ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.
ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.
ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணற்ற உருட்டுக்களை அர்ப்பணித்த மோடி, ஒரு கதை ஒன்றையும் அளந்துள்ளார்.
அதென்ன கதை?
மதுரை விவசாயி காலையில் விளைவிக்கும் மல்லியை மாலையிலேயே நியூயார்க்கிலும் பாரீஸிலும் விற்பது சாத்தியமா?
இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கும் பாரீஸிற்கும் விமானங்கள் செல்கின்றன. அதன் பயண நேரம் என்ன என்பதை கீழே பாருங்கள். சென்னை நேரத்திற்கும் மதுரை நேரத்திற்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கலாம். அது கூட பயண நேரம் அதிகம்தான் ஆகும்.
சென்னையிலிருந்து நியூயார்க் செல்ல குறைந்த பட்சம் 23 மணி நேரமும் பாரீஸ் செல்ல குறைந்த பட்சம் 18 மணி நேரமும் ஆகிறது.
பிறகு எப்படி காலையில் விளைவித்தது மாலையிலேயே விற்பனை ஆகும்?
ஆனால்
தவறு மோடியுடையது அல்ல.
மோடிக்கு பேச்சு எழுதிக் கொடுக்கும் பூத எழுத்தாளர் (GHOST WRITER) யாரோ, மூத்த்த்த்தவர் மாலனோ?) அவருக்கு "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலில் வரும் "காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி" வரிகள் நினைவுக்கு வந்து அந்த அடிப்படையில் மோடிக்கு உரை எழுதிக் கொடுத்திருப்பார்.
பாவம் மோடி, அவரை திட்டாதீங்க . . .
மோடியை ஒப்பிடுகையில் அண்டப்புளுகன், ஆகாயப்புளுகன் என்ற வார்த்தையெல்லாம் ஜுஜுபி.
கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் அவருடைய லேட்டஸ்ட் பொய் ஒன்றை பாருங்கள்
அந்த படத்தின் மேலே உள்ள கலாம் சென்டர் என்பதை வைத்து கொஞ்சம் இணையத்தில் தேடினேன்.
அது லக்னோவில் உள்ள ஒரு சங்கி என்.ஜி.ஓ. அங்கேதான் மோடி தான் பள்ளியில் படிக்கும் போதே ஒரு ரோபோவை உருவாக்கியதாகவும் அதற்காக பள்ளியில் அவருக்கு மெடல் கொடுத்ததாகவும் சொல்லி உள்ளார். அந்த கம்பி கட்டும் கதையை எப்படி விவரித்துள்ளார்கள் என்று பாருங்கள்.
நரேந்திர மோடி 1950 ல் பிறந்ததாக இப்போது சொல்கிறார்கள். ஒரு வேளை அவர் பனிரெண்டாவது படித்திருந்தால், பள்ளியில் படித்திருந்தால், 1968 ல் பனிரெண்டாவது படித்திருப்பார்.
இந்தியாவின் முதல் ரோபோ 1982 ல் உருவாக்கப்பட்டது என்றுதான் இணையம் சொல்கிறது. ஆனால் மோடி 14 வருடங்கள் முன்பாகவே ஒரு ரோபோவை தயார் செய்தார் என்று கூறினால், சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
மழை பெய்யும் போது போர் விமானங்கள் போனால் ரேடாரில் தெரியாது என்று விமானப்படைக்கு ஆலோசனை சொன்ன விஞ்ஞானி அல்லவா அவர்!
பிகு: இது தொடர்பாக இன்னொரு பதிவும் எழுதுவேன்.
பதில் சொல்ல முடியாமல் மோடி ஓடி ஒளிந்ததற்கு ஓம் பிர்லா அயோக்கியத்தனமான ஒரு பொய்யை சொன்னதைப் பற்றி எழுதி இருந்தேன்.
ஓம் பிர்லாவின் அயோக்கியத்தனமான பொய்க்கு அலிபி தேட மோடியும் ஒரு அபாண்டமான, அயோக்கியத்தனமான பொய்யை சொல்லியுள்ளார்.
மோடி ஒரு வேளை இயற்கையான முறையில் பிறந்திருந்தால் அவரது பெற்றோர் "பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது" என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்.
ஆனால் இவர்தான் தெய்வக்குழந்தை ஆயிற்றே!
