Sunday, July 12, 2015

அன்பு மணி சார், காப்பியடிக்கிறத கரெக்டா செய்யக்கூடாதா?

இன்று தமிழ் ஹிந்து மற்றும் ஆங்கில ஹிந்து இதழ்களில் முழு பக்கத்தில் வந்த அன்புமணி விளம்பரம்தான் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஹிட். 

ஒபாமாவின் தேர்தல் விளம்பரத்தைத்தான் சின்ன ஐய்யா காப்பி அடித்து விட்டார் என்பதையும் நம் மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.



ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஒபாமாவின் கண்களில் உள்ள சாந்தத்தை அன்புமணியிடம் காண முடியவில்லை. ஒபாமாவின் கண்களில் சாந்தம் இருந்தாலும் செயல்களில் அப்படி இல்லை என்பது வேறு விஷயம்.

ஜாதிய வெறியும் பதவி ஆசையும் குடிகொண்ட மனது இருக்கும் போது கண்களில் மட்டும் எப்படி சாந்தம் வரும்?

போட்டோவிற்காகவாவது கொஞ்சம் முயற்சித்திருக்கலாமே?

5 comments:

  1. Good thing copy not a problem.......oru poster copy pannakudatha camrade....

    Seshan.....

    ReplyDelete
  2. அன்புமணி அகராதியில் - மாற்றம் என்பதன் பொருள் மரம் வெட்டுவது, முன்னேற்றம் என்பது சாதி கலவரத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரை வெட்டுவது.

    ReplyDelete
  3. ஜாதிய வெறி மனதில் இருந்தால் கண்களில் சாந்தம் வராது.

    ReplyDelete
  4. எனக்குத் தோன்றுகிறது...எல்லோரும் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நோக்கி நகர்கிறார்கள். தமிழ்னாட்டில் 68 ஆண்டுகளாக நடக்காதது, பெரும்பான்மை சாதியிலிருந்து (அதனோடு ஐக்கியப்படுத்திக்கொள்பவர்) எந்த முதல்வரும் வந்ததில்லை. அன்புமணி விதிவிலக்காக முடியாது. ஏனென்றால், சந்தர்ப்பம் வந்தபோதெல்லாம் அவர் மற்றும் அவர் தந்தை, வன்னியர்களோடு ஐக்கியப்படுத்தி வந்துள்ளார்கள்.

    ஏன் தமிழ் மக்களால், தங்களுக்கு நல்லது செய்பவர்களை உயர்த்தமுடியவில்லை? நல்லக்கண்ணு போன்ற, மக்களுக்குக்காகவே வாழ்னாளைச் செலவழிக்கும், தலைவர்களை அவர்கள் வாழும்காலத்திலேயே உயர்த்தித் தனக்குப் பெருமை மட்டுமல்ல, நல்லதையும் செய்துகொள்ளாமல், வெறும் சிலை வைத்துப் பிற்காலத்தில் ஆகா..ஓகோ என்று புகழ்ந்து யாருக்குப் பிரயோசனம்? இன்றக்குக் 'காமராசர் ஆட்சி' என்று புலம்புவதைவிட, அவர் இருக்கும்போதே இன்னும் அங்கீகாரம் கொடுத்திருக்கலாமே.

    சரி.. அன்பு அவர்கள், மாற்றம்..முன்னேற்றம் போன்றவற்றை அவர் கட்சியில் முதலில் கொண்டுவரலாமே.

    ReplyDelete