Sunday, December 12, 2010

அன்று பாராட்டியவர்கள் இன்று மௌனமாய் இருப்பது ஏன்?

விமான நிறுவனம் ஆரம்பிக்க ஒரு அமைச்சர் பத்து கோடி ருபாய்
லஞ்சம் கேட்டார். அப்படி ஒரு தொழிலே வேண்டாம் என்று மறுத்து
விட்டேன் என ரத்தன் டாட்டா கூறியபோது, இவரல்லவா நேர்மையின்
சிகரம் என இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.

ஆனால் அதே ரத்தன் டாடா நீரா ராடியாவுடனான தொலைபேசி
பதிவுகளை வெளியிடக்கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளபோது
முன்பு ரத்தன் டாடாவினை வானளாவிய முறையில் புகழ்ந்த
அத்தனை ஊடகங்களும்  இப்போது வாய் திறக்கவேயில்லை. 

டாடா நீரா ராடியா உரையாடல் ஒன்றும்  இருவர் குடும்பத்து 
விவாகங்கள் பற்றியோ அல்லது விவாக ரத்துகள்  பற்றியோ 
கிடையாதே!  அரசில் யார் இருக்க வேண்டும், கொள்கைகள் எப்படி
அமைய வேண்டும் என்பது பற்றித்தானே!  இதை வெளியிட தடை 
கேட்டது தனது  தில்லுமுல்லுகளை  மேலும் அதிகமானவர்கள் 
அறியக்கூடாது என்பதற்காகத்தான்.

பாவம் ரத்தன் டாடா, தனது சுத்த சுயம்பிரகாச வேடம்  சில 
நாட்களிலேயே கலைந்து போகும் என்பதை வீர வசனம் பேசும் 
போது அறிந்திருக்க மாட்டார். அவரோடு சேர்த்து  அவர் புகழ் 
பாடிய ஊடகங்களின்   அரிதாரமும் கலைந்து விட்டது.

ஒரே ஒரு சந்தேகம் : ஆரிய திராவிட வாதத்தை கையில் எடுத்துள்ள
கலைஞர், ஏன் ரத்தன் டாடா பற்றி ஊடகங்கள் எழுதாதை குறிப்பிடவே
இல்லை?  பெரு முதலாளிக்கு எதிராக பேசும் வல்லமை அவருக்கு 
கிடையாதா என்ன?  யாராவது கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்...   

2 comments:

  1. அது ரத்தன் டாட்டா - வோல்டாஸ் கட்டிடம் (அண்ணா சாலையில் உள்ளது) - தயாளு அம்மாள் தொடர்பு கருணாநிதியின் வாயை அடைத்து விட்டது !

    ReplyDelete
  2. http://maattru.blogspot.com/

    Ithai padikkauvm

    ReplyDelete