Showing posts with label போலீஸ் அராஜகம். Show all posts
Showing posts with label போலீஸ் அராஜகம். Show all posts

Monday, April 6, 2026

போலீஸிற்கு மரண பயத்தை கொடுத்த தீர்ப்பு

 


மிகவும் கேவலமாக இன்று பேசிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த மிகப் பெரிய அராஜகச் செயல்களில் ஒன்று சாத்தான்குளம் லாக்கப் கொலைகள்.

ஜெய்பீம் படத்தில் காண்பித்த போலீஸ் சித்திரவதைகள் எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது போலத்தான் சாத்தான்குளம் சம்பவம் அமைந்திருந்தது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கூடாது என்ற கொள்கை நிலையில் பார்க்கும் போது மரணம் வரை சிறைத்தண்டனை என்று கொடுத்திருக்கலாம். இறுதித் தீர்ப்பில் ஒரு வேளை மரண தண்டனை குறைக்கப்படலாம்.

ஆனாலும் இத்தீர்ப்பு

தன் ஸ்டேஷனுக்கு வருபவர்களை மனிதராக மதிக்காமல் மிருகத்தனமாக சித்திரவதை செய்யும் போலீசாருக்கு மரண பயத்தை அளித்துள்ளது.

இனியாவது இன்னொரு லாக்கப் மரணம் நடக்காமல் இருக்கட்டும். இத்தீர்ப்பு கெட்ட போலீஸிற்கு அச்சத்தை அளிக்கட்டும். 


Tuesday, November 4, 2025

பெருமிதமாக உள்ளது சுவாமி

 














மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு வெளியிட்ட அறிக்கையையும் அதன் பின் ஒரு காணொளியையும் முதலில் பாருங்கள்.

புழுதிவாக்கம் நியூ இந்து காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தனலட்சுமி - சுரேஷ் இணையரின் மகள் நித்திஷா (11 வயது) புழுதிவாக்கம் சென்னை மாநாகராட்சி ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
09.10.2025 அன்று மாணவி நித்திஷா பேனாவிலிருந்து இங்க் தரையில் தெளித்ததை பார்த்து கோபம் அடைந்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி தரை துடைக்கும் மாப் கட்டையால் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் கை, கால் வீக்கமடைந்தது. கடுமையான தலைவலி இருந்தது. முதலில் புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் (பிரதீப் மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டிருந்தார். சி.டி ஸ்கேன் எடுத்ததில் தலையில் உள் பகுதியில் இரத்தக்கசிவு இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் மடிப்பாக்கம் S7 காவல் நிலையத்தல் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர் 23.10.2025 முதல் 26.10.2025 வரை கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கலைஞர் மருத்துவமனையிலிருந்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் செய்து பின்னர் அது மடிப்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் புகாரின் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்னரே குற்ற எண்ணில் - 1105 / 2025 முதல் தகவல் அறிக்கை (FIR) 26.10.2025 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) சட்டத்தின் பிரிவு 118(1)(b) மற்றும் சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2015 (JJ Act) பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. நாம் வலியுறுத்தியும் காவல்துறை மறுத்துவிட்டது.
எனவே இவ்வன்கொடுமையைக் கண்டித்தும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரியும் 30.10.2025 அன்று கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரிய போது, குறிப்பிட்ட இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. வேறொரு இடத்தில் 03.11.2025 அன்று கண்டன கூட்டம் நடத்த மீண்டும் கோரிய போது அற்பத்தனமான காரணத்தை கூறி மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. யாருக்கோ விசுவாசமாக நடந்து கொண்ட காவல்துறை இயக்கம் நடத்த அனுமதி மறுத்ததையடுத்து, தடையை மீறி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை அராஜகமாக இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைது செய்துனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சித்ரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.ஆனந்த் சிபிஐ எம் மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இரவு 8 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கும்போது, வேறொரு நாளில் அனுமதி கோரியிருந்தால் நாங்கள் அனுமதி கொடுத்திருப்போம். இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது என்று காவல்துறை துணை ஆணையர் கூறினார். வேறொரு தேதியில் மீண்டும் அனுமதி கோருவோம், நீங்கள் அனுமதி கொடுங்கள் என்று கூறினோம். (மைக் வைத்து மக்களுக்கு இவர்களின் லட்சனத்தை சொல்லவேண்டாமா).
அய்யோ, அதெல்லாம் முடியாது. அதுதான் இன்று மறியலே செய்துவிட்டீர்களே. பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டீர்களே என்றார். நாங்கள் மறியல் செய்ய வரவில்லை. சாலையின் ஓரமாக மக்களுக்கு பாதகம் இல்லாமல் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது வகையில் கூடிய எங்களை சாலைக்கு விரட்டியது உங்களின் அணுகுமுறைதான் என்று கூறிவிட்டு வந்துள்ளோம்.
எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு கடிதம் அனுப்புங்கள், அவர்கள் சொல்லட்டும் அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்றார். ஆணையங்களுக்கு மனு கொடுப்பது உங்கள் உரிமை என்றார். மனு போடுவது மட்டுமல்ல போராடுவதும் எங்கள் உரிமைதான் என்று தெரிவித்தோம்.
#மடிப்பாக்கம் காவல்துறையின் இத்தகைய அராஜகத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியை இந்திராகாந்தி மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.


இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதும் காவல்துறையோடு களத்தில் மோதியதும் எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் (முதல் இரண்டு படங்களில் போலீஸுடன் மோதுபவர்) என்பது ஒரு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினராக எனக்கு மிகவும் பெருமிதம் அளிக்கிறது.

வார்த்தைகளோடு நிற்காமல் களத்திலும் . . .

இச்சம்பவம் காவல்துறையை நோக்கி சில கேள்விகளை எழுப்பத் தூண்டியது. அக்கேள்விகள் தனி பதிவாக . . .

Thursday, August 14, 2025

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் முதல்வர்

 


என் பெயர் ஸ்டாலின், நான் ஒரு பாதி கம்யூனிஸ்ட் என்று முதல்வர் சொல்லலாம். அந்த மீதி முதலாளித்துவவாதிதான் தொழிலாளர்கள் பிரச்சினையில் செயல்படுகிறார் போல . . .

முதலில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டம். கடுமையான போராட்டம் காரணமாக அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அடுத்து சாம்சங் பிரச்சினையில் முதலாளியின் பிரதிநிதியாய் அரசின் அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறு வழியின்றி சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இப்போது துப்புறவுப் பணியாளர்கள் பிரச்சினையில் தேவையற்ற ஈகோ காரணமாக தீர்வைக் காணாமல் போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவி விட்டு உழைக்கும் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்றெல்லாம் பட்டியல் போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகும்.

மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கு அவரே போடும் முட்டுக்கட்டைகள் என்று முதல்வர் எப்போது உணரப் போகிறாரோ?

திமுக தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால் மைத்ரேயன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மட்டுமல்ல, சேகர்பாபுவை தள்ளி வைப்பதும் மிக முக்கியம். 

Tuesday, July 15, 2025

முதல்வருக்கே இப்படியென்றால் ???

 


காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரில் மன்னராட்சி நடைபெற்ற போது போராடிய மக்கள் மீது அரசு நடத்திய தாக்குதலில் இறந்து போனவர்கள் தியாகிகளாக கிட்டத்தட்ட 94 ஆண்டுகளாக மதிக்கப் பட்டு அவர்கள் நினைவு நாளன்று அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

அப்படி அஞ்சலி செலுத்த ஓமர் அப்துல்லா நேற்று அந்த கல்லறைத் தோட்டத்திற்கு சென்ற போது கதவுகள் அடைக்கப்பட்டு அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அவர் சுவரேறி குதித்து உள்ளே சென்றுள்ளார்.

ஒரு முதலமைச்சர் மீதே துணை நிலை ஆளுனரும் காவல்துறையும் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமென்றால் காஷ்மீர் மக்களின் நிலை என்ன?

காஷ்மீர் தேர்தலில் அடி வாங்கிய பின்பும் மோடி வகையறா, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. காஷ்மீருக்கு நடப்பது நாளை நமக்கு வராதா என்ன?

சிந்திப்பீர், காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுப்பீர் . . .

Tuesday, August 8, 2023

போலீஸ் சீருடை காவி கலரா?

 

தமிழ்நாட்டு போலீஸில் சங்கிகள் ஆழமாக ஊடுறுவியுள்ளார்கள். மகாத்மா காந்தி நினைவு நாள் கூட்டத்தில் அவரை கொன்றது கோட்சே என்று சொல்லக் கூடாது என ஒரு போலீஸ் அதிகாரி கோவையில் தோழர் ஜி.ராமகிருஷ்ணனோடு மல்லுக்கு நின்றது நினைவில் உள்ளதா?

அதே போல இரண்டு சம்பவங்கள் நேற்று நடந்துள்ளது/

ஈரோடு புத்தக விழாவிற்குள் “இந்துத்துவ பாசிசம்- வேர்களும் விழுதுகளும்”  என்ற நூலையும் “அர்த்தமற்ற இந்து மதம்”  என்ற இரு நூல்களை புத்தக விழாவில் விற்கக்கூடாது என்றும் விளம்பரப் பதாகையைக் கூட  வைக்கக்கூடாது என்றும் ஒரு போலீஸ் ஆய்வாளர் கலாட்டா செய்துள்ளார்

சென்னை புளியந்தோப்பு ஸ்டேஷன் ஆய்வாளரோ “இங்கே ராமராஜ்யம்தான் நடக்கும். பிடிக்கவில்லையென்றால் பாகிஸ்தானுக்கோ சவுதிக்கோ போய் விடு” என்று பேசியுள்ளார்.

தமிழ்நாட்டு காவல்துறைக்குள் காவியாடுகள் ஊடுறுவியுள்ளது என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.  இது மிகவும் ஆபத்தானது. ஆட்டுக்காரன், ஹெச்.ராசா போன்றவர்கள் போல காவல்துறை நடந்து கொண்டால் தமிழ்நாட்டில் அமைதி நிலவுமா?

திருப்பூர் அதிகாரி மாற்றல் செய்யப்பட்டுள்ளார். புளியந்தோப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது போதாது.

அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதை விட முக்கியமாக காவல்துறைக்குள் ஊடுறுவியுள்ள காவியாடுகளை அரசு கண்டறிந்து பிரியாணி போட்டு விட வேண்டும்.

