முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் விவரிக்கப் போகும் திரைப்படக் காட்சியோடு எனக்கு உடன்பாடு கிடையாது. பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்த காட்சி. ஆனாலும் அக்காட்சி ஏனோ நினைவுக்கு வந்ததால் பகிர்ந்து கொள்கிறேன்.
அஜித் நடித்த வில்லன் திரைப்படத்தில் கதாநாயகியை பஸ்ஸிலிருந்து அஜித் தள்ளி விடுவார்,
மறு நாள் கல்லூரி மாணவிகள் பேருந்தை மறித்து
அஜித் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பார்கள். பிறகு அவர் பார்வையில், சிரிப்பில் மயங்கி கோரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
மன்னிச்சுக்கோங்க என்று சொல்லு.
ஜஸ்ட் சாரி என்று ஒரு வார்த்தை சொல்லு
கடைசியில் "இனிமே இந்த மாதிரி நடக்காதே" என்று சொல்லி விட்டு கலைந்து விடுவார்கள்.
ஏனோ நேற்று இந்த காட்சி நினைவுக்கு வந்தது.
நேற்று இந்தியாவில் எங்கோ நடந்த சம்பவத்தோடு நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பல்ல. அவமதிப்பு வழக்கு உங்களுக்குத்தான்.
No comments:
Post a Comment