Sunday, July 31, 2022

ஆட்டுக்காரனுக்கும் ஆட்டுத்தாடிக்கும் சமர்ப்பணம்.

 

தனக்குத்தானே வீர பட்டம் கொடுத்துக்கொண்ட கோழை சாவர்க்கரின் வரலாற்றைப் படியுங்கள் என்று தொடர்ந்து உபதேசிக்கும் 20000 புத்தக புகழ் ஆட்டுக்காரனுக்கும்  தெலுங்கானா ஆட்டுத்தாடி மற்றும் புதுச்சேரி துணை ஆட்டுத்தாடி என இரு பொறுப்புக்களை வகிக்கும் சாவர்க்கரின் புதிய சிஷ்யையான  TAMIL MUSIC அம்மையாருக்கும் இந்த நூல் அறிமுகம் சமர்ப்பணம். . .




வாரம் ஒரு நூல் அறிமுகம்
இந்த வாரம் 31.07.2022.
" சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது"
ஆசிரியர் : ஆர். விஜயசங்கர்,
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
சென்னை -20,
விலை: ரூபாய் 100.00
அறிமுகம் : எஸ்.ராமன், வேலூர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரிகள் கடந்த சில வருடங்களாக தியாகியாக கட்டமைத்து வரும் சாவர்க்கரின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்து எழுதப்பட்ட நூல்.

வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது என்பது குறித்து காரல் மார்க்ஸ் அளித்த விளக்கத்தோடு துவங்குகிறது இந்நூல்.

"காலம்காலமாகவே இந்தியா ஒரு இந்து நாடுதான். ஆனால் அது இந்துக்களின் நாடு. பிற மதத்தவர், குறிப்பாக முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இந்தியா என்ற நாட்டின் நில எல்லைக்குள் வாழ்ந்தாலும் அவர்கள் இந்தியர்கள் அல்ல" என்பதுதான் சாவர்க்கர் முன்வைக்கும் கலாச்சார வாதம் என்பதை குறிப்பிடுகிற நூலாசிரியர் 1885 தொடங்கி 1940 வரை காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளை தலைமை தாங்கிய டபிள்யு.சி.பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆர்,எம்.சயானி, பாபு அம்பிகா சரண் மஜூம்தார், மவுலானா முகமது அலி, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் ஆற்றிய உரைகளை மேற்கோள் காட்டி அவர்களின் நிலைப்பாட்டிற்கும் சாவர்க்கரின் கருத்தோட்டத்திற்கும் இடையிலான மிகப் பெரிய முரண்பாட்டை நிறுவுகிறார்.

1857 சுதந்திரப் போரைப் பற்றி எழுதுகிற சாவர்க்கர் அதிலே இஸ்லாமியர்களின் பங்களிப்பைப் புகழ்ந்து எழுதினாலும் முகலாயர்களின் ஆட்சி வரைலிலான முஸ்லீம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை தேசிய அவமானம் என்று விஷத்தையும் கக்கினார் சாவர்க்கர் என்பதை ஆசிரியர் சாவர்க்கரின் நூலிலிருந்தே அம்பலப்படுத்துகிறார்.

அந்தமான் சிறைக்கு சாவர்க்கர் அனுப்பப்பட்ட காதையை விவரிக்கிற நூலாசிரியர் காலாபாணி சிறையில் மற்ற கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளை சாவர்க்கரும் அனுபவித்தார் என்பதையும் பதிவு செய்கிறார். அதுதான் அவரை மன்னிப்பு கடிதங்கள் எழுத தூண்டியதென்பதையும் விளக்குகிறார்.

அந்தமான் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்த பல விடுதலைப் போராளிகளைப் பற்றிய விபரங்களை விரிவாக எழுதியுள்ள ஆசிரியர் அவர்கள் யாரும் மன்னிப்பு கடிதம் எழுதவில்லை என்ற உண்மையையும் சேர்த்தே எழுதுகிறார். சிறைவாசிகளின் போராட்டத்தில் கூட கலந்து கொள்ளாத சாவர்க்கர், "அப்படி கலந்து கொண்டால் தான் அனுபவிக்கும் சலுகைகளை இழந்து விடுவோம்" என்று காரணமும் கூறியுள்ளார்.

கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்லிய சாவர்க்கர் "இந்துக்கள் அல்லாதவர்கள் பழைய கோவில்களுக்குள் எந்த அளவிற்கு செல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கும் எல்லைக்குள் அப்பால் தீண்டத்தாகாதவர்களை அனுமத்திக்க வழி வகுக்கும் எந்த சட்டத்தையும் இந்து மகாசபா ஆதரிக்காது, " என்றும் கூறினார் என்பதை சொல்லி சாவர்க்கரின் போலித்தனத்தை தோலுரிக்கிறார்.

முதல் உலகப்போரில் துருக்கி ஜெர்மனிக்கும் ஆதரவாகவும் இங்கிலாந்துக்கு எதிராகவும் நிற்பதை "உலக நாடுகளில் எல்லாம் இஸ்லாம் பரவி விடும்" என்று பார்க்குமளவுதான் சாவர்க்கரின் பார்வை அமைந்துள்ளது.

"வீரர்" என்ற அடைமொழி சாவர்க்கருக்கு எப்படி பொருந்தாது என்பதற்கு அவர் கேட்ட மன்னிப்புக்கள் மட்டுமல்ல, மகாத்மா காந்தியின் படுகொலை வழக்கிலிருந்து தப்பிக்க அவர் செயத வேலைகளும்தான் என்பது விரிவாக எழுதப்பட்டுள்ளது. நூலை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீரம் என்பது யாதெனில் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி மற்றும் மாவீரன் பக்த்சிங் ஆகியோர் வழக்குகளை எப்படி எதிர்கொண்டனர் என்பதை விவரித்துள்ளார். முழுமையாக படிக்க வேண்டிய பகுதிகள் அவை,

சாவர்க்கரின் கலாச்சார தேசியக் கொள்கையின் விரிவாக்கமே ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கோல்வாக்கர், ஹெட்கேவர் ஆகியோர் முன்வைத்தனர் என்பதை அவர்களின் நூல்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.

சாவர்க்கர் முன்வைத்த தேசிய திட்டத்தின் அடிப்படைதான் ராமர் கோயில் பிரச்சினையாக, குஜராத் கலவரமாக உருவெடுத்தது என்பதை எழுதுகிறார். ஆசிரியர்.

சாவர்க்கர் முன்வைத்த கோட்பாடுதான் குடியுரைச் சட்டமாக உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் கழுத்தின் மீது கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்திடக் கூடாது.

பிரிவினை சிந்தனையை ஊட்டிய நடைமுறைப் படுத்திய "சாவர்க்கரை வரலாறு என்றும் மன்னிக்காது"

மத வெறிக்கு எதிரான போரில் ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நூலான இதனை அளித்த தோழர் ஆர்.விஜயசங்கருக்கு நன்றி.

பின் குறிப்பு : Skeletons hidden in the cupboard என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எண்பது பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில் சங்கிகளின் அலமாரியில் உள்ள சாவர்க்கரின் எலும்புக் கூடு சுக்கு நூறாக உடைக்கப்பட்டுள்ளது. தோழர் விஜயசங்கர் தமிழாக்கம் செய்துள்ள "ஆர்.எஸ்.எஸ் - இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல்" என்ற நூலில் எத்தனை எலும்புக் கூடுகள் வெளியே கொண்டுவரப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதோ!
விரைவில் அதனையும் படித்து முடிக்க வேண்டும்.

செவ்வானம்

சாமியைக் கேட்டீங்களா ஆபீஸர்ஸ்? தெய்வக் குற்றமாயிடுச்சே!

 


கோயிலுக்கு அருகில் இருக்கிறது என்ற காரணம் சொல்லி சேலத்தில் ஒரு மாட்டுக்கறி கடையை மூட வேண்டும் என்று இந்து முன்னணியினர் கலாட்டா செய்ததால் கார்ப்பரேஷ்ன், காவல்துறை எல்லாம் சேர்ந்து அந்த கடையை மூடி விட்டார்கள்.

கலவரம் செய்வோம் என்று சொன்னவர்களை கைது செய்து உள்ளே தூக்கிப் போட துப்பில்லாதவர்களாக அரசு நிர்வாகம் இருப்பது ஆபத்தானது. அண்டா பிரியாணி திருடர்களை வளர்க்கிறார்கள்.

நிற்க, அது என்ன கோவில் (எந்த கோயிலாக இருந்தாலும் அரசு செய்தது தவறுதான் என்பது வேறு விஷயம்)  என்று பார்த்தால்  அது


ஏன்யா சுருட்டும் சாராயமமும் எடுத்துக் கொள்கிற முனியப்ப சாமி, ஃபீப் சில்லி மட்டும் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

அடப்பாவிகளா, இந்து முன்னணிக்கு பயந்து இப்படி தெய்வக்குற்றம் செஞ்சுட்டீங்களே!


Saturday, July 30, 2022

அது குரங்கு பொம்மையல்ல மோடி

 


ஒரு வலிமையான அரசு என்பது

அனைத்தையும் கட்டுப்படுத்தாது.

எல்லாவற்றுக்கும் தடை விதிக்காது.

அனைத்திலும் தலையிடாது.

என்று மோடி நேற்று திருவாய் மலர்ந்துள்ளார். அவர் யாரை மனதில் கொண்டு நக்கலடித்தார் என்று தெரியாது. 

ஆனால்  எதிரில் இருப்பது கண்ணாடி என்று தெரியாமல் குரங்கு பொம்மையின் விலை கேட்ட வடிவேலு போல தனது அரசு மிக மிக பலவீனமான அரசு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் 56 இஞ்ச் மார்பர். 

Friday, July 29, 2022

இளையராஜா காவிச் சிப்பாயாம் . . .



 

மோடியை வரவேற்று பாஜக ஒட்டியுள்ள சுவரொட்டியில் காவிச்சிப்பாய்கள் என்ற அடைமொழியில் இளையராஜாவையும் இணைத்துள்ளார்கள்.

நாமெல்லாம் அவரை இசை அரசராக கருதிக் கொண்டிருந்தால் சங்கிகள் அவரை மோடியின் சிப்பாயாக மாற்றி விட்டார்கள்.

மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட்டதற்கு அவருக்கு இந்த இழிவெல்லாம் தேவைதான் . . .

முட்டாள் சங்கிகள் கேட்பார்களா?

 


செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பவர்களை வரவேற்கும் காணொளி வந்ததில் இருந்து சங்கிக் கூட்டம் புலம்பிக் கொண்டு இருந்தது. "செஸ் விளையாட்டுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் இந்த வீடியோவில்? ஏன் விஸ்வநாதன் ஆனந்தையோ பிரஞ்ஞானந்தாவையோ இணைக்கவில்லை?" என்றெல்லாம் கேள்வி கேட்டு தாங்கள் எப்போதும் முட்டாள்கள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள். ஆமாம். அந்த காணொளியில் விஸ்வநாதன் ஆனந்த், பிரஞ்ஞானந்தா இருவருமே இருந்தார்கள். இந்த முட்டாள்கள் காணொளியில் ஸ்டாலின் முகம் பார்த்ததுமே சேனலை மாற்றி விட்டார்கள் போல . . .

இதோ நேற்றைய நிகழ்வின் படம்.

ஜோதியை மோடியும் முதல்வரும் மட்டுமல்ல செஸ் விளையாட்டு வெற்றி மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்த அத்தனை பேரும் உள்ளார்கள். 

இப்போது சங்கிகள்  என்ன சொல்வார்கள்?

தமிழ்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து நடத்தும் ஒரு சர்வதேச நிகழ்வுக்கு வருபவர்களை முதல்வர் வரவேற்காமல் முட்டாள் சங்கிகளின் முட்டாள் தலைவன் ஆட்டுக்காரனா வரவேற்க முடியும்?

அதே முட்டாள் சங்கிகள், மோடிக்கும் செஸ்ஸிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் விழாவை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்பார்களா?

Thursday, July 28, 2022

தீர்ப்பும் - திணிப்பும்

 



தீர்ப்பும் - திணிப்பும்

தோழர் க.கனகராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)


நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் பாஸ்போர்ட் குறித்தான ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் “ஐ.பி.எஸ். அதிகாரி திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர் என நான் சான்றளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகிறேன். அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார். அவர் இல்லையென்றால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது”என்று அண்ணாமலைக்கு Annamalai ஆஹா, ஓஹோ என்று பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கை 2021ல் ஒரு வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பலரையும் விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் இந்த பிரச்சனையில் திரு அண்ணாமலை ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முழுக்க, முழுக்க திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை குறிவைத்தே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த கடிதத்தின் இரண்டாம் பக்கத்தின் ஏழாவது பாராவில் திரு அண்ணாமலை மிகக் குறிப்பாக, திரு டேவிட்சன் தேவாசீர்வாதத்தை குறிவைத்து கீழ்க்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

“இந்த வழக்கை கவனித்தால் ஒரு கும்பல் சேர்ந்து இதைச் செய்திருப்பதாக தெரிகிறது. இந்த போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட காலத்தில் மதுரை காவல்துறை ஆணையாளராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களின் ஈடுபாடு இல்லாமல் கீழ்மட்ட அதிகாரிகள் இந்த குற்றச் செயலை புரிந்திருக்க முடியாது.” என்று நேரடியாக திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை வன்மத்துடன் குறிவைத்திருக்கிறார்.

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்கிற நிலையில் திரு அண்ணாமலையின் முழு கவனமும் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை குறிவைத்தே இருக்கிறது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த திரு அண்ணாமலைக்கு நிச்சயமாக பாஸ்போர்ட் சம்பந்தமான விபரங்களில் யாருக்கு தொடர்பிருந்திருக்கும் என்பது தெரிந்திருக்கும். இருந்தும் டேவிட்சன் தேவாசீர்வாதம் என்கிற பெயருக்காகவே திட்டமிட்டு இந்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது அண்ணாமலையின் நோக்கமே கெட்ட நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கமாக இருந்திருக்கிறது.

எனவே, இந்த வழக்கில் அண்ணாமலையை குறிப்பிட்டு ஏதாவது கூறவேண்டுமென்றால் அண்ணாமலை திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப முயற்சித்திருக்கிறார் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாறாக அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார் என்று நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற நடைமுறைகளிலிருந்து விலகியதாகவும், பாஜக தலைவராக இருப்பதால் அதை பாராட்ட வேணடுமென்கிற நோக்கத்தோடு சொல்லப்பட்டதாகவுமே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வளவு விசாரணை நடைபெற்ற பிறகு திரு. அண்ணாமலை இல்லை என்றால் “இந்த விவகாரம் வெளிச்சத்திற்கே வந்திருக்காது” என்று எல்லா புகழையும் அண்ணாமலைக்கு நீதியரசர் வழங்கியிருக்கிறார். ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்து வருகிறார் (இந்து தமிழ் திசை) என்பது இந்த வழக்கில் மட்டுமின்றி பொதுவாகவும் அவரைப்பற்றி சொல்வதாகவே அமைந்திருக்கிறது.

கடந்த காலத்திலும் பாஜகவோடு தொடர்புடைய மாரிதாஸ் மீதான வழக்கை அதிவிரைவில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் ரத்து செய்ததை வழக்கத்திற்கு மாறான வேகம் காட்டப்பட்டதாக விமர்சனம் எழுந்ததை புறந்தள்ளி விட முடியவில்லை. இதேபோன்று மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கையும் மின்னல் வேகத்தில் சிபிஐக்கு மாற்றிய பிரச்சனையும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள் தனது தனிப்பட்ட பாஜக பாசத்தை நீதிவழங்கும் முறையிலும் கலந்திருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த நேரத்தில் கே.எம். ஜோசப் என்கிற உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் ஏகமனதாக பரிந்துரைத்ததையும், அதை பாஜக ஒன்றிய அரசு மறுதலித்ததையும் கொலிஜியம் மீண்டும் வலியுறுத்திய பிறகு பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி நியமனம் செய்ததையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. பெயர்களின் காரணமாக உள்நோக்கத்தோடு ஒரு அதிகாரியின் மீது சம்பந்தமே இல்லாமல் குற்றம் சுமத்துவதும், ஒரு நீதிபதியை காரணமே இல்லாமல் நிராகரிப்பதும் பாஜகவின் வழக்கமாக இருக்கிறது. நீதிமன்றங்கள் இதற்கு துணை போகக் கூடாது.

GoBackModi- சொல்ல சொல்ல இனிக்குதடா . .

 


மக்களை பிளவு படுத்தி அவர்தம் ரத்தம் குடிக்கும் காட்டேரி,
இந்தியாவின் அனைத்து விழுமியங்களையும் சிதைத்த புல்டோசர்,
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த கொலைகாரர்,
இந்தியாவின் அனைத்து செல்வங்களையும் தன் நண்பர்களுக்கு விற்ற தரகர்,
மக்களின் நலன் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத கல் நெஞ்சக்காரர்.

மொத்தத்தில் மனித குல விரோதி.

இந்த மனிதன் எத்தனை முறை வந்தாலும் உரக்கச் சொல்வேன்.
#GoBackModi.

உங்கள் வீட்டிற்கு வரும் நச்சுப்பாம்பை வரவேற்று ஆரத் தழுவும் நாகரீகம் கொண்டவரென்றால் சொல்லாதீர்.

அத்தகு முட்டாள்தனமான நாகரீகம் எனக்கில்லாததால் நான் சொல்வேன்
#GoBackModi.


Wednesday, July 27, 2022

இதையும் கவனிப்பீங்களா கமிஷனர்?

 


#GoBackModi என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் கண்காணிக்கப் பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர்  கூறியுள்ளார்.

அவரிடம் சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று விரும்புகிறேன்.

#GoBackModi என்று எழுதுபவர்களை மட்டும்தான் கவனிக்கிறீர்களா, அல்லது 

#ReturnBackModi

#WeDontWelcomeModi

#GoHomeModi,

#TamilsDontWelcomeModi

#ModiNotaGuest

#WeDontHearModiLies

#NoPlaceToAdaniBroker

என்றெல்லாம் எழுதினாலும் கவனித்து நடவடிக்கை எடுப்பீங்களா கமிஷனர் சார்?

#GoBackModi மட்டும்தான் உங்க பிரச்சினையா?

#GoBackModi என்பது பல வருடங்களாகவே தமிழர்களின் தாரக மந்திரமாக மாறி விட்டது. எடப்பாடி காலத்தில் கூட #GoBackModi ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லெல்ல சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அப்போது கூட இப்படிப்பட்ட மிரட்டல்கள் இருந்ததில்லை. 

இப்போது ஏன் இப்படி?

கமிஷனர் சொன்னது முதல்வருக்குத் தெரியுமா?

அழுகிப் போன ஈரலை மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிடில் அது மிகப்பெரிய நோயாக மாறி விடும்.

Tuesday, July 26, 2022

அஸ்ஸாமிற்கு அன்புடன் 25 லட்சம்

 


அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவ  இன்சூரன்ஸ் ஊழியர்களின் அன்போடு அவர்கள் அளித்த நிதி ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம் இன்று ரெய்ப்பூரில் நிறைவுற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ரமேஷ்,  அவர்களால் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களிடம் அளிக்கப் பட்டது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினராக பெருமிதப்பட்ட தருணம் இது


மாலன் வாங்கிய பல்பு

 


அதிகப்பிரசங்கித்தனமாக மூக்கை நுழைத்து மூக்குடைபட்டு பல்பு வாங்கிய மாலனின் கதையே கீழே பாருங்கள்




Monday, July 25, 2022

பதிலுண்டா சங்கி? ???

 ஃப்ரண்ட்லைன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தோழர் விஜய. சங்கர் எழுப்பியுள்ள கேள்விக்கு சங்கி ஷீராமால் பதில் சொல்ல முடியுமா? 



இது பதில் இல்லையே மாலன் . .

 


இமையம் சாகித்ய அகாடமி விருது பெற்ற போது இறுதிச் சுற்றில் இடம் பெற்ற நூல்களை பட்டியலிட்டு உங்கள் தேர்வு எதுவாக இருந்திருக்கும் என்று மாலனிடம் கேட்டேன்.

அவர் கோபமாகி விட்டார்.

அதெல்லாம் சாகித்ய அகாடமியே வெளியிட்டு விட்டது. இந்த விவாதத்திற்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு என்று வேறு கேட்டார். 





நான் கேட்டது என்ன? அவர் சொன்ன பதில் என்ன? 

இமையம் வென்ற போது அவர் செய்தது விஷமத்தனம். "செல்லாத பணம்" தாண்டியும் வேறு நல்ல நூல்கள் இருந்தது என்றொரு பிரச்சாரம் செய்யவே அவர் அந்த பட்டியலை வெளியிட்டார். அவர் நினைத்தது போலவே பின்னூட்டங்கள் வந்திருந்தது.

தன் நூலுக்கும் அதே போல செய்திருந்தால் மாலன் மனிதன். அவர்தான் மோதிக்கு எழுத்துக்களை விற்கும் தரகராயிற்றே!

எச்சரிக்கை: இன்னும் இரண்டு மாலன் பதிவுகள் வரும்.

ரெய்ப்பூரில் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சென்றுள்ளதால் ட்ராப்டில் உள்ள பதிவுகளை வெளியிட இதுவே தருணம். 

Sunday, July 24, 2022

பாவம் மாலன் பதற்றமாயிட்டாரு!

 

மூத்தத்த்த்த்தவர் மாலனை பதற்றப்பட வைத்த சம்பவம் ஒன்று நடந்தது. கவிஞர் புதிய மாதவி சங்கரன் அவர்கள் ஒரு பதிவில் இன்று தமிழக ஊடகங்களும் அரசும் ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருன்தார்.

"உண்மையை உரக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி" என்று ஆரவாரமாக அங்கே வந்து சேர்ந்தார் மாலன்.

இந்த உணமை ஒன்றிய அரசுக்கும் ஊடகங்களுக்கும் அதிகமாக பொருந்தும் என்று நான் எழுதியதும் அண்ணனால் தாங்க முடியவில்லை.

நடந்த கூத்து கீழே உங்களுக்காக





மாலன் மாட்டிக் கொண்ட கதை இதிலேயே இருக்கிறது. தனி ஒரு பதிவில் அதை விரிவாக எழுதுகிறேன். 

சூப்பர் நஞ்சம்மா!

 


குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

சிறந்த திரைப்பட பாடகி விருது பெறுகிறார்...
அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தில் வரும் இருளர் மொழி பாடலை எழுதியவர் கூட#நஞ்சம்மா அவர்கள் தான்..
மேற்சொன்ன திரைப்படத்தில் டைட்டில் பாடலாக
வரும் இந்த பாடலை கேட்கும் போதே நம்மை என்னமோ செய்யும்......

அட்டப்பாடியில் பிறந்து வளர்ந்த #நஞ்சம்மா என்ற இந்த பழங்குடி கலைஞர், தனது 13வது வயதிலேயே பாட ஆரம்பித்தவர்.....
ஆசாத் கலா சங்கம் என்ற கலைக்குழு உறுப்பினர்....

ஆடு மாடுகளை மேய்த்தும், சிறிய சிறிய விவசாய வேலைகளையும் செய்து வாழ்க்கை நடத்தும் இந்த #வெள்ளந்தி கலைஞருக்கு எம் ஜி ஆர்/சிவாஜி ஆகியோர் #நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் என்று ஒரு முறை கூறினார்.. வைகைப்
புயல் வடிவேலுவின் நகைச்சுவை கூட தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய #நஞ்சம்மா

அவர்களிடம், அவர் #அய்யப்பனும் #கோஷியும் திரைப்படத்தில் தனது மருமகனாகவும் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்து பிஜு மேனன், கதாநாயகனாக நடித்த பிரித்வி ராஜ் ஆகியோரை தெரியுமா என்று,படம் வெளி வந்த போது பத்திரிகையாளர்கள் கேட்ட போது,
அப்பாவியாக #தெரியாது என்று பதிலளித்தார் அவர்.......
சில நேரங்களில், விருதுகள் கூட, பெறுபவரைப்
பொறுத்து பெருமை அடைகிறது...
தோழர் Shahul Hameed

அப்பாடலின் யூட்யூப் இணைப்பு இங்கே


Saturday, July 23, 2022

கோடி அருவி கொட்டுதே . . .

 


மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் வரும் "கோடி அருவி கொட்டுதே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப்  இணைப்பு இங்கே

பின் குறிப்பு : என் மகன் வாசிக்கும் வரை இப்படி ஒரு பாடல் இருப்பதே தெரியாது. அதன் பின்பே கேட்டேன். எத்தனை நல்ல பாடல்கள் ஒளிவட்டம் கிடைக்காமலே முடங்கியதோ?

ஜனாதிபதி - வேறென்ன சொல்ல?

 


புதிய ஜனாதிபதி பற்றி என்ன சொல்ல?


கீழே உள்ள இரண்டு கார்ட்டூன் போதும். வேறொன்றும் சொல்ல அவசியமில்லை.




Friday, July 22, 2022

எவ்வளவு வயிறு எரியுமோ?

 


அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ள சூர்யாவிற்கு வாழ்த்துக்கள். சூரரைப் போற்று படத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அதனால் அவருக்கு அந்த விருது அளித்தது சரியானதே . . .

அதே போல அப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது. அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றுள்ளனர்.

அவர்களுக்கும் மாண்டேலா படத்து வசனத்திற்காக விருது பெற்ற மடோன் அஸ்வின், சிறந்த தமிழ்ப்படத்துக்காக விருது பெற்ற "சிவரஞ்சனியும் சில பெண்களும்" ( ஆமாம். இப்படி ஒரு படம் வந்ததா?) இயக்குனர் வசந்த், அதே படத்தின் மூலம் துணை நடிகைக்கான விருது பெற்ற லட்சுமிப் பிரியா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

நீண்ட காலத்துக்குப் பின் தமிழ் திரையுலகம் அதிகமான விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்கு நாங்கள்தான் காரணம் என்று ஆட்டுக்காரன் பீற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் சங்கிகள் மிக அதிகமாக வெறுக்கும் சூர்யா விருது பெற்றதுதான்.

எத்தனை பேர் இப்போதே கடுமையான வயிற்றெரிச்சல் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்களோ! 

இளையராஜா போல  சூர்யாவையும் எங்கள் பக்கம் இழுக்க எங்கள் ஜி செய்த மாஸ்டர் பிளான் என்று மீசையில் ஒட்டிய மண்ணை துடைக்க முயற்சி செய்து பாருங்களேன். 

வாய்ப்பில்லை ஜட்ஜய்யா . . .

 


மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி மோதல்களை உருவாக்கும் வகையில் வெறுப்புப் பேச்சு எனும் விஷத்தை கக்குபவர்கள் மீது ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற பட்டியலை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று சொல்லியுள்ளது.

ந்ரேந்திர மோடி தொடங்கி ஐ.டி செல் தரும் செய்தியை பகிர்ந்து கொள்ளும் முட்டாள் சங்கி வரை அத்தனை பேருமே விஷம் கக்கும் கயவர்கள். நூபூர் சர்மா எல்லாம் அந்த நச்சுக்கடலின் சிறு துளி அவ்வளவுதான்.

நேற்று கூட ஒரு ஐ.டி செல் பகிர்வை பார்த்தேன். அக்னிபாத்தில் 80 % முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் சேர்ந்துள்ளார்கள். துப்பாக்கி படத்து ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒரு கேவலமான, கீழ்த்தரமான பகிர்வை பார்த்தேன். இது போன்ற வெறியர்களை ஊக்குவிப்பதே பாஜகவின் பிரதான வேலை. 

அப்படி இருக்கையில் கட்சிக் கொள்கையை அமலாக்கும் வெறி பிடித்த பாம்புக்குட்டிகள் மீது தலைமைப்பாம்பு என்ன நடவடிக்கை எடுக்கும்?

அதனால உங்களுக்கு பதில் கிடைக்க வாய்ப்பில்லை ஜட்ஜய்யா!

எச்.ராசா ஐகோர்ட்டை சொன்ன மாதிரி உங்களை சொல்லாம இருந்தா சரி.

அதற்குக் கூட வாய்ப்பில்லை. நூபூர் சர்மா வழக்கு போது வெறியனுங்க ஏற்கனவே திட்டிட்டாங்க. 

Thursday, July 21, 2022

21 வருடங்கள் ஆனாலும்

 


21 வருடங்கள் ஆலாலும் . . .

நடிகர் திலகம் மறைந்து 21 வருடங்கள் ஆயிற்று. ஆனாலும் அவர் தமிழ்த் திரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு நிகரான நடிகர் இப்போதும் இல்லை. இனியும் வரப்போவதில்லை. 

நாதஸ்வரத்தை அனுபவித்து வாசிக்கும் சிக்கல் சண்முகசுந்தரத்தை  கண்டு ரசியுங்கள்  . . .





மொட்டைச்சாமியாரை உள்ளே போடுங்கய்யா

 


ஊடகவியலாளர் முகமது ஸுபைருக்கு உபியில் அவர் மீது போடப் பட்டிருந்த அனைத்து வழக்குகளிலும் பிணை கொடுத்து எங்கள் அனுமதி இல்லாமல் இனி அவரை கைது செய்யக்கூடாது என்றும் விஷ வளையம் தொடர அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று முடிவெடுத்து தீர்ப்பளித்து விட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உபி முதல்வர் மொட்டைச்சாமியார் மீது விழுந்த செப்பல் ஷாட்.

நியாயப்படிப் பார்த்தால் இந்த அராஜக செயலுக்கு மொட்டைச் சாமியாரை தூக்கி உள்ளே போட வேண்டும். 

Wednesday, July 20, 2022

உனக்கென்ன குறைச்சல் . . .


 

இன்று காலை தோழர் ச.சுப்பாராவ் எழுதியிருந்த எம்.எஸ்.வி பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். 

அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பாடல்களான "உனக்கென்ன குறைச்சல்?" பாடலும் "மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்" பாடலும் இன்று நாள் முழுதும் மனதின் ஒரு ஓரத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மனதில் ஒலித்த பாடலை வீட்டிற்கு வந்ததும் கேட்டேன். அதனை உங்களோடும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இதிலே ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

"உனக்கென்ன குறைச்சல்" பாடல் இடம் பெற்ற வெள்ளி விழா திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி.குமார். மெல்லிசை மன்னர் திரை வாழ்வில் உச்சத்தில் இருந்த நேரம் அது. ஆனாலும் அவர் இன்னொருவர் இசையில் பாடினார் என்பது சிறப்பான செய்கை அல்லவா!







எம்.எஸ்.வி, படித்தேன், பகிர்கிறேன்

 இசை மேதை எம்.எஸ்.வி (மெல்லிசை மன்னர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும்) பற்றி எழுத்தாளரும் எங்கள் மதுரைக் கோட்ட தோழருமான தோழர் ச.சுப்பாராவ் முன்பு எழுதியிருந்ததை இன்று மீண்டும் பகிர்ந்து கொண்டிருந்தார். சுவாரஸ்யமான அந்த பதிவை படித்தேன். உடனடியாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



 தீக்கதிர் வண்ணக் கதிரில்

வெளியான என் கட்டு ரை
நீ ஒரு ரா…ஜா..
ச.சுப்பாராவ்
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். எங்கள் கலைக் குழுவின் பாடகர் தோழர் வின்சென்ட்டிற்கு ஒரு பெரிய இசைமேதையுடன் ஒருநாள் முழுக்க இருக்கும் பேறு கிடைத்தது. அந்த மேதை நம் தோழரோடு சகஜமாகப் பேசிப் பழக, நம் தோழர் சற்று உரிமை எடுத்துக் கொண்டு, ‘ஐயா, தாங்கள் ஒரு வரி பாடவேண்டும் என்றாலும், ஹார்மோனியப் பெட்டி இல்லாமல் பாடுவதில்லையே, ஏன்?’ என்று கேட்க, பல்லாயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கிய அந்த இசைமேதை ‘ஸ்ருதி மாறிவிடுமோ என்ற பயம்தான் காரணம்’, என்றாராம் சீரியஸாக. தோழர் என்னிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். அப்போதே அந்த பெரியவருக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கும். அவரது இசை அனுபவம் அறுபதாண்டுகள் இருக்கும். அந்தத் தொழில் பக்திதான் அவரை உச்சிக்குக் கொண்டுவந்தது. தமிழக மக்களை அவரைக் கொண்டாட வைத்தது. அந்த இசை மேதை எம்.எஸ், விஸ்வநாதன் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை!

இங்கு நான் உணர்ந்தே மெல்லிசை மன்னர் என்ற அவரது பட்டத்தைத் தவிர்த்து இசை மேதை என்று குறிப்பிட்டுள்ளேன். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு, புகழ் ஏணியில் ஏறும் காலத்தில் ஏதேனும் பட்டம் வழங்கப்பட்டு விடுகிறது. அது அவர்களது பெயரோடு பெயராக ஒட்டிக் கொண்டு அப்படியே நிலைத்தும் விடுகிறது. இப்போது எம்எஸ்வியின் மரணச் செய்தி கேட்டு கலங்கி நிற்கும்போது, மனதில் அவர் உருவாக்கிய எத்தனை எத்தனையோ பாடல்களில், அந்தக் கணத்தில் தோன்றும் பாடல்களை முணுமுணுக்கும்போது, அவரது மெல்லிசை மன்னர் என்ற பட்டம் சேர்ந்து சேர்ந்து நினைவிற்கு வருகிறது. அவரது இசை மெல்லிசை மட்டும்தானா? அதில் மரபார்ந்த இந்திய சங்கீதத்தின் ஆழமும், கனமும், அழுத்தமும், குடித்து முடித்த பில்டர் காபி ருசி போல, பாடல் முடிந்தபின்னும் மனதில் பரவிக்கொண்டே இருக்கும் சாஸ்திரிய ருசியும் கிடையாதா? என்று யோசிக்கும் போது, பட்டம் ஏதோ மரியாதைக்குத் தரப்பட்டது. அவரது இசை வெறும் மெல்லிசை மட்டுமன்று என்று தோன்றுகிறது.

ஜி.ராமநாதன், சி.ராமச்சந்திரா, ஆதிநாராயண ராவ், ஹேமந்த் குமார் முகர்ஜி போன்ற இசையமைப்பாளரின் இசைகளைக் கேட்க ஒரு சாஸ்திரிய சங்கீத ஞானம் இருப்பது அவசியமாகப் படும். எம்எஸ்வியின் இசைக்கு எதுவும் வேண்டாம். கேட்க இரு காதுகளும், காதுகள் கேட்டதை வாங்கி, பொங்கிப் பொங்கிப் பரவசமடைய ஒரு எளிய ரசிக மனமும் இருந்தால் போதும். ஆனால், அதற்காக அவரது இசை கர்நாடக அல்லது மேற்கத்திய மரபு சார்ந்த இசையன்று என்று நாம் கருதிவிடக்கூடாது. பின்னைக்கும் பின்னையாய், முன்னைக்கும் முன்னையாய், பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் – பிராசீனத்திற்கும், பிராசீனமாய், நவீனத்திற்கும் நவீனமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. லலிதாங்கியும் தெரியும், ஆபோகியும் தெரியும். வால்ட்ஸ், ஜாஸ் – அதுவும் தெரியும். வயலின்களில் குரோமாடிக், பிஸ்ஸிகாடோ பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார் என்று அவரது இசைமேதமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகும் வாலி, கடைசியில் சொல்வது மிக முக்கியமானது. ஆயினும் அவ்வறிவை அளவோடு பயன்படுத்துவார் என்று சொல்லிவிட்டு தம் பாணியில், சந்தனம் நிறைய இருக்கிறதே என்று புட்டத்தில் பூசிக் கொள்ள மாட்டார் என்கிறார். அதனால்தானோ என்னமோ, எத்தனை எத்தனையோ நுட்பங்களுடன் அவர் இசையமைத்த பாடல்களில் அந்த நுட்பங்கள் கல்யாண வீட்டு வாசலில் லேசாய் தடவிக் கொண்ட சந்தனம் போல் தெரிந்தும் தெரியாமலும் வாசம் மட்டும் வீசுகின்றன.

