Friday, May 16, 2014

அடுத்தவர் போராட்டத்தை அறுவடை செய்தது பாஜகபத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் அவலங்கள், ஊழல்கள், நிர்வாக சீர் கேடுகள், கொள்கை சீரழிவுகள் இதற்கெல்லாம் எதிராக வலுவான போராட்டம் நடத்தியது இடதுசாரிகள் மட்டுமே. பல மோசமான கொள்கைகளில் காங்கிரஸோடு கைகோர்த்துக் கொண்ட கட்சி பாஜக. ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற பிரம்மாண்டமான ஊழல்களுக்கான துவக்கப் புள்ளியே வாஜ்பாய் ஆட்சியில்தான் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடதுசாரிகள் போராடிய போது பாஜக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இடதுசாரிகளால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் மீதான அதிருப்தியை அது அறுவடை செய்து விட்டது.

காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து ஒரு ஒன்றுபட்ட அணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சித்த போது துவக்கத்தில் அதற்கு ஆதரவளித்த பல கட்சிகள் பிறகு ஒதுங்கிப் போனது ஒரு மோசமான நிலைமையை உருவாக்கியது. முலாயம், நவீன் பட்நாயக், ஜெயலலிதா, நிதீஷ் குமார் போன்றவர்களின் பேராசை இதற்குக் காரணம். ஒரு வலுவான மாற்று இருக்கிறது என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியவில்லை.

மோடி வந்தால் ஏதேதோ நடந்து விடும் என்ற மாயையை பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி உருவாக்க முடிந்ததும் மத உணர்வுகளை மீண்டும் தூண்டி விட முடிந்ததும் பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணி.

தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்தி விட்டு மேற்கு வங்கத்தில் ஐந்து கட்டங்களில் தேர்தலை நடத்தி குண்டர்களையும் ரௌடிகளையும் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்ப உதவிய அயோக்கியத்தனத்தை தேர்தல் ஆணையம் செய்தது. அங்கே நிகழ்ந்த வன்முறை வெறியாட்டம், மோசடிகள், மிரட்டல்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. அதே போல் தமிழகத்தில் பணப் பட்டுவாடா தடையற நடக்க 144 தடையை கொண்டு வந்தது.

கார்ப்பரேட்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முடியும் வரை தேசத்தை சுரண்டி விட்டார்கள். இனி இன்னொரு சேவகனான பாஜக மூலம் மிச்சமிருக்கும் செல்வாதாரங்களை சுருட்டலாம் என்று திட்டமிட்டு மோடியை ஜெயிக்க வைத்து விட்டார்கள். இரட்டைக் குதிரைகளாக சங் பரிவாரத்தின் மத வெறி அஜெண்டாவும் கார்ப்பரேட்டின் கொள்ளை அஜெண்டாவும் பூட்டப்பட்ட ரதத்தில் இந்திய மக்களின் மீது மோடியின் பயணம் நடக்கும்.

தங்களுக்கு நன்மை செய்பவர்கள் யார்? தங்களின் வாழ்வைப் பறிப்பவர்கள் யார் என்ற புரிதலே இல்லாமல் இத்தேசத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடப்பது இந்தியாவின் பெருந்துயரம். காங்கிரசிற்கு எதிராக ஏன் வாக்களித்தார்களோ அதே கொள்கைகளைத்தான் பாஜகவும் அமலாக்கப்போகிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வார்கள்.

“நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்” என்ற சாபம் முகநூல் நெடுக பரவிக்கிடக்கிறது. கோபத்திலும் விரக்தியிலும் வந்து விழுந்த வார்த்தைகள் அவை. அப்படிப்பட்ட சோர்வு மக்களுக்காக உண்மையான பணி செய்பவர்களுக்கு அவசியமில்லை.

முதலாளித்துவக் கட்சிகள் தோல்விகளால் துவண்டு முடமாகி விடலாம், மூலையில் முடங்கி விடலாம். ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னைக் காட்டிலும் வேகமாக, முன்னை விட முனைப்பாக, முன்னைப் போலவே உறுதியாக போராடும். தேர்தல் முடிவுகளால் எங்களுக்கு யாரும் முடிவுரை எழுத முடியாது. அப்படி எண்ணியவர்களின் முடிவுகளையும் பார்த்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது.

