Monday, March 14, 2011

கலைஞருக்கு ஸ்பெக்ட்ரம் ராசா கடிதம்


தற்போது மின் அஞ்சல்களில் சூடாக உலாவிக் கொண்டிருக்கும் 
கடிதம்  இது.

யாம் பெற்ற இன்பம் இந்த வையகம்  பெறவே
அக்கடிதம் கீழே 

ஒரிஜினலாய் தயாரித்தவருக்கு 
என் வாழ்த்துக்கள் 
பாராட்டுக்கள் 

அன்புள்ள தலைவரே…..

நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…



நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ?



சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… ? நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…



முதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெரும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… ? அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள்.



நான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…



அதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன்.



ஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று.



அந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… ? நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…

 இதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே…   ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..



இந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து வளர்த்தார்கள். இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…

பெரம்பலூரில், அந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை.   போற்றவும் இல்லை.



ஆனால் இன்று …. …. ….. ….



ஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை.   எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… ?



நான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. ? அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன்.   என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே ?.



என்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… ?



ஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….



நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…



பதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் என்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.



அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….



நான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே….



இந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..



உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.



“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”



சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..



ஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு



ஆண்டிமுத்து ராசா.




பின் குறிப்பு : ஒரு வேளை ராசாவே  இது போன்ற கடிதத்தை  கலைஞருக்கு   அனுப்பினால்  அதன் பின்  ராசாவின்  நிலை
என்ன ஆகும்? 
 

6 comments:

  1. கவுண்டமணி பாணியில் படித்தால் சுவை கூடுதலாகத் தெரிகிறது.

    ReplyDelete
  2. its neither funny nor has any message. just a malice by an upper caste person. pls dont share such stuff. thanks

    ReplyDelete
  3. When the Spectrum Issue came, It not only exposed corruption to unimaginable proportion, It also exposed the power of brokers, the true face of Capitalists such as Rattan (Rotten) Tata. It further exposed that politicians will take Caste as a Shield to cover this misdeeds. If you have any objection in the matter, write it and if it is genuine, I will accept, Though I did not write it. Now I feel that some wordings such as drinking full etc are over. Please do not give communal colour like Kalaignar

    ReplyDelete
  4. இதைவிட பெருசா தானைத்தலைவி ராஜீவ் காந்திக்கு எழுதி, எம்ஜியாரை கீசிருக்காங்க. அது மெய்யாலுமா எழுதினது. கெட்ச்சா அத்தயும் போடு தலீவா.

    ReplyDelete
  5. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

    ReplyDelete