Saturday, December 11, 2010

1 ,76 ,000 கோடி ரூபாய் எப்படி வரும்?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசம் இழந்திருப்பது 1 ,76 ,000  கோடி ரூபாய். இதன் மதிப்பை   உணர்த்த சிறு உதாரணம் தரலாம் என்று நினைக்கிறேன். 

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சி யின் கடந்த 2009 -10  நிதியாண்டின்      மொத்த பிரிமிய வருமானம் 1 ,86 ,000  கோடி ரூபாய். புது வணிகம் மூலம் திரட்டப்பட்ட   பிரிமியமும் ஏற்கனவே உள்ள பாலிசிகளுக்கு செலுத்தப்பட்ட பிரிமியமும் சேர்ந்த    தொகை இது. இந்த வருமானம் அவ்வளவு சாதாரணமாக வந்தது கிடையாது. 

ஒரு மத்திய அலுவலகம்,
எட்டு மண்டல அலுவலகங்கள்,
நூற்றிப்பத்து கோட்ட அலுவலகங்கள்,
இரண்டாயிரத்து ஐம்பது கிளை அலுவலகங்கள்,
எண்ணூறு துணை அலுவலகங்கள் 

இவற்றில் பணியாற்ற 

இருபதாயிரம் முதல் நிலை அதிகாரிகள்,
இருபதாயிரம் வளர்ச்சி அதிகாரிகள்,
அறுபதாயிரம் மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள் 

இவர்களோடு களத்தில் பணியாற்ற 

பத்து லட்சம் முகவர்கள் 

இவர்கள் அனைவரும் நேரம் காலம் பார்க்காமல்
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று 
பண்டிகை தினங்களுக்குக் கூட முக்கியத்துவம் தராமல்
இரவு, பகல் பார்க்காமல்,  இருபத்தி நான்கு மணி நேரமும்
கரம் கோர்த்து பணியாற்றியதால் திரட்டப்பட்ட 
தொகை இது. 

சற்று யோசித்துப் பாருங்கள், எவ்வித உழைப்போ 
முயற்சியோ இல்லாமல்  1 ,76 ,000  கோடி ரூபாய்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது  என்பது எவ்வளவு
மோசமான விஷயம்?

ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் மிகப்பெரிய
கட்டமைப்போடு திரட்ட சிரமப்படுகின்ற ஒரு
தொகையை  கண் இமைக்கும் பொழுதில்
சிலர் சம்பாதித்து விட்டனர் என்ற செய்தி 
இத்தேசத்தின் அமைப்பு முறை எவ்வளவு
பலவீனமாக உள்ளது என்பதை காண்பிக்கவில்லையா?

ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று இன்னமும்
சாதித்துக் கொண்டிருக்கிற, சாதியின் பின்னர் புகலிடம்
புகுந்துள்ள வேடதாரிகளின் முகமுடிகளை அம்பலப்
படுத்த வேண்டிய கடமை இந்தியக் குடிமக்கள்
ஒவ்வொருவருக்கும் கிடையாதா?

3 comments:

  1. You gave an easy example to know the value of
    1,76,000 crores. But how many people will realise? Free TV will have more impact in
    villages. The middle class will not come to vote. Even the alternative jayalaitha is equally tainted. why you communists are not standing alone?

    ReplyDelete
  2. How did you arrive at the exact figure: 176000 cr ?

    ReplyDelete
  3. This is the same reason I cannot agree the Loss is 176K crores. This 35B dollars. How can a 2G bandwidth be worth that much?. What is the revenue potential of bandwidth in the first place?. 3B$ may be?. To break even the company has to operate in profit for many many years. I am against this scam but it is very misleading. Major corporations lobbied and got their minister of convenience in place (which is eveident from the leaked tapes). No one is talking about the corporations? but only about the minister!. If not him they would have someone else!

    ReplyDelete