22 comments:

 1. என்னாபா, ஒரே பொலம்பலாகீது. வெஸ்ட் பெங்காலிலே வாஷ் அவுட்டான சோகத்துலே ஜன்னி கண்டுடாப்புலெ கீதே. கவலைப்படாத நைனா, நாம பார்க்காத தோல்வியா. அம்மாவை போய் கண்டிகினு பூச்செண்டை வாங்கி கொடுத்து வாழ்த்திட்டு வந்தா கேட் கீப்பர் வேலையாவது கிடைக்கும். மெர்சலாவாத நைனா

  ReplyDelete
 2. சரியான பதிவு.....மக்களை மழுக்கிய்தில் ஊடகங்கள் மிக கேவலமாக செயல்பட்டது.

  ReplyDelete
 3. common man

  in the last phase your people -karat like are ready to get support from cong to form third front.

  why you are consider cong also ....

  Communism may good. but indian comrets are not worth for that. they changed the line long back...

  seshan

  ReplyDelete
 4. நீங்கள் சொல்வது சரியே.. பல பிரச்சனைகளை எழுப்பியது தோழர்களே.. ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறி விட்டார்கள்.

  மூன்றாவது பெரிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி வராதது நாட்டுக்கு நல்லதில்லை.. உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. ஒரு நல்ல Check Point ஆக இருந்திருக்கும்!

  ReplyDelete
 5. இன்னும் உங்கள் மனத்தில் மாற்றம் வரவில்லை.

  நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்கள்

  உங்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும்.

  கம்யூநிஸ்ட் கட்சி சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலம் இது

  ReplyDelete
 6. ஜெயராமன், பாஜக போன்ற மோசமான கட்சிகளை ஆதரித்த உங்களுக்குத்தான் நல்ல புத்தி வர வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதாலோ இல்லை பிரதமர் ஆனதாலோ மோடியின் கறைகளும் களங்கமும் நீங்கி விட்டதா என்ன? நீங்க திருந்துங்க சார் முதல்ல

  ReplyDelete
 7. யோவ் அனானி, புலம்பலுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? எப்படியாவது என்னை ஜெயிக்க வச்சுடுங்கனு கடைசி நாள் மோடி புலம்பினாரே, அதுதான் புலம்பல். உன்னை மாதிரி அப்பாவிகளை தூக்கி போட்டு மிதிக்கப் போறான். அப்ப கூட உனக்காக நாங்கதான் குரல் கொடுப்போம். போய் புள்ள குட்டிங்களை படிக்க வை, பொழப்பப் பாரு. இனிமே காவிக்காரன் உனக்கு காசு தர மாட்டான். நீதான் வேல செஞ்சு உன் குடும்பத்தை காப்பாத்தனும்

  ReplyDelete
  Replies
  1. Yes, Saffron people will not give anything. But Red group will pick our money through hundiyal.

   Delete
 8. மோடி வந்தால் ஏதேதோ நடந்து விடும் என்ற மாயையை பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி உருவாக்க முடிந்ததும் மத உணர்வுகளை மீண்டும் தூண்டி விட முடிந்ததும் பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணி.ஒரு வலுவான மாற்று இருக்கிறது என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியவில்லை.

  Tamilnadu people clearly wanted to reject Cong & DMK. They did not believe the BJP combine or the LEFT to be the winning parties.Hence TN people unitedly voted for the alternative AIADMK. தமிழகத்தில் பணப் பட்டுவாடா தடையற நடக்க 144 தடையை கொண்டு வந்தது.Though it is a fact, but money power alone can not bring this sweep.
  முதலாளித்துவக் கட்சிகள் தோல்விகளால் துவண்டு முடமாகி விடலாம்,க்களின் பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னைக் காட்டிலும் வேகமாக, முன்னை விட முனைப்பாக,உறுதியாக போராடும்.. Nenjarntha Vaazhthukkal.

