Monday, November 29, 2021

சுமந்துக்குப் பின் அகதா . . .

 


வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்த நாளன்று மிகப் பெரிய அளவில் ஒப்பாரி பாடியது சுமந்து ராமன். ஏன் வேளாண் சட்டங்களோடு மட்டும் நிறுத்தறீங்க, குடியுரிமை சட்டத்தை நீக்குங்க, காஷ்மீருக்கு 370 சட்டத்தை மறுபடியும் கொடுங்க என்றெல்லாம் புலம்பினார்.

ஆளும் கட்சி முகாமிலிருந்தே அந்த குரல் ஒலித்துள்ளது.

மேகாலயா எம்.பி யும் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகளுமான அகதா சங்மா தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

வட கிழக்கு பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க மிகவும் அவசியமான நடவடிக்கை என வலியுறுத்தி உள்ளார்.

மோடியின் பிம்பம் தகர்ந்து கொண்டே இருப்பது நல்லது, நாட்டுக்கு. . . 

No comments:

Post a Comment