிறார்கள். இந்த முறையினால் பாத்திரம் கழுவும் தொழிலாளிக்கு இங்கு வேலை கிடைப்பதோடு மேலும் பலருக்கு வேலை கிடைக்கும். மண்ணும் மாசு அடையாது.
    நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் குளிர்படுத்தபட்ட தண்ணீர் இலவசமா குடிப்பதற்கு தந்திருக்காங்க. மெசினில் கோலா போன்ற சீனி பானங்களை சாப்பிட்டு உடலை கெடுக்காம இருப்பதற்கு தான் இந்த ஏற்பாடு.தண்ணீர் குடிக்கும் மிடத்தில் நிறைய புதிய பிளாஸ்டிக்கப்புக இருக்கும் ஒரு முறை பாவித்த பின் குப்பை தொட்டிக்குள் வீசிவிடுவோம். இந்த பாவித்த கப்புகள் பாவித்த கோலா டப்பாக்கள் எல்லாம் வண்டி எடுத்து சென்ற அரைத்து புதிய பிளாஸ்டிக் கப்புகளாகவும் புதிய கோலா டப்பாக்களாகவும் வருகிறது.
    இங்கே உங்க கவலை ஒரு தொழிலாளியின் வேலையை பறி போகிறது என்ற கவலை தீர்ந்து பலருக்கு வேலை கிடைக்கிறது. அழுக்கு தண்ணியில் கழுவிய பாத்திரத்தில் தான் தண்ணீர் அருந்துகிறோமா என்ற என் போன்றவர்களின் கவலையும் தீர்கிறது.

    ReplyDelete