Wednesday, May 10, 2023

காலையிலேயே கடுப்பேற்றிய மாலன்

 


கவிஞர் விடுதலை சிகப்பி மீது பொய்வழக்கு: கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் - தமுஎகச மாநிலக்குழு

மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்தொழிவதற்கென்றே ஒருசில சாதிகளை கடவுள்கள்தான் படைத்தனரென சொல்லப்பட்டால், அந்தக் கடவுளர்கள் ஒருநாள் இறங்கி, அந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாய் உணரட்டும் என்கிற மெய்யாவேசத்துடன் எழுதப்பட்டதுதான் விடுதலை சிகப்பியின் கவிதை. ஆனால் இக்கவிதை கடவுள்களை அவமதித்துவிட்டதாகவும் தங்களது மனதை புண்படுத்திவிட்டதாகவும் திரித்து பாரத் இந்து முன்னணி என்கிற அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத்தலைவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பொய்ப்புகாரளித்துள்ளார். கலை இலக்கிய வெளிப்பாடுகள் பற்றிய நீதிமன்றத் தீர்ப்புகளின் வெளிச்சத்தில் இந்தப் புகாரின் மெய்த்தன்மையை சரிபார்க்காமல் அவசரகதியில் விடுதலை சிகப்பியின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதற்கு தமுஎகச கண்டனம் தெரிவிக்கிறது.
“ஆபாசத்தை மதிப்பிடும் நோக்கத்திற்கு, அவ்வாறு மதிப்பிடுபவர், முதலில் படைப்பாளி உன்மையிலேயே எதைச் சொல்லவருகிறார் என்பதை உணர, படைப்பாளியின் தரப்பில் நின்று அதைப் பார்த்த பிறகு, அதைப்படிக்கும் வாய்ப்புள்ள ஒவ்வொரு வயதுப்பிரிவைச் சேர்ந்த வாசகரின் நிலையில் நின்று அதைப் பார்த்துவிட்டு, அதன்பிறகே விருப்புவெறுப்பற்ற ஒரு முடிவிற்கு வர வேண்டும்” என்கிறது சமரேஷ் போஸ் (எதிர்) அமல் மித்ரா (1985) 4 எஸ்.சி.சி.289 என்ற வழக்கின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் கருத்தை ஏற்றுத்தான், இந்துக்களால் வணங்கப்படும் ஆண் பெண் தெய்வங்களை எம்.எஃப்.ஹூசைன் தனது ஓவியங்களால் அவமதிப்பதாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட ‘மக்பூல் ஃபிடா ஹூசைன் (எதிர்) ராஜ்குமார் பாண்டே, 2008 குற்.எல்.ஜே.4107 என்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பெருமாள் முருகன் மீதான வழக்கின் தீர்ப்பிலும் இத்தீர்ப்பு வழிகாட்டலாக எடுத்தாளப்பட்டுள்ளது.
‘நாவலைப் படித்த பிறகு வாசகரின் நெஞ்சைத் தொடும் விசயம் என்ன?’, ‘…அதன் உண்மையான கருத்தோட்டம், கதைக்கரு ஆகியவற்றின் மூலமே இந்த நாவலைப் புரிந்துகொள்ள வேண்டும். உரையாடல்களை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ள மண்சார்ந்த மொழி அல்லது மேலும் அதிகமான வசைச்சொற்களை பயன்படுத்தியுள்ளதைக் வைத்துக்கொண்டே நூலாசிரியரிடம் சண்டையிழுக்க முடியாது’ என்று பெருமாள்முருகன் மீதான வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்து விடுதலைசிகப்பியின் கவிதைக்கும் பொருந்தும். ஆனால் இந்தத் தீர்ப்புகளுக்குப் புறம்பாக அபிராமபுரம் காவல்துறையினர் விடுதலை சிகப்பியின் மீது பதிந்துள்ள வழக்கினை தமிழ்நாடு அரசு ரத்துசெய்ய வேண்டும்.
பாகுபாடும் ஒடுக்குமுறையும் கொண்ட தங்களது கருத்தியலுக்கு எதிரான விமர்சனங்கள் வெளிப்படுவதைத் தடுப்பதற்காக ‘மனம் புண்பட்டுவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு வரும் சனாதனக்கும்பலின் அரசியல் அழுத்தங்களுக்கு காவல்துறையினர் பணிந்துவிடாதபடி தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும். மேலும் “கருத்துகள் தொடர்பாக உருவாகும் இத்தகைய மோதல்களால் உருவாகும் நிலைமைகளை சமாளிக்கும் வகையில் நிபுணர்கள் குழு ஒன்றை அரசு உருவாக்க இதுவே சரியான தருணமாகும். படைப்பிலக்கியம், கலை போன்ற துறைகளைச் சேர்ந்த தகுதியான நபர்களைக் கொண்டதாக இந்த நிபுணர்கள் குழு இருக்க வேண்டும்” என்று பெருமாள் முருகன் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட குழுவை தமிழ்நாடு அரசு உடனே அமைக்கவேண்டும் என்று தமுஎகச கோருகிறது.
இவண்
மதுக்கூர் இராமலிங்கம் Mathukkur Ramalingam மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா Aadhavan Dheetchanya
பொதுச்செயலாளர்
09.05.2023

மேலே உள்ள தமுஎகச அறிக்கையுடன் நான் முழுமையாக உடன் படுகிறேன். காவல்துறை காவித்துறையாக மாறிக் கொண்டிருப்பதை முதல்வர் கட்டுப்படுத்தாவிட்டால் அரசுக்கு தொடர்ந்து களங்கம் நேரும்.

