Tuesday, December 21, 2010

நாடாளுமன்றம் முடங்கியதால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்காமல் போனதால் 170 கோடி ருபாய்
நஷ்டம் என்ற புதிய பல்லவியை சில பத்திரிகைகள் பாடத்தொடங்கியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசம் இழந்துள்ள தொகையில் o.0001  % தான்
இந்தததொகை ( கணக்கு சரிதானே ? )  என்றாலும் அதைப் பெரிது படுத்துவதில்
சிலருக்கு ஆனந்தம்.

சரி இம்முறை நாடாளுமன்றம் நடந்திருந்தால் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும்
என்ன நல்லது நடந்திருக்கும்?

விலைவாசியைக் குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை
செய்யும் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்குமா?

காலம் காலமாக கிடப்பில் போடப் பட்டிருக்கும் மகளிர் மசோதாவை
மக்களவையிலும் நிறைவேற்றி இருக்குமா?

வட இந்திய ஓட்டு அறுவடைக்காக நிறுத்தி வைத்துள்ள சேது சமுத்திரத்
திட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கான வழிவகைகள் ஏதாவது
செய்திருக்குமா?

சுவிஸ் நாட்டு வங்கிகளில் முடக்கிக் கிடக்கும் அளவிட முடியாத
கோடிகளிலான கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சட்டம் எதாவதை
கொண்டு வந்திருக்குமா?

இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி திருப்பித்தராத  பெரிய மனிதர்களின்
சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் வந்திருக்குமா/ அல்லது
அவர்களின் பட்டியலைத்தான் வெளியிட்டிருக்குமா?

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோக முறையை
விரிவு படுத்தப்போகின்றோம் என்று சொல்லியிருக்குமா?

வேலை உத்தரவாத சட்டத்தின் படி கூலியை உயர்த்தியிருப்பார்களா ?
அல்லது நூறு நாட்கள் என்பதை அதிகப்படுத்தியிருப்பார்களா?

இல்லை , இல்லை நிச்சயமாக இல்லை.  

ஆனால் 

தேசத்தின் பல சொத்துக்களை அடமானம் வைக்கும் பணி நடந்திருக்கும்.

உணவுப்பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் உள்ளதும் பறி போயிருக்கும்.

செல்வந்தர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக
இருந்திருக்கும்.

அமெரிக்கர்களின் அடிமைகள் நாங்கள் என்பது மீண்டும்
உரைக்கப்பட்டிருக்கும்.

வங்கி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு துறைகளில் அந்நிய
ஆதிக்கத்தை அதிகப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் கண்டிப்பாக
நடந்திருக்கும்.

எனவே இப்படிப்பட்ட நாடாளுமன்ற
கூட்டத்தொடர் முடங்கிப் போனதால்
மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முதலாளிகளுத்தான் சற்று கஷ்டம்.
அதனால்தான் இந்தப் புலம்பல்

1 comment:

  1. சரியான சாட்டையடி சகோ
    மிக தெளிவான ஈர்க்ககூடிய எழுது நடையை வாய்க்கபெற்றிருக்கீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete