தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்புவை உருவக்கேலி செய்த அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே . . .
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, March 23, 2026
அசிங்கப்படுத்தும் சங்கிப் பெண்ணின் நேர்மை
தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்புவை உருவக்கேலி செய்த அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே . . .
Saturday, January 24, 2026
பிரான்ஸ் ராணியும் ரங்கராஜ் பாண்டேவும்
கீழே உள்ள காணொளியை முதலில் பாருங்கள்
இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு விட்டது என்ற தோழர் கனகராஜ் அவர்களின் குற்றச்சாட்டிற்கு வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறதே என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்.
பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெட் கிடைக்கவில்லையே என்ற துயரத்தை சொன்ன போது, பிரெட் இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று ஆணவத்தோடு சொன்ன ராணி மேரி அண்டோனியாவிற்கும் ரங்கராஜ் பாண்டேவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
திமிரெடுத்த ராணிக்கு கில்லட்டினில் சிரச்சேதம் கிடைத்தது. இந்தியா ஜனநாயக நாடு என்பதால் பாண்டேவின் தலை தப்பித்தது.
Tuesday, April 16, 2024
மதுரை வாக்காளர்களே செய்வீர்களா?
மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் ராம.சீனு பேசும் காணொலி ஒன்றை பார்த்து மிகவும் கடுப்பாகி விட்டேன்.
கம்யூனிஸ்டுகள் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் கடைசி ஆணியை அந்த ஜந்து மதுரையில் அடிக்கப் போகிறதாம்.
அந்த ஜந்துவிற்கு சில விஷயங்களை நினைவு படுத்த வேண்டும்.
ராம.சீனு இருக்கும் கிரிமினல் கூட்டத்தின் முன்னோடி சர்வாதிகாரி ஹிட்லர். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான மூஞ்சே தங்கள் அமைப்பை உருவாக்க ஆலோசனை கேட்டது இன்னொரு சர்வாதிகாரியான முசோலினி யிடம்.
ஹிட்லர், முசோலினி இருவரையும் வீழ்த்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். செஞ்சேனை நெருங்கிய செய்தி கிடைத்ததும் விஷம் குடித்து செத்தான்.
முசோலினியின் சடலத்தை விளக்குக் கம்பத்தில் தலை கீழாக தொங்க விட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.
பாஜக கிரிமினல் கூட்டம் ஒட்டி உறவாடும் அமெரிக்காவை அலற விட்டு புறமுதுகிட்டு ஓட வைத்தது சின்னன்சிறு நாடான வியட்னாமின் கம்யூனிஸ்டுகள்தான்.
அமெரிக்காவை நடு நடுங்க வைத்த பிடல் கேஸ்ட்ரோவும் செகுவாராவும் ஹூகோ சாவேஸும் இன்னும் பலரும் கம்யூனிஸ்டுகள்தான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிருக்கு அஞ்சாமல் போராடியவர்களும் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தானே தவிர மன்னிப்பு கேட்டு காட்டிக் கொடுத்த சங்கிகள் கூட்டமல்ல.
சபரிமலை கோயில் விவகாரத்தை உசுப்பேற்றி காங்கிரஸோடு கள்ளக் கூட்டணி வைத்ததால் போன மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு கேரளாவில் பின்னடைவுதான். ஆனால் அனைத்து ஆரூடங்களையும் தகர்த்து கேரள வரலாறு காணாத அதிசயமாக இரண்டாவது முறையாக முதல்வரானார் தோழர் பினராயி விஜயன் எனும் கம்யூனிஸ்ட்.
இழந்த தளங்களான மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் நம்பிக்கை மலர்கள் துளிர் விட்டுள்ளன. அது நாளை விருட்சமாகும்.
மதுரை மக்களின் பாசத்துக்குரிய மக்கள் பிரதிநிதிகளாக தோழர் என்.சங்கரய்யா, தோழர் கே.பி.ஜானகியம்மா, தோழர் பி.மோகன், தோழர் என்.நன்மாறன் ஆகியோரின் பாரம்பரியத்தில் மக்கள் பணி செய்து வரும் தோழர் சு.வெங்கடேசனைக் கண்டு அஞ்சுவதால் பிதற்றுகிறது அந்த ஜந்து.
கம்யூனிஸ்டுகளின் சவப்பெட்டிக்கு ஆணி அடிப்பேன் என்று சொன்ன அந்த ஜந்து யார்?
பூரி
ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவிற்கு வந்த பக்தர் திரளை அயோத்திக்கு வந்ததாக போட்டோஷாப்
பொய்ப் பிரச்சாரம் செய்த ஃப்ராடு பேர்வழிதான் இது.
இதன் ஆணவத்திற்கு பாடம் புகட்டும் பொறுப்பு மதுரை வாக்காளர்களுக்குத்தான் உள்ளது.
தோழர் சு.வெங்கடேசன் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதோடு போலிப் பேரா ராம.சீனு டெபாசிட்டை இழக்க வேண்டும். அதை விட முக்கியம் நோட்டா வை விடவும் குறைவாக அந்த ஜந்துவின் வாக்குகள் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
ஆணவப் பேய்களை வேப்பிலை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி ஊர்வலம் விட வேண்டும்.
செய்வீர்களா மதுரை வாக்காளர்களே!
செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்
Thursday, March 14, 2024
நாவை அடக்கவும் குஷ்பு
திமுக, காங்கிரஸ் கட்சிகளில் குப்பை கொட்டி விட்டு இப்போது பாஜகவில் குப்பை கொட்டும் குஷ்பு அம்மையார் ஆணவம் தலைக்கேறி பேசிக் கொண்டிருக்கிறார்.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, அதை பெறுபவர்களுக்கு எந்த உறுத்தலும் வரக்கூடாது என்பதற்காக "மகளிர் உரிமைத் தொகை" என்று அழகாக பெயர் வைத்துள்ளார்கள். அதை பிச்சை என்று சொல்வது அவரின் சங்கிக் கொழுப்பு, காசுக் கொழுப்பு.
தமிழர்கள் காசு கொடுத்து அவர் நடித்த படங்களைப் பார்த்ததால்தான் அவருக்கு என்று பெயரும் சொத்தும். அதை தமிழர்கள் போட்ட பிச்சை என்றால் ஏற்றுக் கொள்வார்களா?
முன்பும் இப்படித்தான் "என்னால் சேரி மொழியில் பேச முடியாது" என்று சொன்னார்கள்.
இவர் பேசுவது அசிங்கமென்றால் அதற்கு கொடுக்கும் விளக்கங்கள் ஆபாசம்.
திருமதி குஷ்பு சுந்தர் அவர்களே, நாவை அடக்கவும். இல்லையெனில் உங்கள் புகைப்படத்துக்கு கொடுத்த மரியாதையை தமிழ்நாட்டுப் பெண்கள் நாளை உங்களுக்கு நேரடியாக கொடுக்கும் நிலை உருவாகும்.
Tuesday, February 21, 2023
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை . . .
Tuesday, December 6, 2022
இதுதான் சங்கித் திமிர்
இந்து மதமே
வேண்டாம் என்று பௌத்த மதத்திற்கு மாறியவருக்கு காவி உடையும் விபூதியும் அணிவித்து
காவித் தலைவரே என்று அழைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
Friday, June 18, 2021
இதுதான் சங்கி புத்தி
நேற்று மிகவும் எரிச்சலூட்டிய ஒரு பதிவு
அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சிலரை மிக மோசமாக பாதித்துள்ளது.
அதனால்தான் இப்படி ஒரு பதிவு.
தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்ற மேட்டிமை புத்தி மற்றவர்களை இழிவாக பார்க்க வைக்கிறது. சிதம்பரம் கோயில் அர்ச்சகர் பக்தரை தாக்கியதையும் தேவாரம் திருவாசகம் பாட முனைந்த ஆறுமுகசாமி ஓதுவாரை தீட்சிதர்கள் கெட்ட வார்த்தையில் திட்டி அடித்து நொறுக்கியதெல்லாம் இந்த பெண்மணிக்கு தெரியாது போல . . .
ஏதோ இவர்கள் வாயிலிருந்து மரியாதையான வார்த்தைகள் மட்டுமே வரும் என்று ஒரு நினைப்பு. மேலே சொல்லப்பட்டுள்ளதை விட கேவலமாக பேசுகிற சமபிரதாயக் காவலர்கள் ஏராளமானவர்களை நான் அறிவேன்.
தோற்றுப் போயிருக்கிற போதே இவர்களுக்கு இவ்வளவு திமிர் என்றால், தமிழகத்தில் மட்டும் அதிமுக கூட்டணி வென்றிருந்தால் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்!
பிகு 1: இது போட்டோஷாப் இல்லை. அந்த பெண்மணியின் ட்விட்டர் பக்கம் சென்றேன். இந்த குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற பதிவுகள் இதே ரகம். கடைந்தெடுத்த சங்கி என்று நன்றாகவே தெரிகிறது. முந்தைய பதிவை ஏன் நீக்கினாய் என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
பிகு 2 : இந்த பெண்மணி சரளமாக பேசியுள்ளதில் இருந்து கெட்ட வார்த்தைகள் பேசுவது அவருக்கு சர்வ சாதாரணம் என்று தெரிகிறது.
பிகு 3 : கருத்துச் சுதந்திரத்தையும் அவதூறையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள். அவதூறு என்பது இதுதான்.
Wednesday, February 3, 2021
திரையில் நாயகி, நிஜத்தில் வில்லி
இப்போதே இவ்வளவு ஆட்டமென்றால்
ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த செய்தி கீழே உள்ளது.
போராடும்
விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொல்வது மட்டுமல்ல, ரியானாவை வேறு “உட்கார் முட்டாளே,
தேசத்தை விற்க நாங்கள் ஒன்றும் உங்களைப் போல டம்மிகள் அல்ல” என்று வேறு திட்டுகிறார்.
Monday, October 19, 2020
குப்பைத் தொட்டியில் வீசியெறியுங்கள் எடப்பாடி
நமக்கு
தெரிந்தவர் வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் ஆறுதல் சொல்வது என்பது ஒரு நாகரீகமான பண்பு.
பிகு 1 : இதிலே அமித்து கையெழுத்திட்டிருப்பது அவருடைய தாய் மொழியான குஜராத்தியில் என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பிகு 2: எழுதி ஐந்தாறு நாளாச்சு. அதனால் என்ன எதிர்ப்பை தெரிவிப்பதுதானே மிகவும் முக்கியம்!
