பிரபாகரனை சீமான் வெறும் பத்து நிமிடம்தான் சந்தித்தார் என்று விஷயம் தெரிந்தவர்கள் முன்பே சொல்லியுள்ளனர். ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான் எடுத்துக் கொண்டுள்ளார். அது கூட இவர் பெருமையுடன் காண்பிக்கும் படமல்ல, அது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று போட்டோஷாப் செய்தவரே சொல்லியுள்ளார்.
ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்தவரை சீமான் இதுவரை எப்படியெல்லாம் முன்னிறுத்தியுள்ளார்.
இவருக்கு ஆமைக்கறி செய்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.
அடுத்து இட்லிக்குள் கறியை வைத்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.
இவர் சாப்பிடும் பொருட்களை துல்லியமாக கவனித்து அதற்கேற்றார் போல அடுத்த வேளை சாப்பாடுகளை போட்டார் என்றும் சொல்லி உள்ளார்.
இதோ இப்போது மான் ஊறுகாய் சாப்பிடச் சொன்னதாக சொல்லியுள்ளார்.
அந்த காணொளியை இங்கே பாருங்கள்.
என்று கேட்க பிரபாகரன் இல்லாத துணிவுதான் சீமானுக்கு. . .
எல்லோரும் தற்குறி வெட்டிக் கழகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கவன ஈர்ப்புக்காகக் கூட சீமான் இந்த கதையை உருட்டியிருக்கலாம்.
பிகு என்னத்தான் கதை விட்டாலும் சீமான் எச்சரிக்கையான மனிதர்தான். இதே மான் ஊறுகாயை இந்தியாவில் சாப்பிட்டதாக உருட்டியிருந்தால் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று தெரிந்தவர் அல்லவா அவர்!
நேற்றைய ஆங்கில இந்துவின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி கீழே.
இன்றைய முதல் பக்கத்து செய்தி நேற்றைய செய்தியுடன் தொடர்பானது. ஆமாம். இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் இரண்டாவது காலாண்டில் 8 % வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்கிறது.
மோடி அரசு எதைச் சொன்னாலும் அது டுபாக்கூர் செய்திதான்.

கடந்த செவ்வாயன்று ட்ரம்ப் மோடியை தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளார்.
அந்த தொலைபேசி பேச்சு பற்றி ட்ரம்ப் சொன்னது
"நாங்கள் இருவரும் ஏராளமான விஷயங்கள் பற்றி பேசினோம். ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசினாலும் கூட வர்த்தக பேரங்களில்தான் அவர் அதிக கவனம் செலுத்தினார். ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, பாகிஸ்தானுடன் போர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினோம்"
இது ட்ரம்ப் கூறியது.
அதுவும் எங்கே? யாரிடம்?
வெள்ளை மாளிகையில் அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர்களுக்கு அளித்த தீபாவளி விருந்தின் போது.
ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு விட்டது என்று இந்த வாரத்தில் மட்டும் நான்கு முறை ட்ரம்ப் கூறினாலும் இந்தியா அது பற்றி வாய் திறக்கவேயில்லை என்று ஆங்கில இந்து நாளிதழ் சொல்கிறது.
மோடி என்ன சொல்கிறார்?
தீபங்களின் திருவிழாவான இன்று நம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் உலகெங்கும் நம்பிக்கை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து அனைத்து வடிவிலுமான தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம்"
இதிலே யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?
இரண்டு பேர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். இரண்டு பேர் சொல்வதும் பொய்யாகவும் இருக்கலாம்.
ஏனென்றால் அடிப்படையில் இருவருமே பொய்யர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள், சந்தர்ப்பவாதிகள், மோசடிப்பேர்வழிகள்.
இரண்டு நாட்டு மக்களைக் குழப்ப இருவருமே பேசி வைத்துக் கொண்டு கூட பொய் சொல்லியிருக்கலாம்.
ட்ரம்ப் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லும் தைரியம் மோடிக்கு வராத வரை ட்ரம்ப் சொல்வதுதான் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரி அப்படி மோடி சொல்லி விட்டால், மோடி உண்மையை பேசுகிறார் என்று ஒப்புக் கொள்வீர்களா என யாராவது அனாமதேயம் கேட்கலாம்.
அப்படி மோடி தைரியமாக சொல்லட்டும்.
அதற்குப் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள் "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகள் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ள படம் கீழே உள்ளது.
