Wednesday, July 15, 2015

போர்ஜரி செய்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி

ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் ஒருவர் பதிமூன்று லட்ச ரூபாய்க்கு காப்பீடு எடுத்து விட்டு சில மாதங்களில் இறந்தும் போகிறார். 

அவரது மனைவி பணம் கேட்டால் சில மாதங்கள் அலைய வைத்து விட்டு "தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதை அவர் மறைத்து விட்டார். எனவே பணம் கிடையாது" என்று கை விரித்து விடுகிறது அந்த கம்பெனி.

அதற்கு ஆதாரமாக ஒரு டாக்டரின் பிரிஸ்கிருப்ஷனைக் காட்டுகிறது. அது போலியானது என்று மனைவி மறுக்கிறார். நுகர்வோர் நீதிமன்றத்தில் அவருக்கு நியாயம் கிடைக்கிறது. கம்பெனி ஏற்றுக் கொள்ளவில்லை. மாநில நுகர்வோர்  ஆணையத்திற்குச் செல்கிறது. பிறகு தேசிய நுகர்வோர் ஆணையம் அந்தப் பெண்ணிற்கு பணம் தரச் சொல்லி உத்தரவு போடுகிறது.

தேசிய நுகர்வோர் ஆணையம் போர்ஜரியாக டாக்டர் பிரஸ்கிரிப்ஷனை தயாரித்த ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் கம்பெனியின் தலையில் குட்டுகிறது. 

கடைசியில் அந்த மனைவிக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏழு வருடங்கள் ஆகிறது.

முழுமையான விபரங்களை கீழே படித்துக் கொள்ளுங்கள்.

இப்படி மோசடி செய்யும் நிறுவனங்களுக்காகத்தான் மோடி அரசு பரிந்து கொள்கிறது. அவர்கள்தான் இந்திய ஏழை மக்களுக்கு காப்பீடு கொடுப்பார்கள் என்று கதை விடுகிறது.




 

4 comments:

  1. இந்த ஒரே காரணத்துக்காக இந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். இறந்தால் குடும்பத்துக்கு பாதுகாப்பு என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமே லைப் இன்சுரன்ஸ் எடுக்கப் படுகிறது. அதை மறுப்பவர்களுக்கு இன்சுரன்ஸ் விற்கும் உரிமை எதற்கு கொடுக்கவேண்டும்?

    ReplyDelete
  2. எனக்கும் இது போல் ஒரு அனுபவம். ஒரு தனியார் காப்பீடு முகவர் என்னை அணுகி காப்பீடு எடுக்க விண்ணப்பம் எழுதி வாங்கினார். எனக்கு அதிக அமில சுரப்பு உள்ளதால் (hyper acidity) விவரம் விண்ணப்பத்தில் எழுதி கையொப்பம் இட்டுக் கொடுத்தேன். முதல் premium கொடுத்தேன். கொஞ்சம் நாள் கழித்து policyயும் மற்றும் என்னுடைய விண்ணப்ப படிவ நகல் என்று கொஞ்சம் படிமங்களும் காப்பீடு நிறுவனம் அனுப்பியது.

    விண்ணப்ப படிவம் நகல்கள் என்று சொல்லப்பட்ட காகிதங்களைபார்த்தபோது அது நான் எழுதிய விண்ணப்பம் அல்ல என்றும் வியாதி மறைக்கப்பட்டு என்னுடைய கையொப்பம் forgery செய்யப்பட்டு உள்ளதை அறிந்தேன்.

    காப்பீட்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு forgeryயை நிருபீத்து கொடுத்த முதல் premium தொகையை திரும்பப் பெறுவதற்குள் பெரும் பாடு ஆகி விட்டது.

    --
    Jayakumar

    ReplyDelete
  3. இதை IRDA கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

    ReplyDelete
  4. அந்த நிறுவனத்தை இழுத்து மூடணும், போர்ஜரி செய்த ஆசாமிகளை குறைந்தபட்சம் ரெண்டு வருஷமாவது உள்ள போடணும்...

    ReplyDelete