  ReplyDelete
 9. atleast now you should understand the peoples verdict. if you continue to spit
  venom on hindutva parties in another 2 elections the tally of the communists will be a big zero. please wake up and do something good for the country.in west bengal your tally is diminishing.in the next election you are going to face a washout there.

  ReplyDelete
 10. atleast now you should understand the peoples verdict. if you continue to spit
  venom on hindutva parties in another 2 elections the tally of the communists will be a big zero. please wake up and do something good for the country.in west bengal your tally is diminishing.in the next election you are going to face a washout there.

  ReplyDelete
 11. dear mr.raman
  both at west bengal and kerala communists are washed out
  don't try to blame the people.
  first your leaders like tha.pandian,g.ramakrishnan,prakash karat,barathan,raja and sukumar suppose to come out from jaya's mayai

  ReplyDelete
 12. அய்யா,

  உங்களோடு ஒரே நகைச்சுவையா போச்சு அவ்வ்!

  சுமார் நாப்பது ஆண்டுகளாக யாரொட முதுகிலாவடு சவாரிபோயிட்டு , இப்போ தனியா விட்டு " நோட்டா" அளவுக்கு கூட ஓட்டு வாங்காமா என்னா பேச்சு வேண்டியிருக்கு அவ்வ்!

  # காலையில சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்னால கோஷம் போட்டுட்டு சாயந்திரம் போயஸ் தோட்டம் போய் , உரவாடும் அரசியல் செய்வதெல்லாம் போராட்டமா?

  அதை வேற மோடி அறுவடை செய்தார்னு கூசாம சொல்லுறிங்களே ,அப்போ நீங்களாம் காங்கிரசுக்கு மாற்றாக மோடி வரணூம்னு தான் இத்தினி நாள பிரச்சாரம் செய்தீங்களா?

  # கூடங்குளம் அணு உலை வரணுமா வேண்டாமானு கேட்டாக்கூட தெளிவான பதில் சொல்ல தெரியாது தமிழக கம்யூனிஸ்ட்களுக்கு இதுல இவங்களால தான் மோடி ஜெயித்தார்னு சொல்லிக்கிறது அவ்வ்.

  மோடி வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் மட்டுமே :-))

  # தளி ராமாச்சந்திரன் "களி ராமச்சந்திரன் ஆனப்பின்னும் கூட வச்சிட்டு தா.பா பேட்டியெல்லாம் கொடுக்காரே ,கவனிப்பு பலமா அவ்வ்!

  ReplyDelete
 13. அனானி, இத படிச்சு புரிஞ்சுக்க, அறிவிருந்தால்

  மண்ணில் பெருகிவரும்
  மாபெரிய கொடுமைகளை
  கோடையிடி தாக்குதலை
  கூக்குரலின் ஆர்ப்பரிப்பை
  கண்டு மனமொடிந்து
  மனமிடிந்து
  என்றேனும் ஒரு நாள் - நான்
  இறந்து போவேனென்று
  எவரேனும் எதிர்பார்த்தால்
  அவர்கள்
  ஏமாந்து போவார்கள்!

  நான்...................
  மண்ணில் வேரோடி
  மாநிலத்தில் கால்பதித்து
  வீசும் புயற் காற்றை
  விழும் வரைக்கும்
  நின்றெதிர்ப்பேன் !
  நின்றெதிர்த்த முடிவினில் - நான்
  நிலத்தில் வீழ்ந்து விட்டால்
  என் கன்றெதிர்க்கும் !
  கன்றுடைய கன்றெதிர்க்கும்!!

  ReplyDelete
 14. வவ்வால், உங்க காமெடியை வருணோடு நிறுத்திக் கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக, ஊழல்களுக்கு எதிராக பாஜக என்ன கிழித்தது? பல விஷயங்களில் இருவரும் கூட்டுக்களவாணிகளாகவே இருந்துள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா,

   நான் ஒத்துக்கிறேன் உங்க அளவுக்கு எனக்கு காமெடி வரலை தான் ஆனால் ஏதோ முயற்சித்து பார்க்கிறேன் அது என்ன தப்பா சார் ?

