Monday, February 12, 2024

பாவம் அவரு பசங்க!

 



பொது வாழ்வில் இல்லாத சில தனி நபர்களைப் பற்றி வலைப்பக்கத்தில் எப்போதாவது விமர்சனம் செய்திருப்பேன். அது அவர்களின் கருத்துக்கள் அல்லது செயல்பாடுகள் காரணமாக எழுந்த விமர்சனமாகத்தான் இருக்கும். முதல் முறையாக ஒரு தனி நபரைப் பற்றி, அவர் குடும்பத்தைப் பற்றி எழுத வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைமை.

 ஸ்ரீரங்கம் கோயிலில் ஆட்டுத்தாடி சொச்ச பாரத் நாடகம் நடத்திய போது 2015 ல் சென்னை பெரு வெள்ளத்தின் போது எங்கள் சங்கம் நடத்திய தூய்மைப் பணி தொடர்பாக எழுதி, அது போன்ற கலீஜ் இடத்திற்கெல்லாம் ரெவி போகுமா என்று கேட்டிருந்தேன்.

 அந்த பதிவை ரெவியின் புகழ் பாடிய ராஜ்பவன்-தமிழ்நாடு ட்விட்டர் பதிவிலும் பின்னூட்டமாக இணைத்திருந்தேன்.

 அதற்குத்தான் வெங்கடேசன் என்ற 72 வயது முதியவர்

 “உன் வேலை போயிடும், நீ நடுத்தெருவில் நிப்ப” என்று சாபம் கொடுத்திருந்தார்.

 


யாரப்பா இந்த நல்ல மனசுக்காரர் என்று அவர் பக்கத்துக்கு போனால் அங்கே ஒரே புலம்பல்தான்.

 “கூகிளிலும் சோனியிலும் வேலை பார்க்கும் என் பிள்ளைகள் என்னை கைவிட்டு விட்டார்கள். அவர்களை என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். எனக்கு ஜீவனாம்சம் கொடுக்கச் சொல்லுங்கள்”

 


இதே பல்லவிதான் மீண்டும் மீண்டும். அவரது மகனின், மகளின் படங்களை வேறு பகிர்ந்து கொண்டிருந்தார். இந்திய ஜனாதிபதி தொடங்கி டிமோ, நிர்மலா அம்மையார், அமித் ஷா, அமைச்சகங்கள், தூதரகங்கள், ரெவி என்று அனைவரிடமும் முறையிட்டுக் கொண்டே இருக்கிறார். பாவம் இவரை யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.

 இப்படிப்பட்ட துயரமான சூழலிலும் சங்கி வெறி அடங்கவில்லை. அயோத்தி கோயிலுக்கு போகப் போவதில்லை என்று சொன்ன மம்தாவை நீ என்ன முஸ்லீமா என்று கேட்டிருந்தார்.

 ரெவியை கேள்வி கேட்டதற்கே என்னை “நடுத்தெருவில் நிற்பாய்” என்று சாபம் கொடுக்கிற அந்த முதியவர், தன் குழந்தைகளை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்திருப்பார்! அவரது பதிவுகளைப் பார்க்கும் போது இவரது குணாம்சத்தால்தான் அவரது பிள்ளைகள் ஒதுங்கி நிற்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதையேதான் அவருக்கு பதிலாகவும் அளித்தேன்.

 

அவருக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் சம்பந்தமே இல்லாத எனக்கு சாபம் இடும் முதியவர் அவரது பசங்களை எப்படியெல்லாம் சபித்துக் கொண்டு இருப்பாரோ! உண்மையில் அவர் பிள்ளைகள் மிகவும் பாவம்!

 

No comments:

Post a Comment