Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

Monday, April 28, 2025

ரெட்ரோ - அவசரப்பட்டு அசிங்கப்பட்ட சங்கி

 


வரும் மே மாதம் முதல் தேதி சூர்யாவின் புதுப்படம் ரெட்ரோ   வெளியாகிறது. 

சூர்யாவின் மீதும் ஜோதிகா மீதும் எப்போதும் வெறுப்பையும் விஷத்தையும் வன்மத்தையும் கக்கும் அயோக்கிய சங்கிகள், இந்த திரைப்படத்திற்கு எதிராகவும் வன்மத்தை கக்க தொடங்கி விட்டனர்.


பாவம் அந்த அடிமுட்டாள் கம் அயோக்கிய சங்கி! இன்னும் வெளியாகாத படத்தை எப்படி பார்த்தாய், திருட்டு விசிடி தயாரிக்கறவனா நீ என்றெல்லாம் கேட்டு அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

அடேய் சங்கிகளா! உங்களால் எந்த திரைப்படத்தையும் ஓட்டவும் முடியாது, அரங்கை விட்டு ஓட வைக்கவும் முடியாது. எதுக்குடா வீண் பெருமை? 

Thursday, November 28, 2024

சூர்யா - நீங்கள் வொர்த்தில்லை சங்கிகளே!

 


சூர்யாவும்  ஜோதிகாவும் நேற்று திருப்பதி கோயிலுக்கு போய் விட்டார்களாம். எட்டு மணிக்கு பாடத்துவங்கும் வெள்ளியங்கிரி போல சங்கிகளும் ஆரம்பித்து விட்டார்கள்.

கங்குவா தோல்வியால் அடிபட்டதால் புத்தி வந்து சனாதனத்திடம் அடிபணிந்து விட்டார்கள் என்றும்  கோயிலுக்கு செலவழிக்காதே என்று சொன்னதற்கு ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால் கங்குவா போல எல்லா படங்களையும் தோல்வியடைய வைப்போம் என்று பீற்றல் பெருமித மிரட்டல் வேறு.

ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி அதை உண்மையாக முயலும் சங்கிகளின் உத்தி இது.

ஜோதிகா சொன்னது என்ன? அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன்.

“தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதே தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு. மிகவும் மோசமான முறையில் புதர் மண்டிப் போய் பாம்புகள் உலாவும் இடமாக அது இருந்தது. கோயிலை பராமரிப்பதில் காண்பிக்கும் அதே அக்கறையை மருத்துவமனையை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும்.”

இதில் என்ன தவறு உள்ளது?

கோயிலுக்கு போகாதே என்று சொன்னாரா அல்லது கோயிலுக்கு பணம் கொடுக்காதே என்று சொன்னாரா?

ஆனால் சங்கிகள் சொல்லாத ஒன்றை சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மோடியை நல்லவர், வல்லவர் என்று சொல்லும் கூட்டத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன? அவர்கள் சொல்வது பொய்,பொய்யைத் தவிர வேறில்லை.

நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம் என்றோ அல்லது கடவுள் நம்பிக்கை கிடையாது என்றோ எப்போதுமே சொல்லாதவர்கள் கோயிலுக்கு சென்றதை ஏளனம் செய்வது வன்மம் இன்றி வேறில்லை.

நிற்க

கங்குவா சங்கிகளால்தான் தோற்றதா?

படம் வெளிவருவதற்கு முன்பு ஓவர் ஹைப்பை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்திருந்தார். வாயை பிளந்து பார்ப்பீர்கள் என்று சூர்யா சொன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது.

ஏனென்றால் அஜித்தின் சில மொக்கைப் படங்களையும் ரஜினிகாந்தின் மோசமான மொக்கைப்படமான அண்ணாத்தை யும் இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தின் இயக்குனர் என்பதுதான் காரணம்.

அஜித், ரஜினி போல சூர்யாவையும் வச்சு செய்திட்டார் சிவா.