நிற்க

இந்த அறிக்கையை பகிர்ந்து கொண்ட ஒரு தோழரது பக்கத்தில் மூக்கை நுழைத்து மூத்த்த்த வியாபாரி மாலன் ஒரு பதில் கொடுக்க, காலை கணிணியை இயக்கி முக நூலுக்கு வந்த என் கண்ணில் பட சூடாக பதிலும் கொடுத்து விட்டேன்.




இவரு, புளிச்ச மாவு எல்லாம் எத்தனை அடி வாங்கியும் திருந்தாத ஜென்மங்கள்.

Tuesday, April 25, 2023

நான் அனுப்பி விட்டேன். நீங்கள்?


மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் கீழே உள்ளது. அனைத்தும் விபரமாக உள்ளது. நான் அனுப்பியது போல நீங்களும் shrc.tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மாநில முதல்வர் ஆளுனருக்கு எதிராக பேசுகிறார். சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார். ஆனால் மாநில காவல்துறை ஆட்டுத்தாடிக்கு காவடி எடுக்கிறது.

இதென்ன முரண்பாடு!




 


*பெறுநர்*
மாநில மனித உரிமைகள் ஆணையம்
திருவரங்கம்,
143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
(கிரீன்வேஸ் சாலை),
சென்னை 600 028, தமிழ்நாடு.
அய்யா

பொருள் : *தஞ்சை தமிழ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் SFI மாநில தலைவர் அரவிந்தசாமியை தன்னுடைய பட்டத்தை பெறவிடாமல் இழுத்துச் சென்று தனியறையில் பூட்டி விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக*
வணக்கம்.
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தலைவர் கோ.அரவிந்தசாமி, 27 வயதுடைய இவர் தன்னுடைய ஆய்வில் நிறைஞர் (M.Phil) படிப்பை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடித்தார். அதற்கான பட்டமளிப்பு விழா 24/04/23 (திங்கள்கிழமை) அன்று பல்கலைக்கழக கரிகால சோழன் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்து மாணவர்களும், காலை 8 மணிக்குள் அரங்கத்திற்குள் வரவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் அரவிந்தசாமியும் நீல நிற சட்டையும் வெள்ளை நிற கால் சட்டையும் அணிந்து கொண்டு சக மாணவராக பங்கேற்றார். காலை 9:35 மணியளவில் எஸ்பி திரு ஆசிஸ்ரேவத் அவர்களின் எஸ்.பி.சி.ஐ.டி உளவு பிரிவைசார்ந்த ஐந்து காவலர்கள் (நேரில் அவர் பார்த்தால் அடையாளம் கூடிய) அவரது பெயரை விசாரித்து தலைமுடி சட்டைப்பை அனைத்தையும் சோதனை செய்துவிட்டு சென்றனர். பிறகு 9:40 மணியளவில் மீண்டும் அதே எஸ்.பி.சி.ஐ.டியின் உளவு பிரிவைசார்ந்த வேறு 5 காவலர்கள் அவரது கை குட்டையை எடுத்து உதற சொல்லி முதுகு பக்கம் இடுப்பில் எல்லாம் சோதனை செய்துவிட்டு சென்றனர்.

பிறகு மண்டல சரக டிஐஜி திரு ஜெயச்சந்திரன் காவல் அதிகாரியின் தனிப்பிரிவு காவல் துறையினர் கும்பலாக (நேரில் அவர் அடையாளம் செய்யக்கூடிய) வந்து அவரை வலுகட்டாயமாக வெளியே இழுத்துச் சென்று மின்சாரம் இயந்திரம் வைத்திருக்கும் *மின்சார அறையின் உள்ளே வைத்து பூட்டி சோதனை என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பட்டமளிப்பு விழா அங்கி கோட்டை கழட்டச் சொல்லி பிறகு சட்டை கழற்றச் சொல்லி பேண்டை முழங்கால் வரை இறக்கச் சொல்லித் அவரது உள்ளாடைகள் எல்லாம் தூக்கி சோதனை என்ற பெயரில் அரை நிர்வாணப்படுத்தினர். கருப்பு உள்ளாடையும் கருப்பு மேல் பனியனும் அணிந்திருந்ததால் அதைப் பார்த்தும் அதையும் கழற்றச் சொல்லி இருக்கின்றனர். கடும் அதிர்ச்சியுற்ற அவர் இதற்கு மேலும் முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் விட்டுச் சென்றனர், பிறகு மேலும் தொடை மற்றும் பின்புறம் அனைத்து இடங்களிலும் கையை வைத்து அழுத்தி அநாகரிகமான முறையில் சோதனை என்ற பெயரில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். எவ்வளவு முறையிட்டும் இத்தகைய சோதனையைத் தொடர்ந்து நடத்தினர்.*