ட்ரம்ப் என்றால் நடு நடு என்று நடுங்குகிற மோடி, ட்ரம்ப்போடு பேச மறுத்து விட்டாராம். ட்ரம்ப் கூப்பிட்டால் போனாக இருந்தால் கூட நின்று கொண்டே பவ்யமாக பேசும் மோடி, அவரது அழைப்புக்களை நிராகரித்து விட்டாராம்.
கொஞ்சமாவது பொருத்தமா பொய் சொல்லுங்க சங்கிகளா!
எம்.ஏ (என்டயர் பொலிட்டல் சைன்ஸ்) படித்ததாக மோடி பொய் சொல்வதற்கு தனக்குத்தானே "வீர" என்று அடைமொழி கொடுத்துக் கொண்ட மகாத்மா காந்தி கொலை அக்யூஸ்ட் சாவர்க்கரிடமிருந்துதான் என்று இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் சாவர்க்கருக்கு முன்பே இது போன்ற வெட்டி பீற்றலை சங்கிகளின் முக்கியமான தலை ஒன்று செய்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான குரு கோல்வாக்கர்தான் அது.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் வெறும் ஆய்வக உதவியாளராக இருந்த கோல்வாக்கர், தன்னை முன்னால் பேராசிரியர் என்றே முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார். அதை சங் பரிவாரங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் தீரெந்திர ஜா அம்பலப்படுத்தியுள்ளார்.
கோல்வாக்கரே போலி பேராசிரியர் என்றால் நான் செய்வதும் தப்பே இல்லை என்று போலிப் பேராசிரியன் ராம.சீனுவாசன் மகிழ்ச்சியடைவான் அல்லவா!
தைப்பூச விடுமுறை நாளில் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளோடு போட்ட சண்டை.
அது
தவறான செய்தி என்று இரு பதிவுகளிலும் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு நடந்த உரையாடல்களை
பாருங்கள்.
இரண்டாவது சண்டை
சங்கிகள்
தாங்கள் அடி முட்டாள்கள், பொய்யர்கள், அயோக்கியர்கள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்துக்
கொள்கிறார்கள்.
கீழேயுள்ள செய்தியை நேற்றிலிருந்து சங்கிகள் பரப்பி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீரில் மோடி திறந்த ஜீப்பில் இறுகிய முகத்துடன் போனது பற்றி நேற்று எழுதியிருந்தேன். அது பற்றி இன்னொரு தகவலும் உள்ளது. கீழேயுள்ள படத்தை பாருங்கள்.
ஆனால் வழக்கம் போல அதுவும் பொய்தான் என்பது சில நிமிடங்களிலேயே நிரூபணமாகி விட்டது.
1996 லியே ஹெச்.டி.தேவேகௌடா, பிரதமராக இருந்த போது காஷ்மீரில் திறந்த ஜீப்பில் போயிருக்கிறார். உடன் அன்றைய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் இருக்கிறார்.
எதையெடுத்தாலும் பொய், பொய்யைத்தவிர வேறு எதுவுமில்லை. இந்த பிழைப்பிற்கு சங்கிகள் பிச்சையெடுக்கலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு கீழே உள்ளது.
5500 கோடியில் நீர் பறப்பதற்காக இரண்டு புதிய சொகுசு விமானங்கள் வாங்கி விட்டு 36,328 சதுர அடியில் 467 கோடி ரூபாயில் சொகுசு மாளிகை ஒன்றை கட்டிக் கொண்டு இப்படி பேச உமக்கு வெட்கமாக இல்லையா மோடி?
அப்படி என்ன பேசினார் பதினைந்து லட்ச ரூபாய் கோட் அணியும் மோடி?
கீழே பாருங்கள். . .
பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா. ஆமாம், அவன்தான். தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு பரப்பி கைது செய்யப்பட்டவன். அவதூறு பரப்பும் வேறு சிலர் சகல சௌகர்யங்களோடு பாதுகாப்போடு இருக்கிறார்கள். நான் தெய்வக்குழந்தையை சொல்கிறேன்.
அவன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏதோ மிகப் பெரிய கருத்தை சொல்லி விட்டதாக பீற்றிக் கொண்டிருக்கிறான்.
