Sunday, April 6, 2014

தேசத்தை பிளக்க முதலில் சொன்னது மோடி கட்சியா? முஸ்லீம் லீக்கா?



http://globetravelblog.com/wp-content/uploads/2013/10/Wahga-Border2.jpg
நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது. பரிவார கும்பல்  வெளியிட்ட பிரசுரத்தில் அபாயகரமான அம்சம் ஒன்று உள்ளதாக சொல்லியிருந்தேன். அது பற்றி இப்பதிவில் காண்போம்.

இந்தியாவை பிளந்த முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரஹமானுக்கா ஓட்டு என்பது அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி. பாவம் அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை.

இந்தியாவை இரண்டாக பிரித்து முஸ்லீம்களை அனுப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது இந்து மகா சபாவும் சவர்க்கரும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை போலும். சவர்க்கருக்குப் பின்புதான் முகமது அலி ஜின்னா அந்த கோரிக்கையை வைத்தார். இந்திய பிரிவினைக்கு பிள்ளையார் சுழி போட்டவர்களே இவர்கள்தான். விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கூட்டம் ஆர்.எஸ்.எஸ் என்பதை மறைத்து விட்டு போலி தேசிய உணர்வு பேசுகிற பொறுப்பற்றவர்கள் இவர்கள் இப்படித்தான் புரட்டு வேலை செய்வார்கள்.

பாகிஸ்தானுக்கு போன முஸ்லீம்களை விட இந்தியாதான் எங்கள் நாடு என்று இங்கேயே தங்கிய முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாதான் எங்கள் தேசம் என்று கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் தலைமை தாங்கிய கட்சியின் பெயரே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தான். அப்படியிருக்கும் போது தேசத்தை பிளந்தவர்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய்.

இவர்கள் மறைக்கிற இன்னொரு உண்மையும் உண்டு. காஷ்மீரின் இந்து மன்னர் ஹரி சிங் இந்தியாவோடு இணைய விரும்பவில்லை. ஷேக் அப்துல்லா தலைமையிலான முஸ்லீம்களின் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சித்தான் இந்தியாவோடு இணைய வேண்டும் என்று வற்புறுத்தியது.

இன்றைக்கு இந்திய ஒற்றுமையை பிளப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருப்பது சங் பரிவாரங்கள்தான். பொறுப்பற்ற விஷப் பிரச்சாரம் செய்யும் நோட்டீஸ் அதற்கு ஒரு உதாரணம்.

2 comments:

  1. Are you slave to China for a long time, or just recently?

    ReplyDelete
  2. வாய்யா மெண்டல், இங்க சீனா எங்க வருது?

    ReplyDelete