பிறகு அதே மின்சார அறைக்குள் அமர வைத்துவிட்டு காவல் துறையினர் வெளியே காவலுக்கு நின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்து வெளியே செல்லும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரைப் பார்த்து 'தோழர் என்ன ஆச்சு??'' என்று விசாரித்த போது ''தோழர்'' என்று அழைத்த மாணவர்களையும் பிடித்து ''உனக்கும் அரவிந்திற்கும் என்ன தொடர்பு? நீ யார்? என்ன?'' என்ற விசாரணையை நடத்தினர். பிறகு மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அஞ்சி கலைந்து சென்றனர். பிறகு மண்டல சரக காவல் அதிகாரிகளின் தனிப்பிரிவு காவல்துறை தஞ்சைநகர காவல் நிலைய காவலர்களிடம் அவரை ஒப்படைத்துவிட்டு அவர்கள் சென்றனர். *தஞ்சை நகர் காவலர்கள் அவர்களது வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் தஞ்சை பகுதியில் சுற்றி பிறகு ஒரு மணிக்கு மேல் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் அதேபோல் காவல்துறைக்கு மத்தியில் அமர வைத்திருந்தனர், சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றால் கூட மூன்று காவலர்கள் அவரது அருகே அனுப்பி சிறுநீர்கழிக்கும் வரை அருகிலேயே இருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.*

இப்படி விசாரணை என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமைகளும் இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் மனரீதியாக மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி அவரை மட்டுமல்லாமல் அவரோடு வந்த உறவினர்கள், குடும்பத்தினர்கள் அனைவருக்கும் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட ஐஜி, டிஐஜி, எஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட காவல் அதிகாரிகள், தஞ்சாவூர் காவலர்கள் மீது உடனடியாக மனித உரிமை மீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு,
எஸ்.ராமன், வேலூர்

Monday, April 17, 2023

மொட்டைச் சாமியாரின் உதிரப் பிரதேசம்

 





 

உதிரப் பிரதேசம் என்று பொருத்தமாகச் சொன்ன ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனுக்கு முதலில் நன்றி.

 

மொட்டைச்சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் இது நாள் வரை பாலியல் குற்றங்களின் தலைமை மாநிலமாக இருந்தது. இப்போது கொலைகளின் தலைமையிடமாக மாறி விட்டது.

 

அலகாபாத்தில் நீதிமன்ற  வளாகத்திற்குள் காவலர்கள் புடை சூழ ஊடகக்காரர்களோடு பேசிக் கொண்டிருந்த இருவர் (அவர் முன்னாள் எம்.பி யாக இருக்கட்டும், 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை கொண்ட  கிரிமினலாக இருக்கட்டும். அதற்கான தண்டனை கொடுக்கும் அதிகாரம் போலீசுக்கோ முதலமைச்சருக்கோ கிடையாது என்பதை புரிந்து கொண்டு மேலே படிக்கவும்) கோர்ட் வாசலிலேயே சுடப்படுகிறார். அவரது சகோதரரும் சுடப் படுகிறார். இருவரும் அங்கேயே இறக்கிறார்கள்.

 

இந்த கொலை போலீஸ் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து நடந்த கொலை.

 

ஏன்?

 

பிப்ரவரி மாதத்தில்  உமேஷ் பால் என்ற வக்கீல் கொல்லப்படுகிறார். அலகாபாத் கோர்ட் வளாகத்தில் கொல்லப்பட்ட அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் முதல் குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜூ படேல் என்பவரது பத்தாண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் இந்த உமேஷ் பால்தான் முக்கிய சாட்சி.

 

உமேஷ் பால் கொலை வழக்கில் போலீஸ் பத்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்கிறது. பத்து பேரில் ஏழு பேர் கொல்லப்பட்டு விட்டனர். தலை மறைவாக இருப்பதால் மீதமுள்ள மூவர் தலை இதுவரை தப்பியுள்ளது.

 

இது மட்டுமல்ல காரணம்.

 

இதற்கு முன்பு அதிக் அகமதுவை பகல் வேளையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடோடு மருத்துவமனைக்கு கூட்டி வரும் போலீஸ் இம்முறை இரவு நேரத்தை தேர்ந்தெடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பலவீனம் இருந்துள்ளது.

 

பாதுகாப்புக்கு இருந்த போலீசும் கொலை செய்தவர்களை சுடவில்லை. கொலை செய்தவர்களும் போலீசை சுடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் ?

 

கொலை செய்தவர்கள் என்ன காரணம் சொல்லி இருக்கிறார்கள்?

 

இவர்களை கொன்றால் கிரிமினல் உலகில் பெரும் புகழ் பெற்று தங்களுக்கென்று ஒரு இடத்தை பெறலாம் என்று திட்டமிட்டார்களாம்.  பிறகு ஏன் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்யாமல் மாட்டிக் கொண்டார்கள்?

 

மொத்ததில் மொட்டைச் சாமியார் நீதிபதி வேடம் போட்டு தண்டனையை அவரே கொடுத்து விடுகிறார்.

 

புல்டோசராக இருந்த அவரது ஆயுதம் இப்போது துப்பாக்கியாக மாறி உள்ளது.

 

Thursday, April 6, 2023

வேண்டுகோளா? மிரட்டலா ஐ.பி.எஸ் தலைவரே?

 




கீழே உள்ளது ஐ.பி.எஸ் ஆபிசர்கள் சங்கத்தின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவராக உள்ள டி.ஜி.பி ஆபாஷ்குமார், ஐ.பி.எஸ் ஸின் அறிக்கை.




