Tuesday, April 1, 2014

புது விதமாய் பயத்தம்பருப்பு அல்வா



நாக்பூரில் அகில இந்திய மாநாடு சென்றிருந்த போது ஒரு நாள் இரவு மூங்தால் (பயத்தம்பருப்பு) அல்வா என்ற ஒரு இனிப்பு வழங்கினார்கள். திருநெல்வேலி பக்கம் கடலைப் பருப்பில் வெல்லம் போட்டு செய்கிற ஒக்காரை என்ற இனிப்பு போலவே அதன் சுவை இருந்தது. (பஃபே முறையில் உணவு வழங்கப்பட்டதால் வேறு இரண்டு கவுண்டர்களில் வெட்கப்படாமல் வாங்கி சாப்பிட்டேன் என்பது ரகசியம்) அதை நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்று எண்ணி களம் இறங்கினேன்.

சில வருடங்களுக்கு முன்பு ஒக்காரை தயார் செய்த அனுபவம் இருந்ததால் அந்த அடிப்படையிலேயே பயத்தம்பருப்பு அல்வா தயாரித்தேன். இப்போது அதன் செய்முறை.

முதலில் பயத்தம்பருப்பை நன்றாக வறுத்து சுடு தண்ணீரில் நன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த பயத்தம்பருப்போடு தேங்காய் துறுவல் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அறைத்துக் கொள்ளவும்.

பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து ஆறிய பின்பு உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு சர்க்கரை பாகு வைத்து நன்றாக கொதித்து வரும் வேளையில் அதில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது முந்திரி ஏலக்காய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பறிமாறவும்.

சர்க்கரையின் அளவைக் குறைத்தால் அது ஒக்காரை போல உதிர் உதிராக வரும். ஆனால் சுவை கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். அதற்கு இந்த வடிவம் உத்தமம்.












4 comments:

  1. You better concentrate with cooking instead of politics

    ReplyDelete
  2. என்ன அனானி என் அரசியல் கேள்விகளூக்கு உன்னால பதில் சொல்ல முடியலயா?

    ReplyDelete
  3. ஆஹா! செய்துப் பார்த்துட வேண்டியதுதான்

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)

    ReplyDelete