Friday, September 18, 2015

வேறு யாராக ரஜனி நடித்தால் பிரச்சினையில்லை?

http://www.nasrani.net/wp-content/uploads/2007/05/dsc8476_tipu_sultan_m.jpg





வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி அவர்களை நடுங்க வைத்த, வீர மரணம் அடைந்தவர் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப்பட்டிணம் ரங்கநாதர் கோயிலுக்கு மானியமும் உதவிகளும்  பொருட்களும் கொடுத்து மத நல்லிணக்கம் என்பதன் அடையாளமாய் திகழ்ந்த திப்பு சுல்தான் வேடத்தில் ரஜனிகாந்த் நடிக்கக் கூடாது என்றால் பின் வேறு யாருடைய வேடத்தில் நடித்தால் வீரத்துறவி வகையறாக்கள் பிரச்சினை செய்ய மாட்டார்கள்?

காந்தியைக் கொன்ற கோட்ஸேவாகவா?

வெள்ளையனே வெளியேறு போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்த வாஜ்பாயாகவா?

இல்லை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த வீர(!?) சவர்க்கராகவா?

அவசரநிலைக் காலத்தில் இந்திரா அம்மையாரோடு சமரசம் செய்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் மோகன் தேவரஸாகவா?

கேமரா முன் லஞ்சம் வாங்கிய பங்காரு லட்சமணனாகவா?

சம்ஜுதா எக்ஸ்பிரசிலும் மெக்கா மசூதியிலும் குண்டு வைத்த சாமியார்கள் கதாபாத்திரத்திலா?

இதில் எந்த பாத்திரத்தில் ரஜனி நடித்தால் காக்கி ட்ரவுஸர்கள் சிக்கல் செய்ய மாட்டார்கள்?

பின் குறிப்பு : இந்த மிரட்டல்களையெல்லாம் கண்டு அஞ்ச மாட்டோம் என உறுதியாக சொன்ன பிரகாஷ்ராஜிற்கு ஒரு சபாஷ்.

பின் குறிப்பு : ஏ.ஆர்.ரகுமானுக்கும் எனது பாராட்டுக்கள். மதவெறியை யார் கடைபிடித்தாலும் அது தவறுதான். கண்டனத்துக்குரியதுதான். நாளை இது பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.
 

5 comments:

  1. அருமையான பகிர்வு காவி கும்பலுக்கு தக்க பதில கொடுக்கவேண்டும்

    ReplyDelete
  2. ஒரு படத்தை எடுப்பதற்க்கு, அதில் பங்குபற்றுவதற்கு இங்கே மதவாதிகள், இனவாதிகள், ஜாதிவெறியர்களின் எதிர்ப்பை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது துயரநிலை.

    சொல்ல வேண்டியதை நீங்களே அழகா சொல்லீட்டீங்களே.
    அந்த படத்துக்குள் இருந்து வசனம் பேசுவது யாருங்க, தமிழக சீர்திருத்தவாதியோ!

    ReplyDelete
  3. ரஜனி

    நடித்தால்


    பிரச்சினையில்லை!!!

    ReplyDelete
  4. Rajini is not interested already in acting one more flop. Now the trends have changed now he has given
    callsheet to Pa Ranjith a realistic film maker who has given a very nice film Madras

    ReplyDelete