Friday, July 31, 2015

அனுஷ்கா ஷர்மாவும் ஒரு மாநில அரசும்

திரு அப்துல் கலாம் மறைவின் போது அனுஷ்கா ஷர்மா என்ற ஹிந்தி திரைப்பட நடிகை அவரது பெயரை  தவறாக அப்துல் கலாம் ஆசாத் என்று எழுதி விட்டதற்காக சமூக வலைத்தளங்களில் அவரை போட்டுத் தாக்கினார்கள் என்று செய்தி படித்தேன்.

அப்துல் கலாம் என்று சொல்வதற்குப் பதிலாக  சட்டிஸ்கர் மாநில முதல்வர் ரமன்சிங் நரேந்திர மோடி என்று அபத்தமாகச் சொன்ன காணொளிப் பதிவை நானும் இரண்டு தினங்கள் முன்பாக பகிர்ந்து கொண்டேன்.

நேற்று வாட்ஸப்பில் ஒரு அரசு சுற்றறிக்கையின் நகல் வந்தது. அதிலே இரண்டு இடங்களில் சுழிக்கப்பட்டிருந்தது. நமக்குத்தான் ஹிந்தி தெரியாதே! அதனால் இன்று ஹிந்தி நன்றாகத் தெரிந்த தோழர் அதாவூர் ரஹ்மானிடம் என்ன விஷயம் என்று விளக்கச் சொன்னேன்.

அவரும் விளக்கம் சொன்னார்.

சட்டிஸ்கர் மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அது. முன்னாள் குடியரசுத்தலைவர் மறைவிற்காக ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கச் சொல்லும் சுற்றறிக்கையாம். ஒரு வாரம் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க வேண்டும், எந்த அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது என்று அரசுச் செயலாளர் வெளியிட்ட உத்தரவு என்று அவர் விளக்கினார்.

இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று கேட்டேன்.

குஜராத் மாநில பாஜக அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பெயரை கீழுள்ளவாறு எழுதியுள்ளதாகச் சொன்னார்.

அப்துல் கலாம் ஆசாத்.


அனுஷ்கா ஷர்மா இதை அறிந்தால் மகிழ்ச்சியடைவார் அல்லவா?
 

1 comment:

  1. அய்யோ பாவம். இந்தச் சுற்றறிக்கை தயாரித்தவர் 80 வயது கிழவராயிருக்கும். அதுதான் 'அபுல் கலாம் ஆசாத்துக்கும் அப்துல் கலாமிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

    ReplyDelete