பொதுவாக ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பிடித்தமான ராகம் இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை எம்எஸ்விக்கு அப்படி தனிப்பட்ட ஃபேவரைட் ராகம் என்று ஒன்று இல்லை. பாடலின் இசை கோரும் ராகம் அவரையறியாமல் அவரிடமிருந்து வந்தது. பாடலின் இனிமையில், மென்மையில் அது சங்கோஜத்துடன் மறைந்தும் நின்றது. முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம் மத்யமாவதி ராகம் என்று தெரியாதவர்களுக்கு, அதை ரசிப்பதில் எந்தக் குறையும் இல்லை. ( நாம் பாடினால் அடுத்த வரியை நம்மை அறியாமல் தித்திப்பதோ கண்ணம் என்று மூன்று சுழி ணவில்தான் பாடுவோம். டி.எம்எஸ் கடினமான சங்கதிகள் வரும் இடங்களில் கூட இரண்டு சுழி னவை மிக கவனமாக உச்சரிப்பது இந்தப் பாட்டின் மற்றொரு அழகு!). மத்யமாவதியின் சாயலையே கொண்டுள்ள நி1, நி2 இரண்டும் பேசும் பிருந்தாவன சாரங்காவில் பெண் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடலின் பிரிலூடில் வரும் புல்லாங்குழலில் பிருந்தாவன சாரங்காவின் அடையாளமான இரண்டு நிஷாதங்களையும் அடுத்தடுத்து அடுக்கி, பநிநிஸா, நிநிஸா, பாமாரிஸா என்று குழைவாகக் கொண்டுவந்து நிறுத்துவது மிகப் பெரிய சங்கீத மேதைகளால் மட்டுமே முடியும். சங்கீதம் தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரு சேர மயக்கிய எத்தனையோ பாடல்களில் அதுவும் ஒன்று. இன்னும் சொல்லப் போனால், சங்கீதம் தெரியாதவர்களுக்கு இன்னும் சற்று கூடுதலாகப் பிடித்த பாடலாகவும்கூட அது இருக்கக் கூடும்.

ஒரே சாயலுள்ள இரு ராகங்களை எது எங்கு வருகிறது என்று தேர்ந்த ரசிகனும் கண்டுபிடிக்க முடியாத வகையில் கலந்து ரஸவாதம் செய்ய எம்எஸ்வியால் மட்டுமே முடிந்தது. மற்றவர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட விந்தையைச் செய்ததில்லை. நான் சிறுவனாக இருந்தபோது வந்த எம்ஜியாரின் சிரித்து வாழ வேண்டும் படத்தில் வந்த ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ என்ற பாடல் ஹமீர் கல்யாணியா? சாரங்காவா? என்ற விவாதம் நாற்பதாண்டுகளாக நடக்கிறது. இணையம் வந்தபின் இன்னும் வீச்சோடு நடக்கிறது. எங்கு ஹமீர்கல்யாணி, எங்கு சாரங்கா என்று அவருக்கே தெரியாமல் அவரது கைவிரல்கள் ஹார்மோனியத்தில் பறந்து பறந்து ஏதோ மாயவித்தை செய்துவிட்டன. ஜெமினி கணேசனுக்கு நிலவே என்னிடம் நெருங்காதே என்றும், எம்ஜியாருக்கு நீ என்னென்ன சொன்னாலும் கவிதை என்றும் ஒரே பாகேஸ்ரீ ராகத்தை ஜெமினி வடிவிலும், எம்ஜியார் வடிவிலும் நம் கண்முன் நிறுத்த முடிந்த மாமேதை அவர்.

அவர் எவ்வளவு சிறந்த இசையமைப்பாளரோ அவ்வளவிற்கு சிறந்த பாடகர் என்கிறார் இசை விமர்சகர் ஷாஜி. பொதுவாக இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களாக இருப்பதில்லை. அந்தக் கட்டுரையிலேயே சலீல் செளத்ரி தன் பாடல்களைப் பாடி ஒரு ஆல்பம் போட எத்தனை சிரமப்பட்டார் என்பதைச் சொல்கிறார் ஷாஜி. முத்தான முத்தல்லவோ படத்தில் எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடலை உதாரணம் காட்டும் அவர் எஸ்பிபி குரலில் இருக்கும் தொழில் முறைப் பாடகன் தொனியையும், எம்எஸ்வியின் குரலில் தொழில் முறைப்பாடகன் தொனியை மீறி அந்தப் பாடலை உருவாக்கிய கம்போஸரின் தொனியைச் சேர்த்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அந்தப் பாடலில் ஏழுஸ்வரங்களிலும் சிரித்துக் காட்டியவரல்லவா அவர்! அவர் பாடகராகவும் இருந்ததால்தான் அவரது பாடல்களில் தனி முத்திரை இருந்தது. ஒரு பாடல் எம்எஸ்வியின் பாடலா இல்லையா என்று சந்தேகம் வந்தால், அவர் குரலில் பாடிப்பாருங்கள், சரியாக வந்தால் அவர் பாடல், இல்லாவிட்டால் அது வேறொரு இசையமைப்பாளரின் பாடல் என்று எஸ்பிபி ஒரு பேட்டியில் சொன்னார். வாசகர்கள் முயற்சித்துப் பாருங்கள். அது நூறு சதவிகிதம் உண்மை என்று தெரியும். பாடலைச் சொல்லித் தரும் போது அவர் போடும் சங்கதிகளில் பத்து சதவிகிதம் கூட நாங்கள் பாடியதில்லை என்று டிஎம்எஸ், சுசீலா, வாணி ஜெயராம் என்று பல பாடகர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு முன் அப்படி பாடகர்களுக்குப் பாடிக் காட்டியவர் ஜி.ராமநாதன் மட்டுமே.

இன்றும் கல்யாண வீடுகளில் நடக்கும் ஆர்கெஸ்ட்ராக்களிலும் சரி. நாம் திரையிசை பயில வகுப்பிற்குச் சென்றாலும் சரி. அங்கு வாசிக்கப்படும், அல்லது நமக்குக் கற்றுத்தரப்படும் பாடல்களின் வரிசை ஒன்றே போதும் எம்எஸ்வியின் நிரந்தரப் புகழைப் பறைசாற்ற. முதலில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அல்லது ஆயர்பாடி மாளிகையில். பிறகு சாந்தி நிலையத்தின் இறைவன் வருவான். ஒன்று அல்லது இரண்டு புது குத்துப் பாட்டு. பிறகு சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும், பாவாடை தாவணியில் பார்த்த உருவமா, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று விஸ்வநாதனின் வேறு வேறு இசைக் கோலங்கள் முடிவற்று வந்து கொண்டே இருப்பது நம் எல்லோரின் சொ`ந்த அனுபவம்.

