Showing posts with label பெட்ரோல் விலை. Show all posts
Showing posts with label பெட்ரோல் விலை. Show all posts

Sunday, May 3, 2026

அடுத்து என்ன, அதானே மோடி????


 ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாகவும் வாக்களிக்காதவர்களுக்கு தண்டனையாகவும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 993 ரூபாய் அளவிற்கு உயர்த்தி உள்ளது.

அதன் விளைவாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும். டீக்கடைகளும் வேறு வழியின்றி விலையை உயர்த்துவார்கள். அதனால் சில டீக்கடைகள் செயல்பட முடியாமல் மூடி விடுவார்கள். அந்த தொழிலை நம்பி பிழைப்பை நடத்துபவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள்.

ஒரேயடியாக எல்லா பொருட்களின் விலையை உயர்த்தி விட்டால் மக்களுக்கு தாக்குதலின் தீவிரம் புரியாது என்பதற்காக முதலில் கமர்ஷியல் சிலிண்டரின் விலையை மட்டும் உயர்த்தி விட்டார்கள். தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது போல அடுத்து பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயரும்.

அவற்றின் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும். பேருந்துக் கட்டணம் தொடங்கி லாரிக் கட்டண உயர்வால் சங்கிலி விளைவாக எண்ணற்ற பொருட்களின் விலைகளின் உயரும்.

விலையை உயர்த்துவதற்கு முன்பாக, என்ன விலை வேண்டுமானால் விற்கட்டும், கிடைத்தால் சரி என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

மோடியின் முரட்டு பக்தர்கள் வாழும் மாநிலங்கள் போல தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலிண்டர் வருவதற்கு கண்டிப்பாக தாமதம் ஆனது. வழக்கமாக பதிவு செய்த நாளிலேயோ அல்லது மறு நாளே வேலூரில் சிலிண்டர் வந்து விடும். இக்காலகட்டத்தில் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் வந்தது.

கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு பல உணவகங்களை மூட வைத்தது. என் சொந்த அனுபவம் ஒன்றை சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியூர் சென்ற போது இரவு உணவுக்காக ஒரு பிரபல உணவகத்திற்கு சென்ற போது இடம் கிடைக்கவே ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.  வேறு சில உணவகங்கள், உள்ளே நுழையும் முன்னே நாங்கள் மூடி விட்டோம், இனி சேவை கிடையாது என்றார்கள். ஒரே ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றால் சப்பாத்தி மட்டுமே இருப்பதாக சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையே கொண்டு வரச்சொன்னால் அது வரவும் 45 நிமிடங்கள் ஆனது. 
கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஒரே ஒரு சிலிண்டரை வைத்து சமாளிப்பதால் தாமதமாகிறது என்றார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை. கிடைத்தாலே போதும் என்ற மன நிலை நிலவுகிறது. இல்லையில்லை. அப்படிப்பட்ட மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டார்கள்  மோடி வகையறாக்கள்.

இந்த விலை உயர்விற்கும் சங்கிகள் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூடர்களால்தான் மோடி பிரதமராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். 


Tuesday, August 29, 2023

பயந்துட்டீரா டிமோ?

 


டிமோவின் தேர்தல் பயம் கீழேயுள்ள அறிவிப்பில் தெரிகிறது.


சரி, பெட்ரோல், டீசல் விலையை எப்போ குறைக்கப் போறீர் ????

Tuesday, May 24, 2022

கேட்டுச் சொல் அண்ணாமலை

எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உங்கள் நிதியமைச்சரிடம் பேசி அதற்கான விளக்கங்களை அளிக்கவும் மிஸ்டர் ஆட்டுக்காரர். (அதற்கு விளக்கம் சொல்ல உமக்கு அறிவு கிடையாது என்பதால்தான் கேட்டுச் சொல்ல சொல்லியுள்ளேன்)



 *நாளொரு கேள்வி: 23.05.2022*


வரிசை எண்: *722*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
######################

*முழுச் சுமையும் மத்திய அரசுக்கா?*

கேள்வி: பெட்ரோல் டீசல் மீதான வரிக் குறைப்பில் ஏற்படும் நிதிச் சுமையை முழுக்க மத்திய அரசுதான் சுமக்கப் போகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறாரே! 

*க.சுவாமிநாதன்*

"இங்கு எல்லா மொழி ஆவணங்களும் கூடுதல் கட்டணம் எதுவுமே இன்றி  ஜெராக்ஸ் எடுக்கப்படும்" 

என்று ஒளி நகல் கடையில் போர்டு மாட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நிதியமைச்சரும் வரிக் குறைப்பு போர்டை மாட்டுகிறார். 

மூன்று விசயங்கள் பார்க்கலாம். 

*ஒன்று* மொத்த வரிகள் ஒரு லிட்டருக்கு மத்திய அரசால் இப்போது போடப்படுவது ரூ 20.60. அதில் அடிப்படை எக்சைஸ் வரி வெறும் ரூ 1.40 மட்டுமே. இதில் இருந்து மட்டுமே மாநில அரசுகளுக்கு 41 சதவீதம் கிடைக்கும். அதாவது ஒரு லிட்டருக்கு 0.58 பைசா கிடைக்கும்.  மொத்தம் வரியான ரூ 20.60 இல் 58 பைசாவை மட்டுமே மாநில அரசுகளுக்கு பகிர்வதாக வரி முறைமையை ஏன் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் நாங்கள் வரிக் குறைப்பால் எழும் எல்லா இழப்பையும் சுமக்கிறோம் என்பது எவ்வளவு ஏமாற்று! இதேதான் டீசலிலும்... மொத்த வரிகள் ரூ 17.03... அதில் அடிப்படை எக்ஸைஸ் வரிகள் ரூ 1.80 தான். ஒரு லிட்டர் டீசல் விற்றால் அதில் கிடைக்கிற வரிகள் 17.03 இல் மாநில அரசுகளுக்கு கிடைப்பது 73 பைசாதான்.  மாநில அரசுகளுக்கு பங்கு போய்விடக் கூடாது என்பதற்கே ஸ்பெசல் எக்சைஸ் வரிகள், விவசாய கட்டுமான வளர்ச்சி செஸ், சாலை வளர்ச்சி செஸ் இப்படி வரிகளைப் போட்டு இருக்கிறார்கள். மாநிலங்களுக்கு தரவும் மாட்டார்கள். ஆனால் நீங்களும் குறையுங்க என்று ஆலோசனை தருவார்கள். மாநிலங்களை வஞ்சித்து விட்டு அதை மறைத்து எப்படி கேள்வி எழுப்பிகிறார்கள் பாருங்கள்! 

*இரண்டாவது*, தமிழ்நாடு நிதியமைச்சர் கேட்டிருக்கிற கேள்வி. மத்திய அரசின் வரிகளை கூட்டிக் கொண்டே போகும் போது மாநில அரசுகளிடம் ஆலோசனையே கேட்காதவர்கள், இப்போது குறையுங்க என்று அறிவுரை சொல்வது தார்மீகமா? என்பதே. தார்மீகம் என்றால் என்ன விலை, அதன் மீது ஜி.எஸ்.டி எவ்வளவு போடலாம் என்று யோசிப்பவர்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்? 

*மூன்றாவது,* பெட்ரோல், டீசல் விலையுயர்வு என்பது மக்கள் வாழ்வுரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள போர். போர் நிறுத்தம் செய்யலாம் என்று மத்திய அரசு நினைத்தால் வரி விகிதங்கள் 2014 க்காவது திரும்ப போக வேண்டுமல்லவா! இன்று இந்து ஆங்கில நாளிதழ் முதல் பக்கத்தில் ஒரு கிராஃப் (Graph) இடம் பெற்றுள்ளது. 2014 இல் பெட்ரோல்  விலையில் லிட்டருக்கு ரூ 9.48 ஆக இருந்த மத்திய அரசின் வரிகள் இன்று லிட்டருக்கு ரூ 19.90 ஆக வரிகள் உள்ளது. டீசலில் அன்று லிட்டருக்கு ரூ  3.57 ஆக இருந்த மத்திய வரிகள்  இன்று  ரூ 12.23. ஆனால் மாநில அரசு வரிகள் இப்படி உயரவில்லை. டெல்லி உதாரணத்தை எடுத்தால் 2014 இல் விலையில் 16.7 சதவீதமாக இருந்த மாநில அரசு வரிகள் இன்று 16.2 சதவீதமாக அப்படியே அல்லது சற்றுக் குறைந்து உள்ளது. ஆகவே மத்திய அரசுதான் இன்னும் பின் வாங்க வேண்டும். வரிகளை குறைக்க வேண்டும். 

மக்களிடம் முழு உண்மைகளை பேசி விவாதங்களை மத்திய அரசு நடத்த வேண்டும். இருந்தாலும் கேரள அரசு வரிகளை குறைத்து இருப்பது வரவேற்கத் தக்கது.

*செவ்வானம்*

Monday, May 23, 2022

சூடு வைத்து விட்டு பர்னாலும் போட்டால்

 


*பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைத்து விட்டு...*

*பர்னால் போட்டால்* 

 _க.சுவாமிநாதன்_ 

பெட்ரோல் டீசல் மீதான மத்திய எக்சைஸ் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நல்லா பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைத்து விட்டு பர்னால் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி முடிவு இது. இருந்தாலும் வரவேற்போம். இடதுசாரிகள் மே கடைசி வாரத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு திட்டமிட்டுள்ள சூழலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 *சிவாஜி தோற்றுப் போவார்* 

மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பை பாருங்க. 

* பெட்ரோல் மீதான எக்சைஸ் வரி லிட்டருக்கு ரூ 8 ம், டீசல் மீது ரூ 6 ம் குறைக்கப்பட்டுள்ளது. (இதனால் பெட்ரோல் விலை ரூ  9.50 ம், டீசல் விலை ரூ 7.50 ம் குறையும் என்று மதிப்பீடு) 

* இதனால் மத்திய அரசுக்கு ரூ 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் 

* மாநில அரசுகளும் மத்திய அரசு போல "கருணை" காண்பித்து வரிகளை குறைக்க வேண்டும். 

* உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு ரூ 200 மானியம் தரப்படும். இதனால் அரசுக்கு இழப்பு ரூ  6100 கோடி.

* இது ஏழைகளுக்கான அரசு. பிரதமர் "மக்களே முதன்மையானவர்" என்று கருதுபவர்.

இவையே நிதியமைச்சர் வார்த்தைகள். 

ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஆனால் இந்த ஆட்சியாளர்களை பாராட்ட வேண்டும். பழுக்க பழுக்க சூடு போட்டாலும் பர்னால் போடும் போது முகத்தில் காட்டுகிற "இரக்கம்" பாருங்க. சிவாஜி தோற்று விடுவார்.

 *கணக்கு இங்கே கருணை எங்கே* 

மே 2014 இல் மோடி முதன் முறை பதவி ஏற்ற போது எவ்வளவு  எக்சைஸ் வரிகள்? பெட்ரோல் மீது ரூ 9.48. டீசல் மீது ரூ 3.56. அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 71.41, டீசல் விலை ரூ 55.49. 

இன்று சென்னையில் எவ்வளவு பெட்ரோல் விலை? ரூ 110. டீசல் விலை ரூ 100. இப்ப அறிவித்திருக்கிற எக்சைஸ் வரிக் குறைப்பினால் பெட்ரோல் விலை ரூ 100 ஆகவும் டீசல் விலை ரூ 93 ஆகவும் இருக்கக் கூடும். 8 ஆண்டுகளில் விலை ஏற்றம் எவ்வளவு? பெட்ரோல் 43 சதவீதம். டீசல் விலைகள் 69 சதவீத உயர்வு. 

இந்த விலை உயர்வு எதனால்? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலா! இல்லை. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்த போது கூட இந்தியாவில் விலைகள் குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. வரிகளை அதிகரித்து விலைக் குறைவின் பயன் மக்களுக்கு போகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. உதாரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 105.87 அமெரிக்க டாலர் ஆக 2013 இல் இருந்தது. 2022 இல் இது 97.7 அமெரிக்க டாலர் ஆகவே இருக்கிறது. 2016 இல் 40.76 டாலர்தான். 2020 இல் 41.47 டாலர்தான். உலகச் சந்தை கருணை காட்டிய போதும் கூட உள்ளூரில் பிரதமரும், நிதி அமைச்சரும் கருணை காண்பிக்கவில்லையே! வரிகளை போட்டு விலை குறையாமல் பார்த்துக் கொண்டார்களே! 

 *நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப்* 

எட்டு ஆண்டுகளில் வரிகள் உயராதா? என்று சிலர் அப்பாவித் தனமாக நினைக்கலாம். 2014 - 2021 காலத்தில் மொத்த வரி வருவாய் 2 மடங்கு உயர்ந்தது. ஆனால் பெட்ரோல் டீசல் விலைகள் 6 மடங்கு உயர்ந்தது. கார்ப்பரேட் வரிகள் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. செல்வ வரியும் 2016 -17 இல் ரத்து செய்யப்பட்டது. ஆகவேதான் பணக்காரர்கள் மீதான வரிகள் குறைந்து, மொத்த வரியில் ஏழை மக்கள் மீதான மறைமுக வரிகளின் பங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் டீசல் வரிகள். 

இந்த எக்சைஸ் வரிக் குறைப்பால் 1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று நிதியமைச்சர் "கண்ணீர்" வடித்துள்ளார். பார்க்க பெரிய தொகையாக தெரியும். ஆனால் 2014 இல் இருந்து இன்று வரை வசூலிக்கப்பட்டுள்ள பெட்ரோலிய வரிகள் எவ்வளவு தெரியுமா? 26 லட்சம் கோடி. அதாவது இந்தியாவின் ஒவ்வொரு இல்லத்தில் இருந்தும் 1 லட்சம் ரூபாய் சராசரியாக இந்த வரிகளால் பிடுங்கப்பட்டுள்ளது. இப்ப ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசு இழக்கிறது எனில் 8 ஆண்டுகளில் பிடுங்கிய ஒரு லட்ச ரூபாயில் ரூ 3800 ஐ திரும்ப கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப் கொடுப்பது மாதிரிதான். 

 *அறிவுரை கூற என்ன தகுதி?* 

மாநில அரசுகளும் "கருணை" காண்பிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அறிவுரை. கேரள அரசு இப்போது குறைத்திருக்கிறது.  அது வேறு விசயம். ஆனால் இப்படி அறிவுரை சொல்ல தார்மீக தகுதி மத்திய அரசுக்கு உண்டா? மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் 41 சதவீதம் தர வேண்டும் என்பது 15 வது நிதி ஆணையத்தால் செய்யப்பட்ட வரையறுப்பு. இப்படி மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றிக் கொண்டே போயிருக்கிறதே அதில் மாநில அரசுகளுக்கு கிடைத்த பங்கு என்ன? உதாரணமாக 2020- 21 இல் மொத்த பெட்ரோலிய வரி வருவாய் மத்திய அரசுக்கு ரூ 3,72,000 கோடி. ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தந்ததோ ரூ 19972 கோடி. 5.36 சதவீதம்தான். என்ன காரணம்? மத்திய அரசு வசூலிக்கிற மொத்த வரிகள் லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 27.90 எனில், அதில் அடிப்படை எக்சைஸ் வரி ரூ 1.40 மட்டும்தான். ஸ்பெசல் எக்ஸைஸ் வரி ரூ 11, விவசாய கட்டுமான வளர்ச்சி செஸ் ரூ 2.50, சாலை கட்டுமான செஸ் ரூ 13 இப்படி நாலு வகை 
வரிகள் உள்ளது. இதில் அடிப்படை எக்சைஸ் வரிகளில் இருந்து மட்டும்தான் 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு போகும். அதாவது ரூ 27.90 வரிகளை போட்டாலும் மாநில அரசுக்கு அதில் கிடைப்பது 58 பைசாதான். செஸ் என்று தீட்டி விட்டு மாநில அரசுகளுக்கு பங்கு போகாமல் பார்த்துக் கொண்டு இப்ப நான் குறைத்தேன், நீங்களும் குறைங்க என்று சொல்வதில் என்ன நியாயம்? என்ன தார்மீகம்? 

 *விறகுக்கு மாறியவர்கள்*

உஜ்வாலா திட்டத்திற்கு ரூ 200 மானியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீர் கரிசனம். மே 12, 2022 இந்து நாளிதழ் செய்தி இது. உஜ்வாலா பயனாளிகளில் 90 லட்சம் பேர் 2021 - 22 இல் சிலிண்டர்கள் வாங்கவே இல்லை. மேலும் ஒரு கோடி பேர் ஒரே ஒரு சிலிண்டரை மட்டுமே ஆண்டு முழுக்க வாங்கி உள்ளார்கள். இதோ உத்தரகாண்ட் பற்றி 23.02.2020 இல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் செய்தி. மொத்த பயனாளிகள் 3.72 லட்சம் பேர் 13 மாவட்டங்களில் இருந்தாலும் அவர்களில் சிலிண்டர் வாங்கியவர்கள் 3500 பேர் மட்டுமே. 99 சதவீதம் பேர் வாங்கவில்லை. விறகுக்கு மாறி விட்டார்கள் என்றுதானே அர்த்தம். 

 *முதலும் கடைசியும் மக்கள் முதுகே* 

அடுத்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் வருகிறது என்றவுடன் இப்படி சலுகை வழங்கப்படுகிறது என்று ஊடகங்கள் சில கூறுவது உண்மையே. கடந்த நவம்பர் 2021 இல் இப்படி அறிவிக்கப்பட்ட சலுகைகள் உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்தவுடன் 16 நாளில் 14 முறை விலை உயர்வு அறிவிப்பாக வந்து "கொடுத்தவரே எடுத்துக் கொண்டாரடி" என்று ஆகிப் போனதை மறக்க முடியுமா? 

பிரதமர் "மக்களே முதன்மையானவர்"என்று கருதுபவர் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆகையால்தான் முதல் அடி மக்கள் மீது விழுகிறது போல... ஆனால் கடைசி வரை மக்கள் மீதே விழுகிறதே!

*தீக்கதிர்: 23.05.2022*

Sunday, May 22, 2022

ஐ! எலக்சன் வந்துடுச்சுடோய்

 


ரோடு ரோலரையும் குழாயில் தண்ணீர் வருவதையும் பார்த்து  "நம்ம ஊருக்கு எலக்சன் வந்துடுச்சுடோய்" என்று மக்கள் மகிழ்வதாக சத்யராஜ் நடித்த "மாமன் மகள்" படத்தில் வரும் காட்சியை மீண்டும் மீண்டும் நிஜமாக்குகிறார்கள் மோடி-நிர்மலா கூட்டணி.


அடுத்து வரப் போகும் குஜராத், திரிபுரா தேர்தலுக்கு இப்போதே தயாராக தொடங்கி விட்டார்கள். 

ஒரே  தேசம், ஒரே தேர்தல் என்று இருந்தால் இப்படிப்பட்ட அற்ப சந்தோஷம் கூட இந்தியர்களுக்குக் கிடைக்காது!

பிகு: ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பா என்று யாரும் மலைக்க வேண்டாம். இது வரை அடித்த 27 லட்சம் கோடியில் கிள்ளித் தருகிறார்கள். அவ்வளவுதான் . . .


Monday, April 11, 2022

உங்களுக்கு நேரு, எனக்கு காங்கிரஸ்

 


*நாளொரு கேள்வி: 11.04.2022*

 

தொடர் எண்: *680*

 

இன்று நம்மோடு நெல்லை *நரேஷ் கண்ணா* (காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்)

########################

 

*போடு பழியை காங்கிரஸ் மீது...*

 

கேள்வி: பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரசே காரணம் என நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

 

*நரேஷ் கண்ணா*

 

2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி காலத்தில், *சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 110 டாலர் வரை* உயர்ந்தது. உலக அளவில் வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. 

2014 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு *கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது.* ஆனால், விலை குறைந்தாலும், பாஜக அரசு அதன் பலனை மக்களுக்கு அளிக்காமல், *அதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், அதன் மீதான வரியை தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது.*

 

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளில் *கச்சா எண்ணெயின் விலை 40 டாலர் அளவுக்கும் குறைந்தது.* அதன் பிறகு 50 மற்றும் 70 டாலருக்கு இடையிலேயே கச்சா எண்ணெயின் விலை நீடித்து வந்துள்ளது. ஆனால், இந்த அளவிற்கு விலை இறங்கினாலும், *பாஜக அரசு அதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.* மாறாக *அதன் மீதான வரியையே தொடர்ந்து அதிகரித்துள்ளது.*

 

இந்நிலையில், *கொரோனா பெருந்தொற்று* பரவத்தொடங்கிய சமயம், *சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது,* அந்த நெருக்கடியான காலத்திலும் கூட, அதன் பலனை பாஜக அரசு மக்களுக்கு வழங்கவில்லை. விலையை குறைக்காவில்லை என்பதோடு மட்டுமல்லாமல்  *அதற்கு நேர் மாறாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது.* 

2020 மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் *பெட்ரோல் மீதான வரி 65 சதவீதமும், டீசல் மீதான வரி 101 சதவீதமும்* உயர்த்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிவந்த இந்த குறிப்பிட்ட காலத்தில் *சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 25 டாலர் வரை இறங்கியது.*

 

கச்சா எண்ணெயின் விலை இந்த அளவிற்கு குறைந்தாலும், கொரோனா முழு முடக்கத்தால் பொருளாதார ரீதியாக மக்கள் *பாதிக்கப்பட்டிருந்த அந்த சமயத்திலும், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு குறைக்கவில்லை.*

 

*2014 – 15 ஆண்டுகளில்* எரிபொருள் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு *99,068 கோடி ரூபாய் வரி வருவாய்* கிடைத்தது. *2020 – 21ஆம் நிதி ஆண்டில் இது ரூ.3.7 லட்சம் கோடியாக* உயர்ந்துள்ளது.  அதேநேரத்தில் *2014 – 15 ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு எண்ணெய் விற்பனை மூலம் 1.3 லட்சம் கோடி வரி வருவாய்* கிடைத்துள்ளது. ஆனால் *அடுத்த ஏழு ஆண்டுகளில் இது 2 லட்சம் கோடி என்ற அளவில் மட்டுமே* உயர்ந்துள்ளது.

 

ஆகவே, கடந்த ஏழு ஆண்டுகளில் *பெட்ரோல், டீசல் மீதான வரியின் மூலம் ஒன்றிய அரசின் வருமானம், சுமார் 250 சதவீதம்* உயர்ந்துள்ளது. ஆனால், *மாநில அரசுகளின் வருமானமோ 50 சதவீதம் கூட உயரவில்லை.* 

2021 ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி, *ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வரி விதிக்கிறது.* 

*தமிழக அரசு அதை விட குறைவாக பெட்ரோலுக்கு 23.89 ரூபாயும் டீசலுக்கு 17.73 ரூபாயும் வரி விதிக்கிறது.*

 

இந்நிலையில், *தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்து* கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கும் வந்தது. இதை சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசும் வரியை குறைக்குமா என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், *காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கியதால் (எண்ணெய் கடன் பத்திரம் வெளியிட்டது) ஏற்பட்ட 1.3 லட்சம் கோடி கடனை திரும்ப செலுத்த வேண்டும்* என்று கூறினார். அத்துடன், *அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த கடனுக்காக (எண்ணெய் கடன் பத்திரம்) 37,000 கோடி வட்டி செலுத்த* வேண்டும் என்று கூறிய அவர் அதனால், *பெட்ரோல், டீசலுக்கு வரியை குறைக்க முடியாது* என்று திட்டவட்டமாக கூறினார்.

 

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக சுமார் நான்கரை மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

*கடந்த 10 நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 9 முறை உயர்த்தப்பட்டு* அவற்றின் விலை ரூபாய் 6.40 உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை உயர்ந்து வந்துள்ள நிலையில், மார்ச் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்ததற்கு 5 மாநில தேர்தல் காரணம் இல்லை என்றும், *தற்போது உயர்த்தப்படுவதற்கு ரஷ்யா-உக்ரைன் போர்தான் காரணம்* என்றும் கூறினார்.

 

அடுத்ததாக, *கடந்த 29 ஆம் தேதி* மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், *காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய மானியமே விலையை குறைக்க முடியாததற்கு காரணம்* என்று கடந்த ஆண்டு கூறிய அதே விளக்கத்தை கூறியுள்ளார். அத்துடன் கடந்தமுறை கூறியது போலவே, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்த வேண்டி உள்ளதால் விலையை குறைக்கு முடியாது என்று அச்சுபிறழாமல் அதே காரணத்தை கூறியுள்ளார்.

 

*நிர்மலா சீதாராமன் கூறியுள்ள இந்த காரணம் சரியானதுதானா?* 

 

எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் அவ்வளவு பெரிய நெருக்கடியில் உள்ளதா என்று ஆராயும்போது *அதில் உண்மை இல்லை* என்பது தெரியவந்துள்ளது.

 

*கடந்த 7 ஆண்டுகளில், கடனுக்கு வட்டியாக 70,195 கோடி ரூபாய் மட்டுமே எண்ணெய் நிறுவனங்களால் செலுத்தப்பட்டுள்ளன.* தற்போது *1.30 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவையில்* உள்ள நிலையில், *கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் வரியின் மூலம் ரூபாய் 26 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வருவாயாக* கிடைத்துள்ளது. 

 

 இந்த *வருவாயுடன் ஒப்பிடும்போது செலுத்தப்பட வேண்டிய கடனின் அளவு மிகவும் சொற்பமே.* 

 

ஆகவே நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு உண்மையின் முன் உறுதியாக நிற்க முடியாமல் தள்ளாடுகிறது.

 

*செவ்வானம்*