பல் பிடுங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சிங் பற்றி விசாரணை நடப்பதால் ஊடகங்கள் அவரைப் பற்றி எந்த முன் முடிவுடனும் செய்திகள் வெளியிடக் கூடாது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

சக ஐ.பி.எஸ் அதிகாரி என்றதும் பாசம் பீறிட்டு வருகிறது. விசாரணை எல்லாம் தொடங்கும் முன்பே பல வழக்குகளில் போலீசே நீதிபதிகளாக மாறி தண்டனை கொடுப்பதைத் தான் நாம் பார்த்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை தப்புவிக்க அப்பாவிகளை சிக்க வைப்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் தங்களில் ஒருவர் தவறிழைத்தவுடன், அவருக்காக எப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள் பாருங்கள்!

இந்த அறிக்கை ஊடகங்களுக்கான வேண்டுகோளா இல்லை விசாரணை செய்பவர்களுக்கான மிரட்டலா?

பிகு: காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி கிடையாது. ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி அனுமதி?

Sunday, April 2, 2023

பொய் வழக்கு போலீஸுக்கு ஜெயில்

 


மூன்று நாட்கள் முன்பு வந்த ஒரு தீர்ப்பு  ஊடகங்களின் கவனத்திற்கு ஏன் பெரிதாக வரவில்லை என்று தெரியவில்லை.

மே, 2008 ல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் ஒரே சமயத்தில் ஏழு இடங்களில் வெடிகுண்டு வெடித்து எண்பது பேர் இறக்கிறார்கள்.

மூன்று மாதம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விமர்சனம் வர தேர்தலும் நெருங்கியதால் ஐவர் கைது செய்யப்படுகின்றனர்.

2019 ல் அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட, ஒருவருக்கு மரண தண்ட்னையும் மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது.

மூன்று நாட்கள் முன்பாக ஜெய்பூர் உயர் நீதிமன்ற பெஞ்ச் அனைவரையும் விடுதலை செய்து விட்டது. முற்றிலுமாக போலீஸால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் அப்படி செய்த போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அப்போது ராஜஸ்தான் முதல்வர் பாஜகவின் வசுந்தரா ராஜி சிந்தியா.

கைது செய்யப்பட்டு இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன!

பிரக்யா தாகூர் போன்ற வெடிகுண்டு சாமியார்களின் கைவரிசையாக இருந்திருக்குமோ, அதனால்தான் பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையோ என்று சந்தேகமும் வருகிறதே!

Friday, August 19, 2022

ரஜினியே மன்னிப்பு கேள்

 


சமூக விரோதிகள் உள்ளே நுழைந்த காரணத்தால்தான் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும் என்று சொன்னார் சங்கிகளின் கைப்பாவை ரஜினிகாந்த். 

“[T]here is no material on record to show that it was only to deal with a militant crowd of protesters that the opening of fire was resorted to”. She has also stated that the firing was “unprovoked”.

According to the report, the police “had fired on the fleeing protesters...”. It further says: “Here is a case of police indulging in shooting from their hide-outs at the protesters who were far away from them.” The report makes it clear that the protesters were unaware of where and which direction the bullets were coming from, resulting in total chaos, destruction, and death.

எந்த முகாந்திரமும் இல்லாமல்தான் போலீஸ் சுட்டது என்றும் கலெக்டர், எஸ்.பி உட்பட பல அதிகாரிகள் மீது நடவரிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. 

போராடியவர்கள் மீது அபாண்டமாக பழி போட்ட ரஜினியே மக்களிடம் மன்னிப்பு கேள்


Monday, July 18, 2022

கள்ளக்குறிச்சி கலவரம்- காவல்துறையின் கையாலாகததனம்

 


பள்ளி மாணவியின் கொலை தொடர்பான சர்ச்சை கலவரமாக வெடிக்க காவல்துறையின் கையாலாகததனமே முக்கியக் காரணம்.

பிரச்சினை வந்த உட்னேயே தொடர்புடையவர்களை கைது செய்திருந்தால் இவ்வளவு தூரம் பெரிதாகி இருக்காது.

அப்பள்ளி முதலாளி சங்கி ஆள் என்பதால் போலீஸ் வேடிக்கை பார்த்ததா என்பதுதான் முதல் கேள்வி.

இரண்டாவதாக இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப் பெரிய சந்தேகம் கலவரக்காரர்களில் சங்கிகள் ஊடுறுவி முக்கியமான ஆவணங்களை கலவரத்தின் பெயரில் அழித்தார்களா என்பதுதான்.

சங்கிகள் எப்படிப்பட்ட கேவலத்தையும் செய்வார்கள்.

இதே கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி, அது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியா இல்லை செவிலியர் பயிற்சிப் பள்ளியா என்பது நினைவில்லை. மூன்று மாணவிகளின் சடலங்கள் ஒரு கிணற்றில் மிதந்தன. அந்த பள்ளி முதலாளியம்மா, பொன்னாரை சந்தித்து பாஜகவில் இணைந்ததும் போலீஸ் அந்த வழக்கை மூடி விட்டது.

எனவே இப்போது நடந்துள்ள அனைத்திற்கும் முதல் பொறுப்பு போலீஸ் உடையதுதான். அழுகிப் போன ஈரல் அறுவை சிகிச்சை மூலம் மாற்றப் பட வேண்டும். 

