Tuesday, August 25, 2020

அப்பல்லோ இட்லியை விட காஸ்ட்லியாக

 

கொரோனா தொற்றினால் அரசு  மருத்துவ மனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கான உணவுச் செலவு மட்டுமே ஒரு நாளைக்கு 25 கோடி ரூபாயாகிறது என்று எடப்பாடி சொல்கிறார்.

தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் இது வரை 54,000 என்ற எண்ணிக்கையை கடக்கவில்லை. (அதெப்படி 54,000 என்ற எண்ணிக்கையை மிகச் சரியாக பராமரிக்கிறார்கள் என்பது ஆய்வு செய்ய வேண்டிய இன்னொரு விஷயம்.

நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கு போடும் வசதிக்காக 55,000 என்று எடுத்துக் கொள்வோம். அதே போல அனைத்து தொற்றாளர்களுமே தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்வோம்.

கபசுரக் குடிநீர் என்று மருந்துச் செலவில் வருகிறது. ஆகவே உணவு, டீ, காபி செலவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கணக்கு போடுவோமா?

55,000 பேருக்கு 25 கோடி என்றால்

ஒரு தொற்றாளருக்கு ஒரு நாளைக்கு 4,545 ரூபாய் ஆகிறது.

ஒரு வேளைக்கு 1500 ரூபாய் செலவு என்று எடப்பாடி சொல்கிறார்.

இட்லி, பொங்கல், ஊத்தப்பம், சோறு, பொறியல், சாம்பார், ரசம், மோர் என்பதுதான் மூன்று வேளை உணவு மெனு.

ரொம்பவுமே காஸ்ட்லியான சரவணபவன் ஹோட்டலில் இருந்து வரவழைத்தாலும் கூட அதிகபட்சம் 500 லிருந்து 600 ரூபாய்க்கு மேல் ஆகாதே!

அப்பல்லோ இட்லியை விட காஸ்ட்லியாக இருக்கிறதே எடப்பாடி சார்?

என்ன இருந்தாலும் நீங்கள் A 2 வின் அரசியல் வாரிசு அல்லவா!

மோடி பிஎம். கேர்ஸ் என்று மர்ம நிதி திரட்டி எந்த விபரமும் சொல்லாமல் ஏமாற்றும் போது நான் கணக்கு காண்பிப்பது மேல் அல்லவா என்ற உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்கிறதே!


No comments:

Post a Comment