இதுதான் விஷயம். இதை ஏதோ பிரம்மாண்டமான அரசியல் நிகழ்வு போல பில்ட் அப் செய்வதெல்லாம் சங்கிகளின் கீழ்த்தர உத்தி. இவர்களே ஒரு கருத்தை உருவாக்கி பொதுப்புத்தியில் படிய வைப்பது. ஆட்டுக்காரனை பற்றி, அபூர்வ பிறவி பற்றி, வேலூரில் ஏ.சி.எஸ்தான் ஜெயிப்பார் போன்ற மாய பிம்பங்களை உருவாக்குகிறார்கள்.
சூர்யா கொடுத்த பில்ட் அப்பில் இன்னொரு அபத்தமும் உள்ளது.
50 ஆண்டுகளில் முதல் முறையாக கை சின்னத்துக்கு வாக்களிக்க முடியாமல் பரிதவித்ததாக சொல்லியுள்ளதுதான் உடான்ஸ்.
1977 பொதுத்தேர்தல் வரை இந்திரா காங்கிரஸ் கட்சியின் சின்னம் "பசுவும் கன்றும்" அத்தேர்தலில் தோற்று 1978 ல் கர்னாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியில் இந்திரா அம்மையார் போட்டியிட்ட போதுதான் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக "கை" சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது நடந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலின் போது எம்.ஜி.ஆர் பாடலான "இது நாட்டைக்காக்கும் கை" பாடல்தான் அப்போது நான் படித்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில் சாலைகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சோனியா காந்தி முதல் முறையாக 1980 பொதுத்தேர்தலில்தான் கைச்சின்னத்தில் வாக்களித்திருப்பார். அப்படிப்பார்த்தால் 44 வருடங்கள்தான்.
50 என்பது தாக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பொய்.
இப்படி சொல்லப்படும் பொய்களை சிலர் நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
இவனுக்கெல்லாம் எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை. கூசாமல் எப்படி பொய் சொல்வது என்று ஆராய்ச்சி செய்து டாகடரேட் வாங்கியிருப்பானோ? விபரம் தெரிந்தால் வேறு சில பொய்யர்கள் கூட டாக்டராகி விடுவார்கள்.
மோடி இப்போது உதிர்த்த முத்து கீழே உள்ளது.
மோடி சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதே கிடையாதா?
குஜராத் முதல்வராக இருந்த போது
கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை “காரின் சக்கரத்தில் அடிபட்ட நாயின் மகன்கள்” என்றார்
அகதிகள் முகாம்களை “குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை” என்றார்.
பிரதமரான பின்பு
உத்தரப்பிரதேசத் தேர்தலின் போது . . .
“கபர்ஸ்தான்கள் (இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடம்) மின் வசதியோடு ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது, ஆனால் நம் கோயில்களில் இருள்தான் இருக்கிறது” என்றும்
“இந்த ரயில் விபத்தை எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் திட்டமிட்டு இங்கே உள்ளவர்கள் செய்தார்கள்” என்றும் பேசினார்.
இதோ இந்த தேர்தலில்
காங்கிரஸ்
ஆட்சிக்கு வந்தால் குழந்தை ராமர் கோயிலுக்கு பாப்ரி மசூதி பூட்டு போட்டு பூட்டி விடுவார்கள்.
மோடியின் நாக்கு மட்டுமல்ல, அழுக வேண்டிய அயோக்கியர்களின் நாக்குகள் இன்னும் நிறையவே இருக்கிறது.
"ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கில பொய் சொல்லக்கூடாது" என்ற கவுண்டமணி வசனத்துக்கு பொருத்தமான பொய் கீழே உள்ளது.
பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் தொகுத்த மோடியின் டாப் 100 பொய்களில் கடைசி 25 பொய்கள்.
முதல் 75 பொய்களையும் பின்வரும் இணைப்புக்கள் மூலம் சென்று அறியவும்.
இன்னொரு இருபத்தி ஐந்து பொய்கள் - மோடியுடையதுதான்
இவை டாப் 100 பொய்கள் மட்டுமே. இதைத்தாண்டியும் ஏராளமாக உண்டு. ஏனென்றால் அந்தாள் வாயைத் திறப்பதே பொய் சொல்லவும் வெறுப்பை கக்கவும்தான்.
இப்படி ஒரு பொய்யன் இனியும் வேண்டுமா? இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இந்தியாவை பாதுகாப்போம்.