Tuesday, April 8, 2014

ராமனுக்கு ஏன் இந்த சோதனையோ?




 http://www.glitters20.com/wp-content/uploads/2012/09/Ram-Navami-44.gif
கடவுள் என்று சொல்பவருண்டு,
கடவுளின் அவதாரம் 
என்போரும் உண்டு.
கடவுளின் குணத்தோடு 
மனிதனாய் வாழ்ந்தவர் 
என்றும் சொல்பவருண்டு.
கற்பனைப் பாத்திரம்தான் 
என்று அறிவை துணைக்கழைத்து
ஆணித்தரமாய் சொல்பவர் உண்டு.

அவர்பக்கம் நின்றே
பார்த்தாலும் கூட
சுவாரஸ்யமான பாத்திரம்
என்றே உரைப்பேன் நான்.

தந்தை சொல் மந்திரமென்று
மரவுரி அணிந்து
கானகம் சென்றான் அவன்.
கட்டிய தாரத்தை தீயிலும்
குதிக்கச் சொல்லி
பின் காட்டிற்கும் அனுப்பி
கலங்கவும் வைத்தவன்.

மறைந்து நின்றும் கொன்றுள்ளான்.
ஆயுதம் இழந்த அரசனை
நாளை வா என்று
அனுப்பவும் செய்தவன்.

மண்ணாசை இல்லாமல்
தம்பிக்கு மணி முடி அளித்தான்.
மிருகமாய்ப் பிறந்தவனை,
கானகத்தின் வேடனை,
அரக்கர் குல வீடனணை
தம்பிகளாய் ஏற்று
சமத்துவமும் சொன்னான் அவன்.

மற்ற நாளில்
மறந்தே போனவர்கள்
கையில் மை வைக்கும்
நேரம் வரும் போது மட்டும்
மகுடம் சூட்டிக் கொள்ள
கண்ணில் ஆசை பொங்க
உன் பெயர் சொல்லி
வலம் வருது 
ஒரு வேடதாரிக் கூட்டம்
சமத்துவத்தை சாகடிக்க.

அட ராமா!
உனக்கு ஏன் இந்த சோதனையோ!

4 comments:

  1. அந்த ராமனா?நான் இந்த ராமனோ என்று நினைத்தேன்!

    ReplyDelete
  2. RAMAN ETHANAI RAMANADI ?

    Very Good Mr Raman

    ReplyDelete
  3. ராமன் நல்லவரா? கெட்டவரா?

    நான் ரெண்டு பேரையும் கேட்கிறேன்

    ReplyDelete
  4. ஹலோ அனானி, தெரியலயே சார், நான் ரெண்டு பேரையுமே சொல்றேன்

    ReplyDelete