Monday, May 23, 2022

புல்டோசர் போலீஸ்காரர்கள்

 


அஸ்ஸாமில் ஒரு லாக்கப் மரணம். போலீஸ் ஸ்டேஷனை கொல்லப்பட்டவரின் உறவினர்களும் நண்பர்களும் அப்பகுதி மக்களும் முற்றுகை இடுகின்றனர். போலீஸோடு தள்ளுமுள்ளூ ஏற்படுகிறது. அதிலே யாரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைக்கிறார்கள். தீ அணைக்கப்பட்டு விட்டது. சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று வாகனங்களுக்கு எப்படி போலீஸார்களே தீ வைத்தார்களோ அது போல, போலீஸே தீ வைத்திருக்க்லாம் என்பது மக்களின் சந்தேகம்.

மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தவர்கள் என்று சிலரது வீடுகளை போலீஸே புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கி விட்டது.

அதெப்படி பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் வீடுகளை இடிக்கும் அதிகாரம் போலீசாருக்கு இருக்கிறது?

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று போலீஸ் சந்தேகப்படுபவர்களின் வீடுகளை எந்த விசாரணையும் இல்லாமல் இடித்துத் தள்ளலாம் என்று ஏதாவது புதிய சட்டம் வந்துள்ளதா என்ன?

இந்த அராஜகத்தை எல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளாதா?

பேயரசு ஆட்சியில் பிணங்களை தின்பதைத் தவிர வேறென்ன நடக்கும்!

 

Tuesday, March 29, 2022

கர்னாடகா - வெறியர்களின் மாநிலமா?

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழை புரட்டிய போது "முதோல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பெண்ணிற்கு எந்த வழக்கறிஞரும் உதவக் கூடாது என இந்த்த்துவ அமைப்புக்கள் கூறியுள்ளது" என்ற செய்தியை படித்தேன்.

அப்படி என்ன பெரும் தவறை அவர் செய்து விட்டார் என்று தேடிப்பார்த்தால் 

23 ம் தேதி அன்று குத்மா ஷேக் என்ற பெண்மணி தன் வாட்ஸப் ஸ்ட்டேட்டஸில் "அனைத்து நாடுகளிலும் அமைதியும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவ கடவுள் அருள் புரியட்டும்" என்று வைத்துள்ளார்.

23ம் தேதி பாகிஸ்தான் குடியரசு தினம். அதற்குத்தான் அவர் வாழ்த்து சொல்லி உள்ளார் என்று அருண் குமார் பஜான்ட்ரி  எனும் சங்கி காவல் நிலையத்தில் புகார் செய்ய. "மதத்தின், இனத்தின் அடிப்படையில் பிரிவினையை தூண்டியது, இரு குழுக்களுக்கு இடையே மோதலை தூண்டியது"  ஆகிய இரு பிரிவுகளில் அந்த 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது ஸ்டேட்டஸிகும் காவல் துறை பதிவு செய்த குற்றச்சாட்டுக்களும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

பாகிஸ்தான் குடியரசு நாளுக்கு வாழ்த்து சொன்னதாகவே இருக்கட்டும். அது என்ன சட்ட விரோதமா? 

இந்தியாவில் யாருமே அடுத்த நாட்டின் சுதந்திர தினத்துக்கோ, குடியரசு தினத்துக்கோ வாழ்த்து சொன்னதே இல்லையா? இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டத்திற்கே வெளி நாட்டுத் தலைவரை அழைத்துத்தானே மகிழ்கிறோம்!

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் மென் பொருள் நிறுவனங்கள் விடுமுறையே அளிக்குமே!

கர்னாடகா மத வெறியர்களின் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

முதலில் ஹிஜாப் பிரச்சினை. 

பிறகு கோவில் திருவிழாக்களில் மாற்று மதத்தினர் கடை போட தடை.

இந்த முட்டாள்தனம் மூன்றாவது சம்பவம்.

பரம்பரை சங்கிகளை விட பஞ்சத்துக்கு சங்கியான முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள மாநிலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார். 

பிகு 1: அந்த முதோல் என்ற ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்தமாம். சர்ச்சையை உருவாக்கிய சங்கிகளை விட, அதை ஏற்று கைது செய்த அந்த ஊர் போலீஸை விட அந்த நாய்களுக்கு அறிவு அதிகமாகவே இருக்கும். 😀😀😀😀😀😀


பிகு 2 : பிகு 1 ஐ நான் சிரிப்பு எமோஜிகளோடு சொல்லியுள்ளதால் நான் போலீஸை இழிவு படுத்தியதாக அர்த்தமாகாது. என்ன டெல்லி ஜட்ஜய்யா ரைட்டுதானே!


Thursday, February 3, 2022

காவி காக்கி களவுக் கூட்டு

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி கீழே உள்ளது.

சிலை கடத்தலுக்காக ராமநாதபுரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஏழு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு கைமாற உள்ள நிலையில் கைது நடந்துள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் போலீஸ் என்பதும் ஒரு நபர் பாஜக நிர்வாகி என்பதும்தான் முக்கியமான செய்தியே.

காக்கிகளில் உள்ள களவாணிகளுக்கும் காவிகளுக்குமான கூட்டு என்பது இயல்பானதுதான்.