   ரெண்டுப்பேருமே "ஒரே கொள்(ளைகை தான் ஆனால் மக்களுக்கு இணக்கமான அரசியலை செய்கிறார்கள், நீங்களோ மக்களை விட்டு விலகி " நடைமுறைக்கு" ஒத்துவராத ஒன்றை ஏட்டில் வாசிக்கிறீர்கள்.

   # மேற்கு வங்கம்,கேரளாவில் எல்லாம் ஏன் இருந்த ஆட்சிய மக்கள் பிடுங்கினாங்கனு யோசிக்கணும்,அதை செய்யாதிங்க அவ்வ்

   # உங்க காமெடிய கூட பொலீட் பீரோவோடு வச்சிட்டா நல்லாத்தான் இருக்கும் ,சொன்னால் கேட்கவா போறிங்க?

   # களி ராமச்சந்திரன் என "பாட்டாளி"க்கு அடுத்த வாய்தா எப்போ சார்?

   கிரானைட் சுரங்க அதிபர் எல்லாம் பாட்டாளியா ,தெரியாம போச்சே அவ்வ்!

   Delete
  2. வவ்வால் மாதிரி எப்படி எனக்கு கவர்ச்சிப் படம் போட்டு எழுத வராதோ, அதே மாதிரிதான் காங்கிரஸ், பாஜக, கழகங்கள் மாதிரி ஜாதி, மத, ஊழல் அரசியல் செய்ய எங்களுக்குத் தெரியாது. பணம் கொடுத்து வோட்டு வாங்கவும் தெரியாது. மக்களுக்கு தேவையான விஷயத்தை நாங்க பேசறோம். அது உங்களுக்கு இணக்கமா தெரியல. பழைய பழமொழி சொல்வாங்க, கள் குடிக்க தேடிக்கிட்டு போவாங்க, மோரை தெருத் தெருவா கூவி விற்பாங்க. அது போலதான். அப்புறம் தா.பா, தளி பத்தியெல்லாம் என் கிட்ட கேட்காதீங்க. அவங்கள கண்டிச்சு நானே நிறைய எழுதியிருக்கேன். பழச படிச்சுப் பாருங்க.

   உங்க லெவல் காமெடியோ கவர்ச்சியோ எனக்கு வராது. வருணோட சண்டை முடிஞ்சதா? இல்லை இன்னும் உங்களை கழுவி கழுவித்தான் ஊத்திக்கிட்டு இருக்காரா? அவ்வ்வ்வ்வ்

   Delete
 15. இந்துத்துவா என்று சொல்லி இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்கள் மீது நச்சைப் பொழிவதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தொடரும் வரை அதற்கெதிராக எங்கள் போராட்டம் தொடரும். தேர்தலில் வெற்றி பெற்றதால் நீங்கள் உத்தமர்களாகி விட முடியாது ஜெயராமன். இந்தியாவின் நச்சு விதைகள் நீங்கள்தான்

  ReplyDelete
 16. கொடுத்த காசுக்கு ஒழுங்கா கூவலயேப்பா,
  இந்தியாவின் நச்சு விதைகள் கம்யூனிஸ்ட்கள்.

  ReplyDelete
 17. காசுக்கு கூவுவது உன்னைப் போல வெட்கம் கெட்ட பிழைப்புவாதிகள்தான். நாங்கள் கொள்கைகளுக்காக
  செயல்படுபவர்கள். முதலாளிகளிடம் பாஜக பிச்சையெடுத்த காசில் உயிர் பிழைக்கும் உன்னைப் பொன்ற ஒட்டுண்ணிகள் சமுதாயத்திற்கே லாயக்கில்லாத ஜென்மங்கள். ஓடிப் போ நாயே

  ReplyDelete
 18. Dear Mr.Raman
  kavithai ellam nallathan irukku
  ungal leaders avvalu perum ean innum oru statement kooda kodukkavillai
  manasatchi endru ondru irundhal indha kelvikku padhil sollavum
  ean jaya ungalai kazhatti vittargal

  ReplyDelete