Saturday, April 12, 2014

மாணிக் பாட்சா ரஜனிகாந்த், மோடியை புறக்கணியுங்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikRrBtS-H8VMSxt4FCmuJCSD6RrFPm8FWqt5777R-D0ry7H7hJGwVDOoyb-USwo2NNQIEZVL8g9zTBJLnF-mORbgQmQ9H2_zGTpAOFzfKMgrMTGwiKSIpMSPNZwPxIPTE32n0YljyyVSw/s1600/Batcha_B.jpg

மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களுக்கு,

உங்களின் துவக்க கால ரசிகனின் அன்பான கடிதம் இது.

நல்ல நடிகராக வாழ்க்கையை துவங்கிய நீங்கள் பெரும் 
தயாரிப்பாளர்களின் பந்தயக்குதிரையாக மாறி அவர்களுக்கு
செல்வத்தை ஈட்டித்தரும் இயந்திரமாக மாறிப் போனீர்கள்.

உங்களுக்காக உயிரைக் கொடுக்கக் கூட உங்கள் ரசிகர்கள்
தயாராக இருக்கிறார்கள். இந்த சக்தியை தங்களின் அரசியல்
ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு தேர்தலின்போதும்
பல அரசியல் கட்சித்தலைவர்கள் முயல்கிறார்கள்.

நீங்களும் லாகவமாக தப்பித்துக் கொண்டே வருகிறீர்கள்.

நாளை உங்களைப் பார்க்க மோடி வரப் போகிறாராம். 

உங்கள்  திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பானதாக நீங்களும்
சரி நானும் சரி அத்தனை ரசிகர்களும் கருதுவது பாட்சா.

வில்லனால் கொல்லப்பட்ட இஸ்லாமிய நண்பனின் பெயரையே
உங்கள் பெயராக மாற்றிக் கொண்டதில் நெகிழ்ந்து போனவர்கள்
எத்தனையோ பேர்?

ராமனா ? ராவணனா?
நல்லவனா? கெட்டவனா?

என்று நீங்கள் பேசிய வசனங்களுக்கு கைத்தட்டல்களும்
விசில்களும் அரங்கை மீறி கேட்டிருக்கிறது.

திரையில் கொல்லப்பட்ட ஒரு இஸ்லாமிய நண்பனுக்காக
பெயரை மாற்றிக் கொண்டதை திரைப்படம் என்று கருதாமல்
உங்கள் இயல்பாகவே நம்பி உங்கள் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு கொடுக்கிற தமிழர்களுக்கு என்ன
செய்தி சொல்லப் போகிறீர்கள்?

ஒட்டு வைத்த ஓட்டைப்படகில் செல்லும் பயணம் கரைசேராது
என்பதால் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள உங்கள் வீடு
தேடி வருகிறது இந்தியாவின் மிகப்பெரும் தீய சக்தி.

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்டால் தமிழகத்தை ஆண்டவனால்
கூட காப்பாற்ற முடியாது என்று சொன்ன உங்களுக்கு மோடி
பிரதமரானால் இந்தியாவை கோடானுகோடி ஆண்டவர்கள்
வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பது கண்டிப்பாக தெரியும்.

இதுவரை நீங்கள் பெரிதாக நல்லதும் செய்ததில்லை. கெடுதலும்
செய்ததில்லை.

உங்கள் வீடு தேடி மோடி வருவதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்
செய்கையை மட்டும் செய்து விடாதீர்கள்.

வீடு தேடி வருபவருக்கு காபி கொடுங்கள், சாப்பாடு போடுங்கள்,
ஆனால் வாக்கு மட்டும் அளித்து விடாதீர்கள்.

தயவு செய்து வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாதீர்கள்.

ஏனென்றால் உங்களின் ஒரு வார்த்தையைக் கூட நூறு
வார்த்தைகளாக மாற்றி விடும் கேடிகள் அவர்கள்.


9 comments:

  1. Rajini sir, Pl.give voice for Modig.

    ReplyDelete
  2. அய்யா,

    hi...hi ரஜினி ராகவேந்திராவாக கூட நடிச்சிருக்காரு அதனால மோடி ஆதரவுக்கேட்க வந்திருப்பாரு , படத்துல அப்படி நடிச்சிங்கலே அதனால இப்படித்தான் செய்யணும் என சொல்றதுலாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு அவ்வ்!

    # நான் சிவப்பு மனிதன் படத்தில நடிச்சிங்களே ,நாங்களாம் சிவப்பு துண்டுக்கட்சிக்காரங்க அதனால எங்களூக்கு தான் ஆதரவுக்கொடுக்கணும்னு போய் கும்பலாக்கேட்டுப்பாருங்களேன் :-))

    ReplyDelete
  3. வவ்வால் அவர்களே, எங்களது பலம் எங்கள் கொள்கைகள், மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து நடத்தும் போராட்டங்கள். அதனால் வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  4. ரஜனிகாந்தின் ஆதரவைக் கூட நேரடியாக கேட்க தைரியமில்லாத கோழை அனானிகள் மோடி கூட்டத்தின் பரிதாப நிலைக்கு சான்று

    ReplyDelete
  5. திரைப்பட பாத்திரமாக நடிகர்களை பார்க்கும் ரசிகர்களே இல்லையென்று சொல்ல முடியுமா வவ்வால்? ரஜனி ராகவேந்திரராகவும் பாபாவாகவும் நடித்ததை அவரது ரசிகர்கள் புறக்கணித்து விட்டார்கள் என்பதையும் மறக்கக் கூடாது

    ReplyDelete
  6. arpudhamana advice

    ReplyDelete
  7. ஐயா சிவப்பு துண்டுக்காரர்களே எவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் சுதந்திரமாக உள்ளோம். சீனா மாதிரி கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்கள் மாதிரி இல்லை. எதேச்சிகார ஆட்சியில் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தவுடன் ரஷ்யா எப்படி சிதறுண்டு போயிற்று.

    ReplyDelete
  8. திரு மணி அவர்களே, இந்த பதிவிற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. மேலும் இந்தியாவில் ஜனநாயகம் இந்தளவாவது பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் சொல்லும் சிவப்புத்துண்டுக்காரர்கள்தான் காரணம்

    ReplyDelete