ஒரு உச்சத்தை அடைந்த பிறகு படிப்படியான சரிவு என்பது எந்தக் கலைஞனுக்கும் நேர்வதுதான். அதற்கு எம்எஸ்வியும் விதிவிலக்கல்ல. ஆனால் சரிவு எம்எஸ்வி என்ற இசையமைப்பாளனுக்குத்தான் இருந்தது. எம்எஸ்வி என்ற பாடகனுக்கல்ல. மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் என்ற பாடலில் அவர் பாடக்கூடியதாக வரும் சரணம் மிக எளிமையானது என்றாலும் தன் அசாதாரணக் குரலால் அந்த வரிகளை அசாதாரணமாக்கினார் அவர். அதற்கும் மேலாக, மதராஸப் பட்டினத்தில், மேகமே ஓ மேகமே பாடலுக்கு விக்ரம், நாஸர், நா.முத்துக்குமார், அஜயன் பாலா என்ற பெரிய்ய பெரிய்ய பாடகர்களுக்கு மத்தியில் அந்தப் பாடலுக்கு உயிர் தந்தவர் எண்பதைத் தாண்டிய இந்தக் கிழவர்தான்.
தமிழ் திரையிசை, ஏன் தென்னிந்திய, ஏன் இந்தியத் திரையிசைக்கு எம்எஸ்வியின் பங்களிப்பு பற்றி மிகப் பெரிய நூலே எழுதலாம். மலையாளத்தில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து, அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்றாலும், மலையாளிகள் மத்தியில் தமிழராகவே அவர் அறியப்பட்டார். தமிழ்தாய் வாழ்த்துக்கு அவர் இசையமைத்துக் கொடுத்த சாதனை ஒன்று போதும் – தமிழ் உள்ளவரை அவர் என்றென்றும் நினைக்கப்பட. அவர் பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவருக்கு விருதுகள் கிடைக்காதது பற்றிய செய்தியும் சேர்த்தே பேசப்படும் ஒன்றாகிவிட்டது. அவருக்கு எதற்கு விருதுகள்?

அவர் காலமான செய்தி கேட்டதிலிருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் தம் மனதுக்குப் பிடித்த ஏதோ ஒரு பாடலை ராகமாகவோ, ராகமில்லாமலோ எப்படியோ முணுமுணுத்தபடி மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். உனக்கென்ன குறச்சல்? நீ ஒரு ரா…..ஜா…. என்ற அவர் பாடல்தான் எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

Tuesday, July 19, 2022

யார் சிறந்த பெண் ????

 ஒரு சிறந்த பெண் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? - பிருந்தாகாரத்



குடும்ப வன்முறையை எதிர்த்த பிரச்சாரத்திற்கும், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கும் வாழ்த்துகள். ஏனென்றால், இப்படி ஒரு திரட்டலை ஒரு பொது நிகழ்வாக நடத்துவது பாராட்டிற்குரியது. குடும்ப வன்முறை என்பது, ஒன்று, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்தது அல்லது பெண்கள் தொடர்பானது, பெண்களுக்கான அமைப்புகள் சார்ந்தது என்பதாக ஒரு பழங்கட்டுக்கதையும் தவறான புரிதலும் உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதில் இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதில் இருந்து தப்பிக்கும் ஏற்பாடு தான். மேலே குறிப்பிட்ட பழங்கதையாடல். அதனால் தான் இதனை பொது விவாதத்திற்கு உட்படுத்தியுள்ள அனைவருக்கும் முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக அதிகமான குற்றம்

ஏனென்றால் இன்றைக்கு ஓர் அரசியல் கட்சி இப்படி ஒரு தவறான பழங்கதையாடலை முன்வைத்து பொது மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் குடும்பத்தில் வன்முறைகளை, அத்துமீறல் கொடுமைகளை பெண்கள் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கெதிரான குற்றங்களில், மிக அதிகமாக பதிவாகியுள்ள ஒரு குற்றம் குடும்ப வன்முறையே. ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு - கிட்டத்தட்ட 1.2 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் குடும்ப வன்முறை குற்றங்களாகும். இது ஏதோ அவ்வப்போது நிகழும் பிறழ்வுகள் என்று கொள்ள முடியாது. உண்மையைச் சொன்னால், இந்தியாவில் இந்த குடும்ப வன்முறை என்பது பல லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால், நாம் பதிவாகியுள்ள குற்றங்களைப் பற்றித் தான் – அவற்றின் எண்ணிக்கையை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பாதுகாப்பாக வாழும் உரிமை

எனவே நாம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது குறித்து பேசும்போது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது குறித்து பேசும்போது, பாதுகாப்பான அமைதியான சூழலில் வாழும் உரிமையானது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் உரிமையும் ஆகும் என்பதும் அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தான் அதனுடைய மைய அம்சமாக இருக்க வேண்டும். ஒரு வேளை மிகப் பெரும் எண்ணிக்கையிலான இந்திய பெண்கள் அவர்களுடைய வாழிடமான வீடுகளில் - குடும்பங்களில் கொடுமைகளையும் வன்முறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது என்றால், மனித உரிமைப் பாதுகாவலர்கள் பிரச்சாரம் செய்வது போல், இது ஏதோ வெறும் மனித உரிமை மீறல் பிரச்சனைகள் மட்டும் அல்ல. குடும்ப வன்முறை என்பது நிச்சயம் மனித உரிமைகளின் அத்துமீறல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் அதையும் தாண்டிய ஒரு விஷயமும் இதில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் சமத்துவத்தினை உத்தரவாதப்படுத்தியிருந்தாலும், அதனால் படுக்கையறைக்குள் நடக்கும் அத்துமீறல்களையோ அல்லது வீட்டிற்குள் நடக்கும் கொடுமைகளையோ வன்முறைகளையோ தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அந்தரங்க உரிமை என்பது தனி நபர்களின் தனியுரிமை என்று சொல்லிக் கொள்வதும் - அது பொது வெளிக்குரியதல்ல என்றும், பொது வெளியில் நடக்கும் போது மட்டும் தான் அரசு தலையிட முடியும் என்பதுமான கருத்தியல் ரீதியான புரிதலை ஏற்படுத்துவது குடும்ப வன்முறையை நியாயப்படுத்துவதற்கு ஒரு வசதியான ஏற்பாடாகும். இதுமுற்றிலும் தவறானது ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தினை - அது உத்தரவாதப் படுத்தியுள்ள சமத்துவத்தினை நீர்த்துப் போகச் செய்யும் ஏற்பாடாகும்.

இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு இந்தியப் பிரஜையின் சமத்துவத்திற்கான உரிமை என்பது குடும்ப எல்லைக்குள் மட்டும் நிற்பதல்ல; குடும்பத்திற்குள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது மட்டுமல்ல; இந்திய பிரஜைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவத்திற்கான உரிமை குடும்ப உறவுகளிலும், மனித உறவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அதற்கான சூழல் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் உள்ளது என்பதுதான்.

பெண்ணே பெண்ணுக்கு எதிரியா? 

