Thursday, December 11, 2014

ரஜனி ரசிகர்கள் மற்றும் மோடி வெறியர்களின் அற்பத்தனம்




இன்று முக நூலில் பார்த்த இரண்டு செய்திகள் பெரிய ஆளுமைகள் என்று சொல்லப்படுகிற ரஜனிகாந்த் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் தீவிர ரசிகர்கள் அல்லது வெறியர்கள் எவ்வளவு பெரிய அற்பர்களாக உள்ளார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது.

செய்தி 1 : ரஜனிகாந்தைப் பற்றிய கடுமையான விமர்சனத்தை எழுதிய காரணத்திற்காக அருண் தமிழ் ஸ்டூடியோ என்பவரது முக நூல் இணைப்பை தடை செய்ய வைத்து விட்டார்கள் ரஜனி ரசிகர்கள்.

செய்தி 2 : இந்தாண்டின் தலை சிறந்த மனிதராக டைம்ஸ் பத்திரிக்கை நரேந்திர மோடியை தேர்வு செய்யாத காரணத்தால் டைம்ஸ் பத்திரிக்கையின் முக நூல் பக்கத்தை ஆக்கிரமித்து அதனை முடக்கும் பணியை மோடி ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

அருண் எழுதிய கருத்துக்களின் உடன்பாடு இல்லையென்றால் ரஜனி ரசிகர்கள் அதனை பின்னூட்டங்களில் தெரிவித்திருக்கலாம். ரஜனி பற்றிய அவர்களது “போற்றி”களை தங்கள் சுவர்களில் எழுதி அருண் மீதான கண்டனங்களையும் தெரிவித்திருக்கலாம். அருண் எழுதும் பல கருத்துக்கள் மீது எனக்கும் மாறுபாடு உண்டு. சில சமயங்களில் கொஞ்சம் ஓவராக உள்ளது என்ற உணர்வும் வருவது உண்டு. (என் மீது கூட காவிக்கூட்டம் அப்படி ஒரு பார்வையை கொண்டுள்ளது என்பதையும் நான் அறிவேன்).

ஆனால் முகநூல் கணக்கையே முற்றிலுமாக செயல்பட விடாமல் தடுப்பது என்பது கருத்துரிமைக்கு எதிரான கீழ்த்தரமான செயல். மோடி ரஜனி வீட்டுக்கு வந்து போனதால் அந்த பாசிச குணாம்சம் ரஜனியின் ரசிகர்களுக்கும் வந்து விட்டது போல.  அப்படியென்ன ரஜனிகாந்த் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதரா? ரஜனி தன் ரசிகர்களை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் அவரும் தன் ரசிகர்களின் அற்பத்தனத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார் என்றே அர்த்தம்.

மோடி ரசிகர்களின் செயலைப் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. அவர்கள் அப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சர்யம். விளம்பரத்தால் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் அல்லவா மோடி!

1 comment:

  1. yes you are absolutely right..they are behaving like fascist . you can even notice this kind of activities in TV debates.

    ReplyDelete