Sunday, March 6, 2011

அர்ஜுன் சிங்கோடு புதைந்து போன ராஜீவ் மர்மங்கள்

முன்னாள் மத்தியமைச்சர்  அர்ஜுன்சிங்கின் மரணம்  காங்கிரஸ் கட்சியினருக்கு  அதிலும் குறிப்பாக  சோனியா காந்தி வகையறாக்களுக்குநிம்மதி அளித்திருக்கும்.  ராஜீவ் காந்தி காலத்தில் அதிகம் அலைக்கழிக்கப்பட்ட  அரசியல்வாதி  அர்ஜுன்சிங்தான். காங்கிரஸ் கலாச்சாரத்திற்கு  ஏற்ப லாட்டரிசீட்டு  ஊழல் புகாரில் சிக்கிய இந்த புண்ணியாத்மா, ராஜீவ் காந்தி காலத்தில்தான்  எத்தனை பதவிகளில் மாற்றி, மாற்றி பந்தாடப்பட்டார்! 

மத்தியப் பிரதேச  முதல்வர், பின்பு பஞ்சாப் மாநில ஆளுநர், பின்பு
புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் (இப்போது  காங்கிரஸ் கட்சியில் அந்த பதவி இருக்கிறதா?  அப்போது 
காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் (இந்த பதவி கூட இப்போது காங்கிரசில் இல்லை)  என்ற பதவியில் இருந்த திரு 
கமலாபதி திரிபாதியை   மட்டம் தட்டுவதற்காக  ராஜீவ் காந்தி உருவாக்கியபதவி அது) , பின்பு அதிலிருந்தும் கல்தா  என்று பந்தாடப்பட்ட அர்ஜுன் சிங்கிற்கும்  ராஜீவ் காந்தி இறந்த பின்பு பிரதமர் பதவி கனவு இருந்தது. அது நிறைவேறாத காரணத்தால்  அதே கனவில் இருந்து ஏமாற்றமடைந்த  என்.டி.திவாரியோடு (ஆமாங்க. சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கி வெளியேறிய அதே ஆந்திர மாநில ஆளுநர் பெருசுதான்) தனிக்கட்சி துவங்கி போணியாகாமல்  தாய்க்கழகத்திலேயே  ஐக்கியம் ஆனவர். 

ராஜீவ் காந்தியின்  ஏராளமான ரகசியங்களை அறிந்தவர் இவர்தான். யூனியன் கார்பைட் முதலாளி வாரன்  ஆண்டர்சன்,  இந்தியாவிலிருந்து 
அமெரிககா  தப்பி ஓடிய, அதற்காக நடந்த பேரங்கள் குறித்து அறிந்தவர்கள்  மூவர்தான். ராஜீவ், அர்ஜுன் மற்றும் ஆண்டர்சந்தான் அவர்கள். இதிலே ஆண்டர்சன் வாய் திறக்கப்போவதில்லை.  எல்லாம் 
ராஜீவிற்கு தெரியும்  என்று சொன்ன அர்ஜுன் சிங்கை  அதட்டல் போட்டு 
அடக்கி விட்டார்கள்.  

ஆனால்  என்றாவது ஒரு நாள் எல்லா குப்பையையும்  அர்ஜுன் சிங் 
வெளியிடலாம்  என்ற  எதிர்பார்ப்பு இருந்தது. போபாலோடு  இல்லாமல்
வேறு பல ரகசியங்களும் கூட வெளி வந்திருக்கலாம். இப்போது அர்ஜுன் 
சிங் சடலத்தோடு  அவையும் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும். 

இதே போல போபோர்ஸ் ஊழல் தொடர்பானவர்களும் மண்டையைப் 
போட்டால்  சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் அது எவ்வளவு
மகிழ்ச்சியான  செய்தியாக இருக்கும்!


  
 

 

No comments:

Post a Comment