கொடுத்த பில்ட் அப் போல படம் இல்லாததால் கங்குவா தோற்றது.

சரியில்லாத படம் என்பதால் மட்டுமே தோல்வியே தவிர சங்கிகள் காரணமல்ல, அதே போல பாமக வகையறாக்களும் காரணமில்லை. அப்படி அவர்களால் ஒரு படத்தை தோல்வியடையச் செய்ய முடியுமென்றால் வெற்றி பெறச் செய்யவும் முடியுமல்லவா? ஏன் சங்கி, பாமக கருத்தியலை கொண்டு வெளிவந்த மோகன்.ஜி யின் அனைத்து படங்களும் மரண அடி வாங்கியது?

ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் சங்கிகளோ பாமகவோ இல்லை.

அந்த அளவுக்கு அவர்கள் வொர்த் இல்லை.



பிகு : எட்டு மணிக்கு வெள்ளைச்சாமிதானே பேசுவாரு, இதென்ன வெள்ளியங்கிரி என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். “வைதேகி காத்திருந்தாள்”  வெள்ளைச்சாமி விஜயகாந்த் பாடலை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் “பூவே உனக்காக” வெள்ளியங்கிரி மீசை முருகேஷ் பாட வாய் திறந்தால் மக்கள் தெறித்து ஓடுவார்கள். அவர் பாடல் போலத்தான் சங்கிகளின் பதிவுகளையும் சகிக்க முடியாது.

Friday, July 22, 2022

எவ்வளவு வயிறு எரியுமோ?

 


அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ள சூர்யாவிற்கு வாழ்த்துக்கள். சூரரைப் போற்று படத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அதனால் அவருக்கு அந்த விருது அளித்தது சரியானதே . . .

அதே போல அப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது. அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றுள்ளனர்.

அவர்களுக்கும் மாண்டேலா படத்து வசனத்திற்காக விருது பெற்ற மடோன் அஸ்வின், சிறந்த தமிழ்ப்படத்துக்காக விருது பெற்ற "சிவரஞ்சனியும் சில பெண்களும்" ( ஆமாம். இப்படி ஒரு படம் வந்ததா?) இயக்குனர் வசந்த், அதே படத்தின் மூலம் துணை நடிகைக்கான விருது பெற்ற லட்சுமிப் பிரியா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

நீண்ட காலத்துக்குப் பின் தமிழ் திரையுலகம் அதிகமான விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்கு நாங்கள்தான் காரணம் என்று ஆட்டுக்காரன் பீற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் சங்கிகள் மிக அதிகமாக வெறுக்கும் சூர்யா விருது பெற்றதுதான்.

எத்தனை பேர் இப்போதே கடுமையான வயிற்றெரிச்சல் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்களோ! 

இளையராஜா போல  சூர்யாவையும் எங்கள் பக்கம் இழுக்க எங்கள் ஜி செய்த மாஸ்டர் பிளான் என்று மீசையில் ஒட்டிய மண்ணை துடைக்க முயற்சி செய்து பாருங்களேன். 

Monday, September 14, 2020

சூர்யா: ஜட்ஜுக்கு ஏன் கடுப்பு?



 நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது.





"கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் "  

என்ற வாசகத்தால்தான் ஜட்ஜய்யா கடுப்பாகி விட்டார் என்று பெரும்பாலானவர்கள் சொல்கின்றனர்.  ஆனால் அதை விட அவர் கடுப்பாக இன்னொரு வாசகம் இருக்கிறது. 




சதிகளைப் பற்றிப் பேசினால் அந்த விதிகளை வகுத்தவர்களுக்கு கோபம் வருவது நியாயம்தானே! 

ஆனால் இந்த முறை சூர்யா ஓங்கி அடித்தது ஒன்றரை டன்னுக்கும் மேல். அதனால்தான் சங்கிகள் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதை முதலில் வெளிப்படுத்தியவராக ஜட்ஜய்யா அமைந்தது தற்செயல் அல்ல.