கடந்த மூன்று நாட்களாக தோழர் சு.வெங்கடேசன் முக நூலில் வறு பட்டுக் கொண்டிருக்கிறார். காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது எப்படி வன்மம் தெளிக்கப்படுவதற்கான காரணமாக அமைந்ததோ அது போல இப்போதைய வன்மத்திற்கு "வேள்பாரி" நாவலின் விற்பனை ஒரு லட்சம் பிரதிகளை கடந்திருப்பது காரணமாக உள்ளது.
பெரும்பாலும் எழுத்தாளர்கள் . . .
சுவாரஸ்யமாக எழுத முடியாத எழுத்தாளர்கள், இரண்டாவது பதிப்பை காணாதவர்கள்(இடதுசாரிகள் என்ற வரையறைக்குள்ளும் வருபவர்கள்) . சி.பி.எம் மீது ஒவ்வாமை கொண்டவர்கள், ரஜினிகாந்த் கலந்து கொண்டது வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது. அதனால் முற்போக்கு முகாமில் இருக்கும் கமலஹாசன் ரசிகர்களும் இணைந்து விட்டனர்.
அத்தனை வன்மத்திற்கும் ஒரே ஒரு காரணம்தான் உண்டு.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரு நூலின் விற்பனை ஒரு லட்சத்தை கடப்பதா என்ற பொறாமையன்றி வேறில்லை.
இது ஒன்றும் புதிதல்லவே!
திருவிளையாடலில் வந்த வசனம்தானே!
No comments:
Post a Comment