Sunday, June 20, 2021

பொறியில் சிக்கிய விளக்கெண்ணெய் அனாமதேயம்.

 


 ராமர் கோயிலுக்கு இடம் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் குறித்து மூன்று நாட்கள் முன்பு எழுதிய பதிவில் முட்டாள் சங்கிகள் யாராவது மாட்டிக் கொள்வதற்காக ஒரு சிறிய பொறியை வைத்திருந்தேன். அதே போல ஒரு அனாமதேயம் பொங்கி வந்து சிக்கிக் கொண்டது.

 அந்த அனாமதேயத்தின் பின்னூட்டம் கீழே

 நீ பார்த்த அதே ஹிந்து பேப்பரில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் செயலாளர் விளக்கம் கொடுத்துள்ளாரே அது உன் குருட்டுக் கண்ணுக்கு தெரியலையா? பணம் வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்பட்டுள்ளது. அதில் எங்கே ஊழல் வரும். சமஜ்வாடி கட்சிக்காரனே சந்தை மதிப்பு 5 கோடியே எண்பது லட்சம் என்று சொல்றான். நீ மூன்று கோடின்னு கதை விடறே! ராமர் கொயில் விஷயத்தில் விளையாடாதே

 நான் அளித்த பதிலும் இங்கே

 

வா, அனாமதேயம், நீ வருவேன்னு எனக்கு தெரியும். நீ புத்திசாலியா இல்லை முட்டாளா? ஹிந்து செய்தியை அடிப்படையா வைத்து எழுதினது கரெக்டுதான். ஆனா அந்த விளக்கெண்ணெய் விளக்கத்தையும் எழுதி அசிங்கப்படுத்தச் சொல்றியே, தனி பதிவாகவே எழுதிடறேன். 5.8 கோடியை மூன்று கோடி என்று எழுதியதே இப்படி யாராவது வந்து மாட்டிக்க விரிச்ச வலைதான். இப்படி மாட்டிக்கிட்டயே தம்பி. அப்போ பத்து கோடி ரூபாய் ஊழல்தானே!

 சரி இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.

 

ராமர் கோயில் ட்ரஸ்ட் என்ன விளக்கம் கொடுத்திருந்தது?

 

நிலத்தின் உரிமையாளருக்கு சில கமிட்மெண்ட் இருந்தன. அதனால்  அவர் இருவருக்கு விற்க, அவர்களிடமிருந்து நாங்கள் வாங்கினோம். நாங்கள் யாரிடமிருந்து நிலத்தை வாங்கினோமோ அவர்களுக்கு வங்கி மூலமாகத்தான் பணம் கொடுத்தோம். எனவே இதில் எந்த ஊழலும் இல்லை. இதுதான் அந்த விளக்கம். இந்த விளக்கெண்ணெய் விளக்கத்தை படித்ததும் எனக்கு எழுந்த கேள்விகள் கீழே.

 

குசும் பதக்கின் நிலத்தை ட்ரஸ்ட் நேரடியாக வாங்காமல்  ஏன் சுல்தான் அன்சாரி,  ரவி திவாரி     இரட்டையரிடமிருந்து வாங்க வேண்டும்?

 

குசும் பதக் விற்கும் போது இரண்டு கோடியாக இருந்த நிலத்தின் மதிப்பு பத்து நிமிடங்களில்  18.5 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி?

 

குசும் பதக் ஏன்  சந்தை மதிப்பிலிருந்து மூன்று கோடியே எண்பது லட்சம் ரூபாய் குறைவாக நிலத்தை விற்க வேண்டும்?

 

சந்தை மதிப்பை விட குறைவான விலையில் வாங்கிய  சுல்தான் அன்சாரி, ரவி திவாரி ஏன் ராமர் கோயில் ட்ரஸ்டிற்கு சந்தை விலையை விட பனிரெண்டு கோடியே எழுபது லட்சம் ரூபாய்க்கு விற்றார்கள்?

 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். தீர்ப்புக்குப் பின் விலை உயர்ந்து விட்டது என்று ஒரு மத்யமர் சங்கி நேற்று ஒரு புது விளக்கம் கொடுத்திருந்தார். (ட்ரஸ்ட் எதுவும் அப்படி கொடுக்கவில்லை)

 

சரி அப்படியே இருந்தாலும் ட்ரஸ்ட் யாருடன் ஒப்பந்தம் போட்டிருந்தது?

 

நிலத்தின் ஒரிஜினல் உரிமையாளர் குசும் பதக்கிடமா?

 

அல்லது

 

இவர்களுக்கு நிலத்தை விற்ற ரவி திவாரி, சுல்தான் அன்சாரியிடமா?

 

ட்ரஸ்ட் வாங்குவதற்கு பத்து நிமிடம் முன்பு வரை நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத சுல்தான் அன்சாரி, ரவி திவாரி ஆகியோருடன் ட்ரஸ்ட் ஒப்பந்தம் போட்டிருந்தால் அது செல்லத்தக்கதா?

 

குசும் பதக்கோடு ஒப்பந்தம் போட்டிருந்தால் அவரிடமிருந்து ஏன் நிலத்தை வாங்கவில்லை?

 

ட்ரஸ்ட் வாங்கிய  பத்திரப்பதிவுக்கு ட்ரஸ்ட் உறுப்பினர் அணில் சர்மாவும் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயாவும் சாட்சிக்கையெழுத்து போட்டது சரி.  ட்ரஸ்டிற்கு சம்பந்தமில்லாத முதல் பத்திரப் பதிவிற்கும் அவர்கள் ஏன் சாட்சிக்கையெழுத்திட வேண்டும்?

 

ஐந்து கோடியே எண்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்குவதால் முத்திரைத்தாள் கட்டணத்தில் தேவையற்ற பண விரயம் ட்ரஸ்டுக்குத்தானே?

 

இதெல்லாம் டெக்னிக்கல் கேள்விகள்.

 இரண்டு கோடி எப்படி பத்து நிமிடத்தில் எப்படி பதினெட்டு கோடியே ஐம்பது லட்சமானது? யார் யாருக்கு எவ்வளவு பங்கு போனது? வெளியில் வந்தது இந்த டீலிங். ராமரின் பெயரில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் சாப்பிட்டுள்ளீர்கள்? எவ்வளவு சாப்பிடப் போகிறீர்கள்?

 பிகு: சங்கிகள் தங்களை மூடர்கள் என்றால் கோபித்துக் கொள்கிறார். ட்ரஸ்டே விளக்கம் என்று ஏதோ ஒன்றை கொடுத்த பின்பும் ஒரு மத்யமர் சங்கி கேட்கிறார்.

 “ஐந்து மணிக்குப் பிறகெல்லாம் பத்திரப்பதிவு நடக்குமா? ஏழு மணிக்கு நடந்ததாக சொல்லும் போதே இந்த தகவல் பொய் என்று தெரியவில்லையா?”

 அடப்பாவி, இவ்வளவு அப்பாவியாடா நீ?

 


No comments:

Post a Comment