Sunday, August 9, 2020

தொலைப்பது அவர்களுக்கு புதிதல்ல . .


 எல்லையில் நடந்த மோதல் தொடர்பான கோப்புக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில்  தொலைந்து விட்டன. 

ரபேல் விமான ஊழல் தொடர்பான கோப்புக்கள் தொலைந்து விட்டன என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்னது மத்தியரசு.

அதே உச்ச நீதிமன்றத்தில் "தோற்றுப் போன் தொழில் முனைவர்" என்று ஜெமோவால் அன்போடு அழைக்கப்பட்ட திருடன் விஜய் மல்லய்யாவின் கோப்புக்கள் தொலைந்து போய் விட்டனவாம்.

இப்படி எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறார்களே இவர்கள் என்று ஆதங்கத்தோடு கேட்ட ஒரு தோழருக்கு ஆறுதலாய் சொன்னேன்.

தொலைப்பது இவர்களுக்கு புதிதல்ல.

குஜராத்தில் படுகொலை நிகழ்த்தி இந்தியாவின் மானத்தை வெளிநாடுகளில் தொலைத்தவர்கள். இதை நான் சொல்லவில்லை. அன்று பிரதமராக இருந்த வாஜ்பாயே சொன்னார்.

பசுவின் பெயரால் கொலைகள் செய்து இந்தியாவின் அமைதியை தொலைத்தார்கள்.

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று சொல்லி இந்திய மக்களின் சேமிப்பை தொலைக்க வைத்தார்கள்.

ஜி.எஸ்.டி யின் பெயரில் மாநிலங்களின் வருவாயை தொலைத்தார்கள்.

குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் மக்களின் உரிமைகளை தொலைத்தார்கள்.

புதிய கல்விக் கொள்கையின் பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை தொலைத்தார்கள்.

நீட் மூலமாக ஏழைகளின் மருத்துவக் கல்விக் கனவை தொலைத்தார்கள்.

திட்டமிடா ஊரடங்கின் வாயிலாக 15 கோடி தொழிலாளர்களின் வேலைகளை தொலைத்தார்கள்.

இந்திய மக்களின் நிம்மதியைத் தொலைத்தவர்களுக்கு கோப்புக்களை தொலைப்பதெல்லாம் ஒரு விஷயமா என்ன?



No comments:

Post a Comment