என்ன அந்த பாஜக நிர்வாகியின் பெயரையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம். இல்லையென்றால் அந்த சிலை திருடனை ஆட்டுக்காரரும் ஐகோர்ட் ராஜாவும் பெரிய தியாகி ரேஞ்சிற்கு பில்டப் செய்து விடுவார்கள்.

கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறதல்லவா?

இந்த பதிவின் முகப்புக்கு எதற்கு திரிசூலம் படத்தின் டைட்டில்?

நாளை வழக்கு விசாரணையெல்லாம் வருகிற போது அய்யா மேற்கோள் காட்ட திரைப்படம் வேண்டுமல்லவா! அதனால்தான் அவருக்கு ஒரு ஸ்மால் ஹெல்ப்

Sunday, January 30, 2022

முதல்வரையும் தடுக்குமா போலீஸ்?

 

இன்று மிகவும் எரிச்சலூட்டிய நிகழ்வு கீழே உள்ளது.



இந்த போலீஸ்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்வி . . .


தமிழக முதல்வரையும் பேச விடாமல் தடுப்பீர்களா? அல்லது அவரது செய்திக் குறிப்புக்காக அவர் மீது வழக்கு பதிவீர்களா?

கோவையில் இன்னும் காக்கி, காவி நிறமாகவே உள்ளது என்பதையும் அதிகாரிகள் சங்கிகளாகவே வாழ்கின்றனர் என்பதும் தெளிவு. 

முதல்வர் உறுதியாக செயல்பட வேண்டிய தருணம் இது. 



Saturday, October 10, 2020

இதற்கென்ன நடவடிக்கை எடப்பாடி?

 


தந்தை பெரியார் சிலைக்கு மாலையிட்டார்கள் என்பதற்காக கடலூர் மாவட்டத்தில் மூன்று காவலர்களை இட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ள சங்கி பினாமி எடப்பாடியே

 






காவல்துறை சீரூடையோடு காவல் நிலையத்திற்குள்ளே பூஜை நடத்தும் காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

அதிலும் அந்த கடைசி புகைப்படத்தில் இருக்கிறாரே, அந்த மனிதர்தான் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக இட மாற்றம் எடுத்த நபர். 

இப்போது தெரிகிறதா அந்த நடவடிக்கைக்கு பின்னே ஒளிந்திருக்கும் வெறி?

 சீருடை இல்லாமல் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவிற்கான தவறென்றால் சீருடையோடு காவல் நிலையத்திற்குள்  பூஜை செய்வது அதை விட மிகப் பெரிய தவறு கிடையாதா?

 

பூஜை செய்வது அவர்கள் நம்பிக்கை என்றால் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டென்றால், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்வதென்பது அவர்கள் உரிமை கிடையாதா?

 

ஆட்சியின் இறுதிக்காலத்திலாவது சுய மரியாதையோடு இருக்க முயற்சியுங்கள். சங்கிகள் சொல்வதை கேட்டு அடிமையாக இருக்க வேண்டாம். தமிழனுக்கு சுய மரியாதையை கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் வேறு யாருமில்லை. உங்கள் கட்சிக் கொடியில் இருப்பவரின் தலைவர் . . .

 

Sunday, October 4, 2020

மொட்டைச் சாமியாருக்கு பாகுபலி காட்சி

 



மொட்டைச் சாமியார் கீழே உள்ள பாகுபலி திரைப்படக் காட்சியை தானும் பார்த்து தன் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் (குறிப்பாக சங்கிகளுக்கு) காவல்துறையினருக்கும் சிறப்புக் காட்சி நடத்திக் காண்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.




இந்த புகைப்படமும் உபியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களும்தான் அதை மூடி மறைக்க பாஜக செய்து வரும் சில்லறைத்தனங்களும் (அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்) இந்த யோசனைக்கான காரணம்.



மொட்டைச்சாமியார் மட்டுமல்ல, எந்த ஆட்சியாளரானாலும் சரி, காங்கிரஸ் கட்சியினர் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். 

Thursday, July 2, 2020

சத்தியமா விடவே கூடாது ரஜினி



சாத்தான் குளம் காக்கிக் குற்றவாளிகளை "சத்தியமா விடவே கூடாது" என்ற உங்கள் ஆவேசத்தை வரவேற்கிறேன் ரஜினி. அதுவும் முறைச்ச மாதிரி போஸ் கொடுத்து, புதுப்படம் ரிலீஸ் எதுவும் இல்லாத போதும் கருத்து சொல்ல வந்த உங்களை பாராட்டறேன்.

இத்தனை நாள் கழித்தா என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். உங்கள் சினிமாவில் காண்பிக்கும் வேகத்தை நிஜத்தில் உங்களைப் போன்ற முதியவரிடம் எதிர்பார்ப்பது தவறு என்று தெரியாதவர்கள்.

மேலும் காக்கிச் சீருடை அணிந்தவர்களை யாராவது பேசினால் தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்று உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கிய நீங்களே, இப்படி மாறியுள்ள போதும் இன்னும் சிலர் எப்படி பேசுகிறார்கள் பாருங்கள்.





ஆமாம் ரஜினி.

அவங்களையும் சத்தியமா விடவே கூடாது.

பிகு" ரஜினியின் மைன்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

நம்ம நண்பர்கள் யாரை ஆதரிக்கறாங்கன்னு தெரியாம ட்வீட் போட்டுத் தொலைச்சுட்டேனே! என்னிக்கு ரெய்டு வரப்போகுதோ?