Tuesday, December 14, 2010

மம்தா பானர்ஜிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த பதிவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற எளிய வழிகள்
என்றும் தலைப்பு வைக்கலாம்.

சரி என்ன வழிகள் உள்ளது?

ஒன்று நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும், எதுவும்
செய்திட வேண்டாம், சொன்னால் போதும், சொன்னதற்கு  நேர் மாறாக
நடந்தாலும் கவலையில்லை. ஒபாமா போல அதிர்ஷ்டம் இருந்தால்
பதவியில் இருக்கும் போதே கிடைக்கும். இல்லையென்றாலும் கண்டிப்பாக செத்துப் போவதற்கு முன்பாக கிடைக்கும் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஒரு நோபல் பரிசு பார்சல்)

அமெரிக்க ஜனாதிபாதியாக முடியாத துரதிர்ஷ்டசாலிகள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கும் வாய்ப்பு உண்டு.
என்ன நீங்கள் கடுமையான கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க
வேண்டும்.  கம்யூனிச நாடுகளில் மனித உரிமை மீறல்
நடக்கிறது என்று பினாத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த பினாத்தலை அபுகாரிப் அல்லது குவாண்டனமோ
சிறைச்சாலை வாசல்களிலிருந்து செய்தால் உத்தமம்.

சந்தேகமிருந்தால் இந்த பட்டியலைப் பாருங்கள்

ஆண்ட்ரே சகரோவ்,
லெக் வாலேசா,
தலாய் லாமா,
மிகையில் கோர்பசேவ்

இந்த வரிசையில் லியு ஜென்போ என விருது கொடுத்து
நோபல் பரிசுகுழு தனது கம்யூனிச எதிர்ப்பு நிலையை
மீண்டும் நிலை நாட்டி விட்டது.

யாசர் அராபத்திற்கும் நெல்சன் மாண்டேலாவிற்கும் கூட
விருதளித்தபோது கூடவே இஸ்ரேல் மற்றும் தென் ஆப்பிரிக்க
அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து விருதளித்து இவர்களுக்கு தனி
முக்கியத்துவம் கிடைக்காமல் பார்த்துக்கொன்டவர்கள்தானே
இவர்கள்!

இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை அடுத்து பெற
தகுதியானவர் மம்தா பானர்ஜிதான். மாவோயிஸ்டுகளோடு இணைந்து
கம்யூனிஸ்டுகளை கொடூரமாக கொன்று குவிக்கும் அவரைத் தவிர
இந்த விருதைப் பெற யாருக்கு தகுதி உள்ளது ?

தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர் என்ற முறையில் நரேந்திர மோடியை விட மம்தாவிற்குத்தான் கூடுதல் மதிப்பெண்கள்.

2 comments:

  1. உடனே நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சீனா, வடகொரியா, கியூபா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் அல்லது காட்டிக்கொடுக்கவேண்டும் அல்லது கூட்டிக்கொடுக்கவேண்டும் என நோபல் கமிட்டி அறிவித்து உள்ளது

    ReplyDelete
  2. When Vajpayee was PM and Muslims were
    killed in Gujarat, His name was
    recommended for Nobel Peace Prize.
    So it will not be surprising if
    Mamtha is recommedned and gets

    ReplyDelete