Showing posts with label பகடி. Show all posts
Showing posts with label பகடி. Show all posts

Tuesday, July 8, 2025

உங்களுக்கா இப்படி யுவர் ஆனர்?

 


கீழேயுள்ள செய்தியை படிக்கும் போது சந்திரசூட் மீது பரிதாபமே வந்தது.


அயோத்தி தீர்ப்பளித்தவர்கள் ஐவர். 

அதில் ஒருவர் ஆளுனர், ஒருவர் எம்.பி. இன்னும் இருவருக்கும் கம்பெனி சட்ட வாரியம் போன்ற பதவிகள்.

ஆனால் தீர்ப்பை எழுதியவரை வீட்டை காலி செய்யச் சொல்கிறார்கள். அதிலும் என்ன எழுதுவது என்று தெரியாமல் கடவுளின் முன் அமர்ந்தேன். அவர் சொன்னபடி எழுதினேன் என்று வேறு சொன்னார்.

அப்பேற்பட்டவரையே வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள்.

இவர் வீட்டுக்கு பிள்ளையார் சதுர்த்தி பூஜை சீன் போட மோடி வந்த போது அவர் வசிக்கும் ப்ங்களா நிரந்தரமாக அவருக்கே என்று சட்டம் போட சொல்லியிருக்கலாம். அப்படியே வழக்கு போடப்பட்டிருந்தாலும் அயோத்தி தீர்ப்பு போல "நம்பிக்கை" என்று சொல்லி தப்பித்திருக்கலாம் .

பாவம் ஐடியா இல்லாத ஆளுங்க!

Friday, September 11, 2020

அர்ணாபிற்கு விருது - வருத்தம்

 இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யபும் இந்தி காமெடி நடிகர் குணால் காம்ராவும் மோடியின் பெரிய வாய் அர்ணாப் கோஸ்வாமிக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது கொடுக்க அவரது ரிபப்ளிகன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கே அவர்கள் அனுமதிக்கப்படாததால் அந்த விருதோடு புகைப்படம் அர்ணாப் அலுவலகத்தின் வாசலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி விட்டனர்.

அந்த புகைப்படம் கீழே



என்னுடைய வருத்தம் ஒன்றுதான்.

அர்ணாபிற்காக புதிய செருப்பு வாங்கி இருக்க வேண்டுமா என்பதுதான்.

ஏராளமான பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதிலே சுவாரஸ்யமான ஒன்று. 

அர்ணாப் இதையும் பரபரப்பாக்குவார். இங்கே ஒற்றைச் செருப்புதான் உள்ளது. இன்னொன்று எங்கே? தினேஷன் வாண்ட்ஸ் டு நோ.


பிகு: சில ஆண்டுகளுக்கு முன்பே தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ஒரு சிறு கதை நினைவுக்கு வருகிறது. அதை நாளை பகிர்ந்து கொள்கிறேன். மழை நின்றாலும் தூவானம் தொடர்கிறது. ஆஜான் பதிவுகள் நின்றாலும் அவர் நினைவு தொடர்கிறது.