 மூன்றாவதாக, பெரும்பகுதி வழக்குகள் பெண்களுக்கெதிரானவையாக, புதிதாக திருமணமான பெண்களை அவர்களது கணவன்மார்கள் துன்புறுத்துவதாக இருக்கும்போது, நிச்சயம் அவை பெரும்பாலும் மனித உறவுகள் குறித்தவையாக உள்ளன. சில நேரங்களில் பெண்ணுக்கு எதிராக பெண் இருப்பது மாதிரியாக, அதாவது மாமியார் - மருமகள் கொடுமையாக, வரதட்சணைக் கொடுமையாக இருக்கிறது. பெண்களே பெண்களை தாக்குவது மாதிரியான செய்திகள் வரும்போது, ஆண்கள் எங்கே இந்த குடும்ப வன்முறைக்குள் வருகிறோம், பெண்களே தான் பெண்களுக்கு எதிராக நிற்கின்றனர் என்பது மாதிரியாக சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு பழங்கட்டுக்கதை தான். ஏனென்றால் இது ஒரு ஆணாதிக்க சமூகம். 

இரண்டாம்பட்சமாக இருப்பதால்...

இந்த ஆணாதிக்க சமூகத்தில், ஒரு ஜனநாயகமற்ற குடும்பக் கட்டமைப்பிற்குள், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களிடையேயும் உள்ள உறவு முறையில், மனைவியோ அல்லது மருமகளோ யாராக இருந்தாலும், இரண்டாம்பட்ச அந்தஸ்தையே சந்திக்கும் நிலை உள்ளது. பெண்களின் இரண்டாம்பட்ச அந்தஸ்து என்பதை குடும்ப கட்டமைப்பின் உள்ளார்ந்த அம்சமாக மாற்றுவது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. மிகவும் தவறானது. இப்படி குடும்பங்களில் பெண்கள் இரண்டாம்பட்சமாக தள்ளப்படுவதால், லட்சம் பேர்களிடம் சர்வே எடுத்ததில் 40 சதமான பெண்களும், 38 சதமான ஆண்களும், பெண்கள் சமையல் செய்யாவிடில், அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குடும்ப பொறுப்புகளை சரிவர செய்யாவிடில், அனுமதியின்றி வெளியில் சென்றால், அல்லது ஆண் விருப்பப்படும் போது பாலியல் உறவுக்கு உட்படாவிட்டால், பெண்களை அடிப்பதில் தவறில்லை என்று கூறியதாக தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த சர்வே அறிக்கை தெரிவிக்கிறது. பெண்களே கூட இப்படி நினைக்கின்றனர். 2022ம் ஆண்டில் இருக்கிறோம். இப்படிப்பட்ட பழமைவாத கருத்துக்கள் இன்றைக்கு பலவீனப்பட்டாலும் அல்லது எதிர்க்கப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு ஆட்சியில் உள்ள தத்துவார்த்த கருத்தியல் கோட்பாட்டின் நடைமுறை கருவிகளாக உள்ள முக்கியமான அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு நிர்வாகத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் இந்த ஆணாதிக்க சிந்தனையை - ஆணாதிக்க சித்தாந்தத்தை ஊக்குவிக்கின்றனர், வளர்த்தெடுக்கின்றனர்.

“சிறந்த பெண்மணி” என்பவள் ஒரு அற்புதமான வீட்டை உருவாக்குபவள், அவளுடைய முழு வாழ்க்கையையும் அவளுடைய வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே கொண்டிருப்பவள், மேலும் அவள் குழந்தைகளை பெற்றெடுப்பவளாக அதிலும் மகன்களை பெற்றெடுப்பவளாக இருப்பவள் என்று சித்தரிக்கப்படுகிறது. அதிலும் “நூறு மகன்களின் தாயாக இருக்கட்டும்” என்பது நமது பாரம்பரிய இலக்கியத்தில் பெண்ணிற்கான வரம் என்று சொல்லப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். எனவே பெண்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், என்னவாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வது என்பது இந்த சமூகத்தில் உள்ள சமத்துவமற்ற உறவுகளின் ஒரு பகுதியாகும். அதுவே வீட்டிற்குள்பிரதிபலிக்கிறது.  எனவே, பெண் தாழ்ந்தவள் என்ற இந்த மனுவாத சித்தாந்தங்கள் ஒரு பெரிய அரசியல் பிரச்சனையாக உள்ளது. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அத்தகைய சித்தாந்தங்களை ஊக்குவிக்கின்றனர். உதாரணமாக, பெண் குழந்தையை காப்பாற்றுங்கள், ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள்’ என்று சொல்பவர்கள் ஒரு வேளை அவர்களது மகள் ஒரு சுய விருப்பத் திருமணத்தை முடிவு செய்தால், குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தால் அல்லது அவள் திருமணமே செய்து கொள்ள விரும்பவில்லை என்று முடிவு செய்தால், அவள் ஆணாதிக்க சிந்தனையின் கோர முகத்தை மட்டுமல்ல, பொதுவாக சமூகத்தில் ஒரு ஆழமான பிரச்சனையை சந்திக்க வேண்டியவளாக ஆகிறாள்.  எனவே குடும்ப வன்முறை பிரச்சினை என்பது குடும்ப உறவுகளை ஜனநாயகமயமாக்குதல் என்பதுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. 

ஒரே அரசியல் கட்சி

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் 1964- ல் அதனுடைய கட்சித் திட்டம் எழுதப்பட்டு 2000-ல் தற்காலப்படுத்தப்பட்டது தொடங்கி, மிக நீண்டகாலமாக, சந்தேகத்திற்கு இடமின்றி, குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவது என்பது, சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களின் சம உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான காரணி என்பதை சுட்டிக்காட்டியதோடு பாடுபட்டும் வருகிறது.  எனவே 2022 இல் நடைபெறும் குடும்ப வன்முறைக்கு எதிரான இந்த பிரச்சாரம் மனுவாத புரிதலுடன் உள்ள அதிகாரத்தில் இருப்பவர்களால் முன்வைக்கப்படும் நடைமுறையில் உள்ள சித்தாந்தங்களை எதிர்த்த முக்கியமான சவால்களை விடுக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது. 

உண்மையில் ஒரு சிறந்த பெண் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறந்த பெண், சுய அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமும், சட்டங்களும் உத்தரவாதம் செய்துள்ள அத்தனை உரிமைகளையும் பயன்படுத்தும் அதிகாரத்தை பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல, எந்தவொரு நாகரீக சமூகத்திலும் சமுக சமத்துவ விதிகளின்படி வாழும் உரிமைகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை பெற்றவராக இருக்க வேண்டும்.  வரதட்சணைக்கு எதிராகப் போராட வேண்டும், திருமணம் என்ற பெயரில் திருமண பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் மசோதாவாக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான வாழ்நிலையைச் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்; அனைத்துப் பெண்களுக்கும் குடும்ப வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும், வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை இந்த பிரச்சாரத்தில் முன்னெடுத்து வென்றெடுப்போம்.

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல், குடும்ப வன்முறைகளை எதிர்த்து ஜூலை 19 (இன்று) சிபிஎம் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள சிறப்பு மாநாட்டையொட்டி கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், காணொலி வாயிலாக விடுதிதுள்ள வாழ்த்துரை.
தமிழில் - ஆர்.எஸ்.செண்பகம்

நன்றி - தீக்கதிர் 19.07.2022